Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்களுக்கு கொழுப்புசத்து அதிகமாக உள்ளதா? அப்போ இந்த அபாயம் உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்!
மற்ற உயிரினத்தை காட்டிலும் மனிதன் முதன்மையானதாக கருதப்படுவதற்கு முக்கிய காரணமே அவன் மூளை தான். ஆறு அறிவு இல்லையென்றால் நாமும் மற்ற ஜீவ ராசிகளை போலவே வாழ வேண்டியதாக இருந்திருக்கும். ஆனால், அவை எல்லாவற்றையும் தாண்டி மனிதன் இருப்பதற்கு காரணமே மூளை தான். நமது மூளையை மிஞ்சுவதற்கு இன்னும் சரியான முறையில் எந்தவித தொழிற்நுட்பமும் வரவில்லை.
மனித மூளை அறிவியலை காட்டிலும் முதன்மையானதாக நீண்ட காலமாக இருக்கிறது. இப்படி பலவித சிறப்பம்சங்களை கொண்ட மூளைக்கு பேராபத்தை தருவது நாம் சாப்பிட கூடிய உணவு வகைகள் தான். சாப்பிட கூடிய தரமற்ற உணவுகள் மூளையை பலவகையில் பாதிக்கும் என தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
குறிப்பாக கொழுப்புகள் கொண்ட உணவுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தீர்கள் என்றால் இதனை இனி தொட கூட மாட்டீர்கள். கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவுகளால் மூளை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.

மூளை
அதிக செயல்திறன் கொண்ட உறுப்புகளில் நமது மூளை தான் முக்கிய இடத்தில் உள்ளது. நமது உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என கட்டளை இடுவதே மூளை தான். மூளையின் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டால் நாம் கோமா நிலைக்கே சென்று விடுவோம்.

கொழுப்பு உணவுகள்
சாப்பிட கூடிய உணவுகளில் கொழுப்பு அதிகமாக இருப்பது பலர் அறிந்திராத ஒன்று. கொஞ்சம் கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் அப்படி என்ன மோசமான பாதிப்பு உண்டாகும் என பலர் கேட்பது சரிதான். ஆனால், கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் மூளை பல்வேறு மாற்றங்களை அடைந்திடும்.

எவ்வளவு கொழுப்பு?
கொழுப்பு நமது உடலில் சரிவிகிதமாக இருந்தால் நல்லது. அந்த வகையில் குழந்தைகளுக்கு 1-3 வயதிருந்தால் 19 கிராம் அளவும், 4-8 வயதிருந்தால் 25 கிராம் அளவும் இருப்பது போதுமானது. இது பெண்களுக்கும் ஆண்களுக்கும் முற்றிலுமாக மாறுபடும்.

ஆண், பெண்?
ஆண்களில் 9-13 வயதுள்ளோருக்கு 31 கிராம் அளவும், 14-50 வயதுள்ளோருக்கு 38 கிராம் அளவும், 51-70 வயதுள்ளோருக்கு 30 கிராம் அளவும், 70 வயதுக்கு மேலானோர்க்கு 30 கிராம் அளவும் இருப்பது நல்லது.
பெண்களில் 9-18 வயதுடையருக்கு 26 கிராம் அளவும், 19-50 வயதுடையருக்கு 38 கிராம் அளவும், 51-70 வயதுடையருக்கு 26 கிராம் அளவும், அதற்கு மேலுள்ளோருக்கு 21 கிராம் அளவும் இருப்பது சிறந்தது.

ஆராய்ச்சி
கொழுப்புகள் கொண்ட உணவுங்களை வைத்து செய்த ஆய்வில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கொழுப்புகள் அதிகம் கொண்ட உணவுகள் நமது உடலை முழுவதுமாக மாற்றம் பெற செய்து விடுமாம். அதிலும் குறிப்பாக மூளையின் பாதிப்பு தான் இதில் குறிப்பிடத்தக்கது.

இரத்த நாளங்கள்
மூளையின் செயல்திறனை அதிகரிக்க இரத்த ஓட்டம் சீராக இருந்தால் போதும். இரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்திருந்தால் நிச்சயம் மூளைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், இவை முழுமையாக தடையாவதற்கு காரணமே இந்த கொழுப்பு உணவுகள் தான்.

காரணம்
நாம் சாப்பிட கூடிய கொழுப்புகள் அதிகம் நிறைந்த உணவுகள் தான் நம்மை பெரிதும் பாதிக்கின்றன. இந்த வகை உணவுகளை தவிர்த்தாலே பலவித பிரச்சினைகளில் இருந்து உங்களை காத்து கொள்ளலாம்.
கொழுப்பு கொண்ட உணவுகள் நேரடியாக மூளையின் இரத்த போக்கை தான் பாதிக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. எனவே, இதனால் மூளை தனது செயல்திறனை இழக்க நேரிடும்.

பலவீனம்
கொழுப்புகள் நிறைந்த உணவுகள் உங்களின் உடலை பலவீனமாக மாற்றி விடும். இவை முதலில் மூளையின் செயல்திறனை குறைக்க செய்து, கொஞ்சம் கொஞ்சமாக மந்த நிலையை உருவாக்குகிறதாம். கிட்டத்தட்ட மோசமான பாதிப்பு இந்த வகை உணவுகளால் உண்டாகிறது என்பதே நிதர்சனம்.



Click it and Unblock the Notifications