For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமைக்கும்போது உப்பு அதிகமாயிருச்சா? கவலையே வேணாம் இந்த பொருளை வைச்சு ஈஸியா சரிபண்ணிரலாம்..!

எந்த உணவாக இருந்தாலும் அதில் உப்பு சேர்த்தால் மட்டும்தான் அது முழுமைபெறும். ஆனால் உணவில் உப்பு அதிகரித்து விட்டால் என்ன செய்வது?

|

" உப்பில்லா பண்டம் குப்பையிலே " என்று சொல்லுவார்கள் ஆனால் உப்பு அதிகமிருக்கும் பண்டமும் குப்பையில்தான். ஏனெனில் உணவின் சுவையை அடியோடு மாற்றும் சக்தி உப்புக்கு உள்ளது. எந்த உணவாக இருந்தாலும் அதில் உப்பு சேர்த்தால் மட்டும்தான் அது முழுமைபெறும். ஆனால் உணவில் உப்பு அதிகரித்து விட்டால் என்ன செய்வது?

Ways to remove excess salt from food

சமைக்கும் பலருக்கும் உப்பு சரியாக போட தெரியாது என்பதே உண்மை. உணவில் உப்பு குறைவாக போய்விட்டால் பிரச்சினை இல்லை மீண்டும் உப்பு சேர்த்து கொள்ளலாம் ஆனால் அதிகமாகி விட்டால் என்ன செய்வது ஒன்று செய்ய முடியாது அதனை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் கேடுதான். ஆனால் உணவில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் அதிகமாக இருக்கும் உப்பை சமநிலைக்கு கொண்டுவரலாம். அவை எந்தெந்த பொருட்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

சில உருளைக்கிழங்கு துண்டுகள் உணவில் இருக்கும் உப்பை சில நிமிடங்களில் உறிஞ்சி கொள்ளும். நீங்கள் சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டது என்று தெரிந்தால் சில உருளைக்கிழங்குகளை அதில் நறுக்கி போட்டு 15 முதல் 20 நிமிடம் குறைந்த நெருப்பில் வேகவையுங்கள். உணவு தயாரான பிறகு அந்த உருளைக்கிழங்கை வெளுயேய் எடுத்துவிடலாம்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

பல முக்கியமான உணவுகளுக்கு தேங்காய் பால் தேவைப்படுகிறது ஆனால் உணவின் சுவையை பாதுகாக்க தேங்காய் பால் ஒரு முக்கியமான பொருளாகும். உப்பு அதிகமான உணவில் சிறிது தேங்காய் பால் சேருங்கள் இது உப்பை சமநிலைக்கு கொண்டு வருவதோடு உணவின் சுவையையும் அதிகரிக்கும்.

தண்ணீர்

தண்ணீர்

உணவில் இருக்கும் அதிகளவு உப்பை நீக்கும் எளிய வழி தண்ணீர் சேர்ப்பதாகும். தண்ணீர் சேர்த்து உணவை கொதிக்க வைப்பது அதிலிருக்கும் உப்பை குறைக்கும். இது உங்கள் உணவில் இருக்கும் அதிகளவுஉப்பை குறைத்து அதனை பாதுகாக்கும்.

MOST READ: 21 இந்திய வீரர்கள் 10,000 எதிரிகளை எதிர்த்து போரிட்டு சரித்திரம் படைத்த வீரவரலாறு தெரியுமா?

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

நீங்கள் செய்த தவறை எளிதில் மறைக்க எலுமிச்சை சாறு உதவும் அதேசமயம் உங்கள் உணவிற்கும் வித்தியாசமான சுவையை வழங்கும். உங்கள் உணவை பாதுகாக்க இது ஒரு மிகச்சிறந்த தந்திரமாகும்.

யோகர்ட்

யோகர்ட்

உணவில் இருக்கும் அதிகளவு உப்பை நீக்குவதற்கு இரண்டு ஸ்பூன் யோகர்ட் சேர்ப்பது மிகச்சிறந்த வழியாகும். இது உங்கள் உணவின் சுவையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, அதேசமயம் அதிகமாக இருக்கும் உப்பையும் எடுத்துவிடும்.

கோதுமை மாவு

கோதுமை மாவு

இது உங்களுக்கு வித்தியாசமானதாக தெரியலாம் ஆனால் இது மிகவும் உபயோகமான வழியாகும். நீங்கள் செய்யும் கிரேவியில் உப்பு அதிகமாகி விட்டால் உடனடியாக இரண்டு ஸ்பூன் கோதுமையை அதில் சேருங்கள், சில நிமிடங்களில் கோதுமை உப்பை உறிஞ்சிவிட்டு மேலே மிதக்கும். அதனை அப்புறப்படுத்திவிட்டு சமைப்பதை தொடருங்கள்.

MOST READ: மே மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் கெட்ட குணங்கள் என்னென்ன தெரியுமா?

சர்க்கரை

சர்க்கரை

இந்த முறையில் சில அபாயங்கள் உள்ளது. ஒருவேளை நீங்கள் சிறிதளவு உப்பு அதிகமாக போட்டுவிட்டால் அதேயளவு சர்க்கரையை உணவில் சேருங்கள். இது அதிகமாக இருந்த சர்க்கரையின் அளவை குறைத்துவிடும். ஆனால் உப்பு சற்று அதிகமாக உள்ள உணவிற்கு மட்டுமே இந்த முறை உதவும், உப்பு அதிகமாக இருக்கும் உணவிற்கு நீங்கள் வேறு முறையைத்தான் கையாள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: cooking salt food உப்பு
English summary

Ways to remove excess salt from food

An excess of salt can spoil your food and your health.
Story first published: Monday, May 6, 2019, 12:49 [IST]
Desktop Bottom Promotion