For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூங்க போகும் முன் இளநீர் குடிங்க! அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுனு!

|

நம்ம உடம்பு நாம சொல்றத கேட்கணும்னா, முதல்ல அத சரியான முறையில பழகி வச்சிருக்கணும். பல நாட்கள் தவறான முறையில உங்க உடம்ப பழக்கி வந்த பிறகு உடனே நீங்க சொல்ற படியெல்லாம் கேட்கணும்னு சொன்னா அதுல என்ன அர்த்தம் இருக்கு. இதற்கு முக்கிய காரணமே உணவுகளை தேவையற்ற நேரங்களில் சாப்பிடறது தான். இரவில் சாப்பிட வேண்டிய உணவுகளை காலையில் சாப்பிடறதும்.

தூங்க போகும் முன் இளநீர் குடிங்க! அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுனு..!

மதியம் சாப்பிட வேண்டிய உணவுகளை இரவில் சாப்பிடறதுமே நமக்கெல்லாம் வழக்கமா போயிடுச்சி. இது தான் நமது உடல் நிலை மோசமான அளவில் பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாக இருக்குனு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. இது திரவ நிலை உணவுகளுக்கு சற்று மாறுபடும். குறிப்பாக பழசாறு, இளநீர், கூழ் போன்றவற்றின் தன்மை வேறுபடும்.

அந்த வகையில் இளநீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இளநீரை சில முக்கியமான நேரங்களின் மட்டும் குடித்தால் உடலில் எக்கசக்க மாற்றங்கள் உண்டாகும். எந்தெந்த நேரங்களின் இளநீர் குடிக்கலாம் என்றும், அதனால் உண்டாக கூடிய பயன்கள் என்னென்ன என்பதையும் இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமிர்த நீர்!

அமிர்த நீர்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இளநீர் என்றால் அமிர்த நீர் போன்றது. இவற்றில் உள்ள எண்ணற்ற எலெக்ட்ரோலைட்க்கள் நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தர கூடியது.

சோர்வு என்ற வார்த்தையை துரத்தி அடிக்கும் ஆற்றல் இதற்குண்டு. மிக குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் எந்த விதத்திலும் உங்கள் உடல் எடையை கூட செய்யாது.

எதிர்ப்பு சக்தி

எதிர்ப்பு சக்தி

இளநீர் குடிப்பதால் எதிர்ப்பு சக்தி மண்டலம் வலு பெறும். இவற்றில் உள்ள நியாஸின், தைமின், பைரிடாக்ஸின் போன்றவை நோய்களை தடுக்க உதவும்.

அத்துடன் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை இளநீரில் உள்ளதால் உடலில் உள்ள நுண் கிருமிகளை முற்றிலுமாக போக்க வழி செய்யும்.

MOST READ: பிணங்களுக்கு பயன்படுத்தும் விஷ தன்மையுள்ள வேதி பொருளை மீன்களில் கலக்கும் அவலம்! உஷார் மக்களே!

சிறந்த நேரம்?

சிறந்த நேரம்?

பொதுவாக இளநீரை 5 முறையில் குடிக்கலாம். இவை ஒவ்வொரு கால நேரத்திலும் வெவ்வேறு விதமான பலனை நமது உடலுக்கு தரும். முதலாவதாக காலை நேரத்தில் இளநீரை குடித்தால் உடனடி பலனை அடைய முடியும்.

குறிப்பாக வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் உடல் மெட்டபாலிசம் வேகமாக நடைபெறும். இதனால் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

இளநீரை உடற்பயிற்சி செய்து விட்ட பிறகு குடித்தால் சிறப்பான உடல் நலத்தை பெறலாம். நீர்சத்து உடலில் அதிகரித்து ஆற்றலை உயர்த்தும். மேலும், உடற்பயிற்சி செய்வோருக்கு தேவையான எலெக்ட்ரோலைட்கள் இதன் மூலம் அதிக அளவில் கிடைக்கும்.

சாப்பாட்டிற்கு முன், பின்

சாப்பாட்டிற்கு முன், பின்

சாப்பிடுவதற்கு முன்னர் இளநீர் சாப்பிட்டால் மிக சுலபமாக செரிமான கோளாறுகளை தடுத்து விடும். அத்துடன், வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ளும். இதே போன்று சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு பின்னரும் குடிக்கலாம்.

MOST READ: உங்களுக்கு ஹார்மோன் பிரச்சினை இருக்கா? அப்போ இதுல ஏதாவது ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுங்க..!

ஹாங்ஓவர்

ஹாங்ஓவர்

மது அறுந்துவதால் ஏற்பட கூடிய ஹாங்ஓவர் பிரச்சினைகளை தீர்க்க மிக சுலபமான வழி இளநீர் தான். உங்களது தலை வலி, தலை சுற்றல், வாந்தி, மயக்கம் முதலிய கோளாறுகளை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. அத்துடன் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தையும் இது வாரி வழங்கும்.

தூங்குவதற்கு முன்

தூங்குவதற்கு முன்

தூங்குவதற்கு முன்னர் இளநீர் குடித்தால் அருமையான மாற்றங்கள் உடலில் உண்டாகும். முக்கியமாக மன அழுத்தம் குறையும். இதய துடிப்பு சீராக இருக்கும்.

இதனால் நிம்மதியான தூக்கம் உங்களுக்கு உண்டாகும். கூடவே மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க இரவில் இளநீர் குடிப்பது சிறந்த வழியாகும்.

சிறுநீர் கற்கள்

சிறுநீர் கற்கள்

மற்ற நேரங்களை விட தூங்குவதற்கு முன்னர் இளநீர் குடித்து வந்தால் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம். அத்துடன் சிறுநீர் பாதையில் உண்டாக கூடிய அடைப்புகள், நோய் தொற்றுகள், சிறுநீரக பிரச்சினை முதலிய பாதிப்புகளை இந்த அமிர்த நீர் தடுக்கும்.

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்பிணிகளுக்கு

கர்ப்ப காலங்களில் இளநீரை கர்ப்பிணிகள் குடித்து வந்தால் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைவாக கிடைக்கும்.

நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் போன்றவற்றை கர்ப்ப காலங்களில் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு. மேலும், சிசுவின் ஆரோக்கியமும் இதனால் கூடும்.

MOST READ: பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாதாம்! மீறினால் இந்த ஆபத்து நிச்சயம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

This is the Best Time to Drink Coconut Water

This article talks about What is the Best Time to Drink Coconut Water?
Desktop Bottom Promotion