For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உயரத்திற்கு குறைவாக இருக்கும் ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாம்?

உயரமாக இருப்பதிலும் சரி, உயரம் குறைவாக இருப்பதிலும் சரி சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்கிறது.

|

நமது உடலின் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகளையும், வாழ்க்கை முறையையும் சார்ந்தது. ஆனால் நமது உடலின் அங்கங்களும் நமது ஆரோக்கியத்தின் மீது குறிப்பிட்ட அளவு முக்கியப்பங்கு வகிக்கிறது. ஒவ்வொருவரின் உடலமைப்பும் வித்தியாசமானதாக இருக்கும், ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒன்று அவர்களின் உயரம் ஆகும்.

Strange Ways Your Height May Affect Your Health

உயரம் ஒருவரின் தோற்றத்தை மட்டும் நிர்ணயிப்பதில்லை, ஒருவரின் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது. உயரமாக இருப்பதிலும் சரி, உயரம் குறைவாக இருப்பதிலும் சரி சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்கிறது. இந்த பதிவில் உயரம் உங்கள் ஆரோக்கியத்தின் மீது எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரமாக இருப்பது இதய நோயை குறைக்கும்

உயரமாக இருப்பது இதய நோயை குறைக்கும்

உயரத்திற்கும், உங்கள் ஆரோக்கியத்திற்கும் இருக்கும் நெருங்கிய தொடர்புகளில் ஒன்று உயரமாக இருப்பவர்கள் ஆரோக்கியமான இதயத்தை கொண்டிருப்பார்கள். 5 அடி 8 அங்குலத்திற்கு மேல் பெண்களுக்கு 5 அடி 3 அங்குலம் இருக்கும் பெண்களை விட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 29 சதவீதம் குறைவு என ஆய்வுகள் கூறுகிறது. உங்கள் பாலினத்தை சேர்ந்தவர்களை விட நீங்கள் உயரமாக இருக்கும் ஒவ்வொரு இரண்டரை இன்ச்க்கும் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 14 சதவீதம் குறையும்.

டைப் 2 சர்க்கரை நோய்

டைப் 2 சர்க்கரை நோய்

உயரமாக இருப்பது டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது ஆனால் இது பெண்களுக்கு மட்டுமே. ஆண்களை பொறுத்தவரை உயரத்தை பொறுத்து சர்க்கரை நோய் பாதிப்பு மாறுபடுவதில்லை. இவர்களின் கல்லீரலில் இருக்கும் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் அவர்களின் சர்க்கரை நோய் பாதிப்பு குறைகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

உயரமாக இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அனைத்து வகையான புற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்கள் மற்ற பெண்களை விட அதிகமாக இருக்கும் ஒவ்வொரு 4 இன்ச்க்கும் அவர்களுக்கு 19 வகையான புற்றுநோய்கள் உருவாகும் வாய்ப்பு 17 சதவீதம் அதிகரிக்கும். உயரமானவர்கள் உடலில் அதிகளவு செல்கள் இருக்கும். எனவே அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். உயரம் அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

MOST READ: கர்ணன் அனைத்திலும் சிறந்தவராக இருந்தபோதும் கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?

உயரம் குறைவாக உள்ளவர்கள்

உயரம் குறைவாக உள்ளவர்கள்

நீங்கள் 5 அடி 3 அங்குலம் உயரத்துடனும் ஆரோக்கியமான எடையுடனும் இருந்தால் உயரமானவர்களை விட உங்களுக்கு இரத்த உறைவு ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு குறைவாக இருக்கும். இந்த உயரத்திற்கு அதிகமாக இருப்பவர்கள் இரத்த உறைவு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால் அவர்கள் எடையை சீராக பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

கர்ப்பத்தில் சிக்கல்

கர்ப்பத்தில் சிக்கல்

5 அடி 6 அங்குலத்திற்கு மேல் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு 59 சதவீதம் குறைவு ஆகும். இது கர்ப்பமாக இருக்கும் பெண்களை மட்டும் பாதிக்கும் உயர் இரத்த சர்க்கரை ஆகும். மேலும் கர்ப்பிணி பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சிக்கல்களும், குறைபிரசவமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அல்சைமர்

அல்சைமர்

5 அடி 10 அங்குலத்திற்கு மேல் இருக்கும் ஆண்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகும். பெண்களை பொறுத்தவரை 5 அடி 6 அங்குலத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு அல்சைமர் ஏற்படும் வாய்ப்பு குறைவு. அதேபோல 5 அடி 7 அங்குலம் இருக்கும் பெண்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது.

மாரடைப்பு

மாரடைப்பு

உயரம் குறைவாக உள்லவர்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். அதேசமயம் உயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகும்.

MOST READ: மனுநீதியின் படி கணவன்-மனைவி உறவில் அவர்கள் மீறும் இந்த சத்தியங்கள் அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும்...!

நீண்ட ஆயுள்

நீண்ட ஆயுள்

உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு இருக்கும் ஒரு ஆறுதல் என்னவென்றால் அவர்களின் ஆயுள் அதிகமாகும். வயதானவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் 5 அடி 4 அங்குலத்திற்கு குறைவாக உள்ளவர்கள் உயரம் அதிகமாக இருப்பவர்களை விட இரண்டு ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்ததாக முடிவுகள் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Strange Ways Your Height May Affect Your Health

Check out how your hight may affect your health.
Desktop Bottom Promotion