For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கை, காலில் வலி இருந்தால் அலட்சியமாக இருக்காதீர்கள்... இந்த ஆபத்தான நோய்களாக இருக்க வாய்ப்புள்ளது...!

தசை வலி என்பது அனைவருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒன்றுதான். பெரும்பாலும் தசைகளில் ஏற்படும் வலியை நினைத்து நாம் கவலைப்படுவதில்லை.

|

தசை வலி என்பது அனைவருக்கும் அடிக்கடி ஏற்படும் ஒன்றுதான். பெரும்பாலும் தசைகளில் ஏற்படும் வலியை நினைத்து நாம் கவலைப்படுவதில்லை. ஏனெனில் தசை வலிகள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அதிக விளையாட்டு, பளு தூக்குதல், ஜிம்முக்கு செல்லுதல், நீண்ட தூரம் நடத்தல் என தசைகளில் வலியும், பிடிப்பும் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம்.

Signs Your Muscle Pain Is a Sign of Something Worse

இதுபோன்ற வேலைகள் செய்யும்போது உருவாக்கப்படும் லாக்டிக் அமிலம்தான் வலியை உண்டாக்குகிறது. தசை வலிகள் தானாக சரியாக கூடியவைதான், ஆனால் அவை சில நோய்களின் முக்கியமான அறிகுறியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே தசை வலியை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். இந்த பதிவில் எந்தெந்த நோய்களின் அறிகுறியாக தசைவலி இருக்கும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்போது கவலைப்பட வேண்டும்?

எப்போது கவலைப்பட வேண்டும்?

தசை வலிகளுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால் அதற்கான சிகிச்சையை நீங்கள் செய்யலாம். பொதுவாக தசை வழிகள் சில நாட்களில் குணமாகி விடும். ஆனால் இரண்டு வாரத்திற்கு பிறகும் வலி இருந்தால் நீங்கள் அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனெனில் சில நோய்கள் மற்றும் தொற்றுகள் காரணமாக கூட தசைகளில் வலி ஏற்படலாம்.

பைப்ரோமியால்ஜியா

பைப்ரோமியால்ஜியா

இந்த குறைபாடு உடல் முழுவதும் வலி மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் சோர்வு மற்றும் தூக்க பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இந்த நோய் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே வலியை ஏற்படுத்தும், உடம்பின் இருபுறமும், மணிக்கட்டிற்கு மேலும், கீழும் வலி இருந்தால் இந்த நோய் இருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

ஆர்திரிடிஸ்

ஆர்திரிடிஸ்

ஆர்திரிடிஸ் மூட்டுகளில் மட்டும்தான் வலியை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு ஏனெனில் இது தசைகளிலும் வலியை ஏற்படுத்தும். தசைகளின் வேலையே நமது உடலை தளர்வாக வைப்பதுதான். ஆனால் அவற்றில் வலி இருக்கும்போது தானாக அவை உடலின் செயல்பாடுகளை பாதிக்கும். உங்களுக்கு ஆர்திரிடிஸ் இருந்தால் நீங்கள் கடுமையான தசை வலிகளுக்கு ஆளாவீர்கள்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே தளராத மனம் உடையவராக இருப்பார்களாம் தெரியுமா?

தொற்றாக இருக்கலாம்

தொற்றாக இருக்கலாம்

தசை வலிகளுக்கு நீங்கள் சில வீடு வைத்தியங்களை முயற்சிக்கலாம் ஆனால் அவை எதுவும் வலியை குறைக்கவில்லை எனில், மேலும் அந்த பகுதியில் வீக்கம் மற்றும் உங்களுக்கு காய்ச்சல் போன்றவை இருந்தால் உங்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எந்த வேலையும் செய்யாத போது இந்த பிரச்சினை ஏற்பட்டால் நிச்சயம் அது தொற்றுநோயாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது.

லிம் நோய்

லிம் நோய்

கருப்பு கால்களை கொண்டிருக்கும் பூச்சிகள் உங்களை கடித்தால் போறிரிலியா பர்க்டார்பெர்டி, பாக்டீரியாவை உங்கள் உடலுக்குள் செலுத்துகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினை என்னவென்றால் இது கடித்ததற்கான அறிகுறி எப்போதும் தெரியாது. எனவே அதன் அறிகுறிகளை கவனிக்க வேண்டும், சோர்வு, காய்ச்சல், கழுத்து வலி, உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு லிம் நோய் இருக்க வாய்ப்புள்ளது.

ராபமோயோலிசிஸ்

ராபமோயோலிசிஸ்

உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமானதுதான் ஆனால் அதிகமாக செய்வது ஆபத்தானதும் கூட. ராபமோயோலிசிஸ் என்பது அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது தசை திசுக்கள் முறிந்து மிகுளோபின்

என்னும் புரோட்டினை இரத்தத்தில் கலக்கிறது. இதனால் உங்கள் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படலாம். தசைகளில் பலவீனம், வலி, சிறுநீரின் நிறம் மாறுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

காய்ச்சல்

காய்ச்சல்

காய்ச்சலுக்கான வைரஸ் உங்கள் உடலுக்குள் வந்துவிட்டால் திடீரென சோர்வு, கை, கால்களில் வலி, சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படலாம். காய்ச்சலின் போது இந்த அறிகுறிகள் இருந்தால் முடிந்தளவு விரைவாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MOST READ: சீதை ஏன் இராமரின் மீது அனுமனுக்கு இருந்த பக்தியை சந்தேகித்தார் தெரியுமா?

மாத்திரைகள்

மாத்திரைகள்

துரதிர்ஷ்டவசமாக நம்மை பாதுகாக்க வேண்டிய சில மாத்திரைகளே சில சமயம் நமக்கு பிரச்சினைகளை உண்டாக்கலாம். குறிப்பாக கொழுப்பை குறைப்பதற்காக நீங்கள் எடுத்து கொள்ளும் சில மாத்திரைகள் பக்க விளைவாக தசைகளில் வலியை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Signs Your Muscle Pain Is a Sign of Something Worse

If you have muscle pain you might have have some worst health issues.
Story first published: Friday, May 31, 2019, 15:05 [IST]
Desktop Bottom Promotion