Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
உடல் எடையை சீக்கிரமாகவே குறைக்கும் பச்சை ஆப்பிள்..! எப்படினு தெரியுமா...?
கலர் கலர் உணவுகள் அதிக ஆரோக்கியத்தை தர கூடிய இயல்புடையது. குறிப்பாக காய்கறி மற்றும் பழங்களில் இதன் பலன் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வகை கலர் உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை தரும். குறிப்பாக ஆப்பிள் இதில் முதன்மையான இடத்தில் உள்ளது.

இன்று உடல் எடை அதிகரித்ததால் பலர் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளனர். சிலருக்கு வாழ்நாள் முழுக்க எதிர்மறையான பாதிப்பை இந்த உடல் எடை பிரச்சினை தந்துள்ளது. ஆப்பிளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இது பச்சை ஆப்பிளா..? இல்லை சிவப்பு ஆப்பிளா..? என்பதே கேள்வி. இதற்கு சரியான தீர்வையும், எந்த நிற ஆப்பிளில் அதிக சத்துக்கள் உள்ளது என்பதையும் இனி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

வரலாற்று சிறப்புமிக்க ஆப்பிள்..!
எல்லா காலகட்டத்திலும் ஆப்பிளுக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது. ஆதாமின் கதை முதல் உடல் ஆரோக்கியம் வரை அப்பிளின் மகத்துவம் அதிகமானது.
நீங்கள் அன்றாடம் ஆப்பிள் சாப்பிட்டால் எந்தவித நோய்களும் உங்களை அண்டாது என்றே மருத்துவர்கள் கூட சொல்கின்றனர்.

காரணம் என்ன..?
இத்தகைய சிறப்புகளுக்கு காரணம் இதிலுள்ள தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் தான். குறிப்பாக வைட்டமின் எ, வைட்டமின் சி, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், நார்சத்துக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், நீர்சத்து ஆகியவை தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனால், இது இரண்டு வகையான ஆப்பிளுக்கும் மாறுபடும்.

செரிமான கோளாறு
பொதுவாக செரிமான கோளாறை சரி செய்ய என்னென்னவோ செய்வோம். ஆனால், இந்த பிரச்னைக்கு மிக எளிதில் தீர்வை தருகின்றது ஆப்பிள். அதுவும் சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிள் விரைவிலே ஜீரண கோளாறை சரி செய்கின்றது.
தினமும் 1 பச்சை ஆப்பிள் ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், செரிமான கோளாறு உங்களை அண்டாது.

முக்கிய காரணம்...
சிவப்பு ஆப்பிளை விட பச்சை ஆப்பிள் தான் சிறந்தது என்பதற்கான முக்கிய காரணம் இவற்றில் உள்ள குறைவான கார்போஹைட்ரெட் தான்.
அத்துடன் இதில் சர்க்கரை அளவும் குறைவாக தான் இருக்கிறது. மேலும், பச்சை ஆப்பிள் அதிக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களை கொண்டுள்ளதாம்.

கழிவுகளை நீக்க
உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. தினமும் பச்சை ஆப்பிளை சாப்பிட்டு வருவதால் நச்சுக்கள் அனைத்தும் எளிதாக வெளியேறி விடுமாம்.
குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளில் உள்ள அழுக்குகள் விரைவிலே சுத்தமாகி விடும்.

எடையை எளிமையாக குறைக்க...
பலர் இவ்வளவு நாட்களாக காத்திருந்த தீர்வு இந்த பச்சை ஆப்பிளில் உள்ளது. இதை டீ போன்று தயாரித்து, தினமும் குடித்து வந்தால் மிக சீக்கிரத்திலே எடையை குறைத்து விடலாம். இதற்கு தேவையானவை...
ஆப்பிள் 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
இலவங்க பொடி சிறிது

தயாரிப்பு முறை
முதலில் நீரை கொதிக்க விட்டு அதனுள் ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 10 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
இறுதியாக இதனை வடிகட்டி குடிக்கலாம். தினமும் இந்த ஆப்பிள் டீயை குடித்து வந்தால் உடல் எடை எளிதாக குறைந்து விடும்.

தைராய்டு பிரச்சினைக்கு
தைராய்டு சுரப்பி சீராக செயல்படாமல் இருந்தால் அதற்கு பச்சை ஆப்பிள் ஒரு நல்ல மருந்தாக இருக்கும்.
மேலும், வலுவான எலும்புகளையும் இந்த பச்சை ஆப்பிள் தரவல்லது. மூளையின் செயல்திறனை அதிகரித்து ஞாபக சக்தியை கூட்டுகிறது.

இளமையை காக்கும்
பலருக்கு இளமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்யும். இந்த ஆசையை நிறைவேற்றும் பொறுப்பு பச்சை ஆப்பிளிற்கு உள்ளதாம்.
காரணம் இதிலுள்ள எண்ணற்ற அளவிலான வைட்டமின் சி, பி மற்றும் எ தான். மேலும், சருமத்தில் ஏற்படுகின்ற பாதிப்பையும் இந்த பச்சை ஆப்பிள் தடுக்க வல்லது.

இறுதியாக...
எனவே, மேற்சொன்ன காரணங்களின் படி பச்சை ஆப்பிள் தான் சிவப்பு ஆப்பிளை விட ஆரோக்கியமானது. சிவப்பு ஆப்பிளிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளது.
இருப்பினும் பச்சை ஆப்பிளில் தான் அதிக சத்துக்கள் இதை விடவும் உள்ளது. மேலும், இதன் பயன்களும் சிவப்பு ஆப்பிளை விட தனித்துவமானது.



Click it and Unblock the Notifications
