For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் வேகமாக நடப்பதால் இந்த 7 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்!

|

பல்வேறு பிரச்சினைகள் நம் அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி வட்டம் போட்டு கொண்டிருக்கிறது. இவற்றில் சில தீர்க்க கூடிய வகையில் இருக்கும். சில என்னதான் செஞ்சாலும் தீரவே தீராத நிலையில் இருக்கும். குறிப்பாக உடல் அளவில் ஏற்பட கூடிய பாதிப்புகள் பல மிக எளிமையான வழியில் தீர்க்க கூடியதாக இருக்கும்.

தினமும் வேகமாக நடப்பதால் இந்த 7 நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்!

நாம் சாப்பிடும் உணவு முறை முதல் வாழ்கின்ற வாழ்க்கை முறை வரை நமக்கு உதவும். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைக்க வேகமாக நடந்தாலே போதும் என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. வேகமாக நடப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடைபயணம்

நடைபயணம்

பொதுவாகவே இன்றைய கால கட்டத்தில் பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்றால் கூட பைக்கில் செல்லும் ட்ரெண்ட் வந்து விட்டது. ஆனால், இது மிக மோசமான தாக்கத்தை மனித வாழ்வில் உண்டாக்கி விடும்.

காலால் நடந்து செல்வது தான் உடலுக்கு ஆரோக்கியம். பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு கால்களால் செல்வதே சிறந்த பலனை தரும்.

மூளையின் திறன்

மூளையின் திறன்

கால்களால் மெல்லமாக நடப்பதை விடவும் சற்று வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளை உண்டாக்குமாம். இது மூளையின் திறனை அதிகரித்து ஞாபக திறனை சிறப்பாக வைக்கிறது. மேலும், உங்களை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைக்க வேகமாக நடக்கும் முறை உதவுகிறது.

MOST READ: ஆணுறுப்பின் மேல் தோலை நீக்கியதால் 5 மாத குழந்தை பரிதாப பலி! நடந்த கொடுமை இதுதான்!

உடல் எடை

உடல் எடை

வேகமாக நடப்பதால் உடல் எடை குறைய தொடங்கும். மிக பெரிய பயிற்சிகளை செய்யாமல் இது போன்ற சாதாரண பயிற்சிகளால் உடல் எடைக்கு தீர்வை தரலாம். உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகளும் இதனால் குறையும்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உங்களை எளிதாக காப்பாற்ற இந்த வேகமாக நடக்கும் பயிற்சி உதவுகிறது. வேகமாக நடந்தால் இரத்த அழுத்தத்தை குறைத்து மன அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். அத்துடன் இது புத்துணர்வையும் தர கூடும்.

எலும்புகளுக்கு ஆரோக்கியம்

எலும்புகளுக்கு ஆரோக்கியம்

வேகமாக நடப்பதால் எலும்புகள் வலு பெறும். மூட்டு வலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வேகமாக நடந்தாலே போதும். எலும்புகளுக்கு அதிக வலிமையை தந்து எப்போதுமே உத்வேகத்துடனே உங்களை வைத்து கொள்ளும்.

கொலஸ்ரால்

கொலஸ்ரால்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த வேகமாக நடக்கும் முறை உதவுகிறது. மேலும் இதனால் இதய நோய்களை தடுக்க முடியும். நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளை பெற வேகமாக நடக்க செய்யுங்கள்.

MOST READ: 28 நாட்கள் தொடர்ந்து சரக்கு அடிக்காமல் இருந்தால் என்னென்ன விளைவுகள் உடலில் உண்டாகும்?

செலவு குறைவு

செலவு குறைவு

உடல் ஆரோக்கியத்தை காக்க லட்ச கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. மாறாக இது போன்ற எளிய பயிற்சிகளை செய்து வந்தாலே போதும்.

வேகமாக நடப்பதால் உடல் ஆரோக்கியம் கூடும். மெல்லமாக நடப்பதால் எந்தவித பயனும் பெரிதாக கிடையாது. ஆதலால், இன்றிலிருந்து வேகமாக நடக்க பழகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Walk Faster To Live Long

Here we listed the benefits of walking faster.
Story first published: Wednesday, April 3, 2019, 17:46 [IST]
Desktop Bottom Promotion