Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த சாதாரண பொருட்கள் உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா?
உங்கள் சமையலறையில் சில பொருட்களை ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அந்த பொருட்கள் சமைக்கும் தரத்தையும், சுவையையும் கெடுக்கும்.
வீட்டில் இருக்கும் அனைத்து இடங்களும் சுத்தமாக இருப்பது நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். நமது வீட்டின் முக்கியமான இடங்களில் சமையலறை ஒன்றாகும், ஏனெனில் நமக்கு தேவையான அனைத்து உணவுகளும் அங்கிருந்துதான் கிடைக்கிறது. எனவே அந்த இடத்தை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

உங்கள் சமையலறையில் சில பொருட்களை ஒருபோதும் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அந்த பொருட்கள் சமைக்கும் தரத்தையும், சுவையையும் கெடுக்கும். மேலும் இதனால் பல ஆரோக்கிய பிரச்சினைகள் கூட ஏற்படலாம். இந்த பதிவில் உங்கள் சமையலறையில் வைத்துக்கொள்ள கூடாத பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

துருப்பிடித்த பாத்திரங்கள்
சாதாரண சமையல் பாத்திரங்கள் இரும்பு மற்றும் கண்ணாடி பூச்சுகளால் தயாரிக்கப்பட்டது. ஆனால் துருப்பிடித்த பாத்திரத்தில் சமைப்பது உங்கள் நரம்பு மணடலத்திற்கு பல பிரச்சினைகளை உண்டாக்கும். சிலசமயங்களில் இது டெட்டனஸ் என்ற தொற்றுநோயை உண்டாக்கும்.

பழைய மசாலாக்கள்
மசாலாப் பொருட்கள் காற்று புகாத கொள்கலனில் வைக்கப்படாவிட்டால் அவை விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. மேலும் இதனால் பூஞ்சைகள் உருவாகவும் வாய்ப்புள்ளது, ஆனால் இதன் நிறத்தால் நம்மால் அதனை கண்டுபிடிக்க முடியாது. உங்கள் மசாலா பொருட்களில் எந்த வாசனையும் இல்லையென்றால் அதனை தூக்கியெறிய வேண்டிய நேரமிது.

பிளாஸ்டிக் பேக்
கடைக்கு செல்லும்போதெல்லாம் நாம் பிளாஸ்டிக் பேக்குகளை வாங்கி வீட்டை நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் இவற்றில் உணவுகளை சேமித்து வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அதனை உடனடியாக நிறுத்தி விடுங்கள். அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் அல்லது எச்டிபிஇ மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பேக்குகள் நச்சுகளால் நிரப்பப்பட்டவை. இதனை சமையலறையில் வைத்துக்கொள்வதே ஆபத்தானது.

பிளாஸ்டிக் பாத்திரங்கள்
பிளாஸ்டிக் பாத்திரங்கள் உறுதியானவை மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடியவை என்பது உண்மைதான். ஆனால் பாலிப்ரொப்பிலீன் மற்றும் பாலிஸ்டிரீன் போன்ற பொருட்கள் மனித கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதில் கண்ணாடி பாத்திரங்களை உபயோகிக்க தொடங்குங்கள்.

பழைய கத்தி
சமையலறை கத்திகள் பொதுவாக கார்பன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. கத்தியின் முனைகளை கூர்மையானதாக மாற்ற இரும்புடன் கார்பன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். சில காலத்திற்கு பிறகு இரும்பு உணவுடன் வினைபுரிந்து அதனை விஷமாக மாற்ற வாய்ப்புள்ளது.

உபயோகித்த எண்ணெய்
ஆரோக்கிய நிபுணர்களின் கருத்துப்படி உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது சுகாதாரமற்றது மட்டுமல்ல ஆரோக்கியமற்றதும் கூட. இது கொழுப்பின் அளவை அதிகரிப்பதுடன் புற்றுநோய், செல்களின் சிதைவு, இரத்த வெள்ளை அணுக்களின் மீது தாக்குதல், நோயெதிர்ப்பு சக்தி குறைப்பு போன்ற ஆபத்துக்களை உண்டாக்கும்.

அஜினோமோட்டோ
தொடர்ச்சியாக அஜினோமோட்டோவை உணவில் சேர்த்து கொள்வது உங்களின் நரம்பு மண்டலத்திற்கு நல்லதல்ல. இதனால் உணர்விழப்பு, கழுத்து மற்றும் முகத்தில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications