For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைட்ரஜன் நீர் என்றால் என்ன? அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா?

சமீபகாலத்தில் நீர் பல்வேறு விதங்களிலும், புதுப்பரிமாணங்களிலும் கிடைக்கிறது. அதில் முக்கியமான மற்றும் பிரபலமான ஒன்று ஹைட்ரஜன் நீர் ஆகும்.

|

மனிதனுக்கு இயற்கை அளித்த வரம் தண்ணீர் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் மனிதகுலத்தின் உருவாக்கத்தில் இருந்து அவர்களின் வாழ்க்கை பயணம் அனைத்திற்கும் ஆதாரமாய் இருப்பது தண்ணீர்தான். இதனை வரம் என்று சொல்ல காரணம் இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் கலவைதான்.

What is hydrogen water and its benefits

சமீபகாலத்தில் நீர் பல்வேறு விதங்களிலும், புதுப்பரிமாணங்களிலும் கிடைக்கிறது. அதில் முக்கியமான மற்றும் பிரபலமான ஒன்று ஹைட்ரஜன் நீர் ஆகும். இந்த பதிவில் ஹைட்ரஜன் தண்ணீர் என்றால் என்ன அதனை பயன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைட்ரஜன் தண்ணீர்

ஹைட்ரஜன் தண்ணீர்

ஹைட்ரஜன் தண்ணீர் என்பது வேறு ஒன்றுமல்ல சாதாரண தண்ணீரில் சில ஹைட்ரஜன் மூலக்கூறுகளை சேர்த்து உருவாக்குவதுதான். நிறமற்ற, மணமற்ற இந்த நீர் நச்சு அல்லாத வாயுவை கொண்டுள்ளது. மேலும் இது ஆக்சிஜன், நைட்ரஜன் என அனைத்துடனும் எளிதில் வினைபுரிந்து புதிய சேர்மங்களை உருவாக்கும்.

 எப்படி தயாரிக்கப்படுகிறது?

எப்படி தயாரிக்கப்படுகிறது?

சாதாரண நீர் இரண்டு ஆக்சிஜன் மூலக்கூறுகளையும், ஒரு ஆக்சிஜன் மூலக்கூறையும் கொண்டிருக்கும். ஆனால் தண்ணீரில் ஹைட்ரஜன் மூலக்கூறுகளை சேர்ப்பதன் மூலம் அதன் ஆரோக்கிய பலன்களை அதிகரிக்க முடியும். ஆராய்ச்சிகளின் படி நமது உடல் தண்ணீரில் இருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகளை விட ஹைட்ரஜன் மூலக்கூறுகளை வேகமாக உறிஞ்சி கொள்கிறது.

 இந்த தண்ணீரை குடிக்கலாமா?

இந்த தண்ணீரை குடிக்கலாமா?

இந்த தண்ணீரை குடிக்கலாமா? கூடாதா? என்ற விவாதம் உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதன் முடிவில் இந்த தண்ணீர் அடைந்திருக்கும் பிரபலத்தின் மூலம் இதனை அனைவரும் குடிக்கலாம் என்றே கூறப்படுகிறது. சாதாரண தண்ணீரை விட இதில் அதிகளவு ஆரோக்கிய பலன்கள் உள்ளது.

MOST READ:இந்த 6 ராசி ஆண்களும் அற்புதமான கணவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கானு பாருங்க?

அதிக ஆற்றல்

அதிக ஆற்றல்

சாதாரண தண்ணீரை காட்டிலும் இந்த ஹைட்ரஜன் தண்ணீர் அதிக ஆற்றலை வழங்கக்கூடும். இதனால் இது பல விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது நமது உடலில் இருக்கும் நீர்சத்துக்களை விரைவில் குறையாமல் பார்த்துக்கொள்கிறது.

ஆன்டி ஆக்சிடன்ட்

ஆன்டி ஆக்சிடன்ட்

ஹைட்ரஜன் நீர் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆகும். இது உங்கள் உடல் முழுவதும் இருக்கும் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. செல்களில் இருக்கும் எலக்ட்ரான்களை நச்சு பொருட்கள் சிதைப்பதை தடுக்கிறது.

மூளை பாதுகாப்பு

மூளை பாதுகாப்பு

ஹைட்ரஜன் நிறைந்த நீரைக் குடிப்பதால் மூளைக் காயத்தின் நரம்பியல் சேதத்திலிருந்து பாதுகாக்க முடியும். நமது உடலில் அதிகளவு ஆக்சிஜனேற்ற அழுத்தம் ஏற்படும் போது இது நிகழ்கிறது.

MOST READ:பெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

ஹைட்ரஜன் நீர் குடிப்பது நமது சருமத்தின் ஹைட்ரேட்டை அதிகரிக்கிறது. இதனால் நமது சருமம் வயதாவதை தடுக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகளை தடுத்து உங்களுக்கு தெளிவான, மென்மையான சருமத்தை வழங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is hydrogen water and its benefits

Hydrogen water is nothing but simple water with added hydrogen molecules. It has mumerous health benefits.
Story first published: Friday, July 12, 2019, 17:49 [IST]
Desktop Bottom Promotion