Just In
- 7 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 23 hrs ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 23 hrs ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
Don't Miss
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Sports
இப்படியே போய்க்கிட்டு இருந்தா டீம்ல இருந்து கழட்டி விட்ருவாங்க.. தமிழக வீரருக்கு வார்னிங்!
- News
மண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது!
- Movies
தர்பார் இசை வெளியீட்டு விழா.. அந்த மூணாவது குட்டிக் கதை யாருக்குத் தெரியுமா?
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த குளிர்காலத்தில் தெரியாமல் கூட இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துவிடாதீர்கள்...!
குளிர்காலம் என்பது நமக்கு மிகவும் பிடித்த ஒரு காலமாகும். ஏனெனில் ஆண்டு முழுவதும் வெயிலில் வாடும் நமக்கு குளிர்காலம் என்பது இயற்கை கொடுக்கும் வரமாகும். குளிர்காலத்தின் காலை நேரத்தில் வரும் தூக்கத்திற்கு இணை என்பது இந்த உலகத்திலேயே கிடையாது. குளிர்காலம் நமக்கு பல நல்ல அனுபவங்களை கொடுத்தாலும் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் அது சில தீமைகளை வழங்கக்கூடும்.
குளிர்காலம் எந்த அளவிற்கு மோசமானது என்றால் பொதுவாக நாம் சாப்பிடும் ஆரோக்கிய உணவுகளை கூட நம் உடலுக்கு எதிராக செயல்படவைக்கக்கூடும். ஆம், பொதுவாகவே காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்யத்தைத்தான் வழங்கும். ஆனால் சில ஆரோக்கிய உணவுகளை குளிர்காலத்தில் சாப்பிடும்போது அது உங்கள் ஆரோக்கியத்தின் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். அதன்படி எந்தெந்த உணவுகளை இந்த குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அஸ்பாரகஸ்
அஸ்பாரகஸ் என்பது ஆண்டும் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான காய்கறி ஆகும். ஆனால் குளிர்காலத்தில் நீங்கள் வாங்கும் அஸ்பாரகஸ் தரமானதாக இருக்காது. வசந்த காலத்தில் மட்டுமே உங்களுக்கு தரமான, மென்மையான அஸ்பாரகஸ் கிடைக்கும். குளிர்காலத்தில் கிடைக்கும் அஸ்பாரகஸ் தடிமனாகவும், சுவை குறைவானதாகவும் இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்களும் போதுமானதாக இருக்காது.

பேக்கிங் காய்கறிகள்
பொதுவாக காய்கறிகள் குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்றவையாகும். ஆனல் ஏற்கனவே வெட்டப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட காய்கறிகளை வாங்கி சமைப்பதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் இந்த காய்கறிகளால் உங்களுக்கு சுவையும் கிடைக்காது, ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. மேலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் இந்த காய்கறிகளில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் உங்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே குளிர்காலங்களில் பச்சை காய்கறிகளை வாங்கி நீங்களே சமைத்து சாப்பிடுவதுதான் நல்லது.

பச்சை பட்டாணி
பச்சை பட்டாணி என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருளாகும். ஆனால் குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடும் பட்டாணி முழுசுவையையும், ஆரோக்கியத்தையும் கொண்டதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். குளிர் காலத்தில் தரம் குறைந்த பச்சை பட்டாணியை சாப்பிடுவது உங்களுக்கு வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை சாப்பிடுவது சரியான தேர்வாக இருக்காது.

தக்காளி
ஆண்டு முழுவதும் கிடைக்கும் ஒரு அத்தியாவசிய பொருள் என்றால் அது தக்காளிதான். குளிர்காலத்தில் கிடைக்கும் தக்காளி உருவத்திலும், நிறத்திலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை கணக்கிடும்போது குளிர்காலத்தில் கிடைக்கும் தக்காளியில் இரண்டுமே குறைவுதான். குளிர்காலத்தில் கிடைக்கும் தக்காளிகளின் தோல் சற்று தடிமனாக இருக்கும். கோடைகாலத்தில் மட்டுமே உங்களுக்கு தரமான தக்காளிகள் கிடைக்கும். மேலும் குளிர்கால தக்காளியில் வைட்டமின் சி மிகவும் குறைவாக இருக்கும்.

ஸ்ட்ராபெர்ரி
குளிர்காலத்தில் கடைகளில் கிடைக்கும் ஸ்டராபெர்ரிகளின் நிறத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும். ஏனெனில் அவை வெளிர் நிறத்தில் இருக்கும். இதற்கு காரணம் அதிலுள்ள குறைவான பைட்டோநியூட்ரியன்ட்தான். ஸ்ட்ராபெர்ரியை ஆரோக்கியமான பழமாக மாற்றுவதே அதிலுள்ள பைட்டோநியூட்ரியன்ட்தான். மேலும் இதில் வைட்டமின் சி-யும் குறைவாகவே இருக்கும். எனவே நீங்கள் அதை சாப்பிடுவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.

சோளம்
குளிர்காலத்தில் கிடைக்கும் சோளமானது உங்களுக்கு ஆரோக்கியமான, வயிறை எளிதில் நிரப்பக்கூடிய சுவையான பொருளாக தோன்றலாம். ஆனால் சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டிலுமே குளிர்கால சோளம் மற்ற பருவத்தின் சோளத்துடன் ஒப்பிடும் போது குறைவுதான். குளிர்காலத்தில் கிடைக்கும் சோளத்தை சாப்பிடுவது உங்களுக்கு சில சரும பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதுமட்டுமின்றி வயிற்றுப்போக்கு, மலசிக்கல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.

பால் பொருட்கள்
குளிர்காலத்தில் பால் தொடர்பான தயிர், சீஸ், வெண்ணெய் போன்ற உணவுகளை சாப்பிடுவது உங்கள் சுவாச மண்டலத்திற்கு நல்லதல்ல. பொதுவாகவே பால் பொருட்கள் சுவாச பிரச்சினை, மூக்கடைப்பு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலமென்றாலே சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் எளிதில் ஏற்படும், அப்படியிருக்கும் போது இந்த பருவத்தில் பால் பொருட்கள் சாப்பிடுவது இந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்கும்.

வெள்ளை சர்க்கரை
சாக்லேட், கேக், குளிர்பானங்கள் என அனைத்திலும் பயன்படுத்தப்படும் வெள்ளை சர்க்கரையானது பதப்படுத்தப்பட்ட ஒரு இனிப்பு பொருளாகும். சர்க்கரையானது எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லாமல் உங்கள் வயிறை எளிதில் நிரப்பக்கூடியதாகும். மேலும் இது இரத்த அணுக்கள் மீது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

மிளகாய்
உணவில் அதிகம் மிளகாய் சேர்ப்பது உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும், இது குளிர்காலத்திற்கு சிறந்ததாக தோன்றலாம். அதிக மிளகாய் சாப்பிடுவது உங்கள் உடலை உட்புறமிருந்து அதிக சூடாக்கும், உணவில் மிளகாய் அதிகம் சேர்க்க முக்கிய காரணம் இதுதான். ஆனல் அதிக மிளகாய் சேர்ப்பது உங்களுக்கு குடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல. இதனால் அமிலத்தன்மை அதிகரித்தல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.