For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் இந்த அளவுக்கு மேல எண்ணெய் சேர்த்துக்கிட்டா அபாயம் நிச்சயம்! அப்போ எவ்வளவு சேர்க்கணும்..?

|

எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவு என்பது மிக அவசியமானதாகும். எப்படி உணவில் இனிப்பு, உப்பு, புளிப்பு போன்றவற்றை அளவோடு சேர்க்கிறமோ, அதே போன்று இந்த எண்ணெய் விஷயத்திலும் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். அதிக எண்ணெய்யை சேர்த்தால் எப்படிப்பட்ட அபாயங்கள் உண்டாகும் என்பது நமக்கே நன்கு தெரிந்த ஒன்று தான். இதில் குறிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு எண்ணெய்யிக்கும் தனி தன்மை உண்டு என்பதை தான்.

தினமும் இந்த அளவுக்கு மேல எண்ணெய் சேர்த்துக்கிட்டா அபாயம் நிச்சயம்! அப்போ எவ்வளவு சேர்க்கணும்?

சில வீடுகளில் சூரிய காந்தி எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். சில வீடுகளில் கடலை எண்ணெய்யையும், சில வீடுகளில் ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. பொத்தாம் பொதுவாக ஒரு நாளைக்கு இவ்வளவு எண்ணெய் தான் சேர்த்து கொள்ள வேண்டும் என நம்மால் கூறி விட இயலாது.

ஒவ்வொரு எண்ணெய்க்கும் அதன் தன்மையை பொருத்து, எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும் என்பதை முதலில் அறிய வேண்டும். இந்த பதிவில் வீடுகளில் நாம் சமைக்க பயன்படுத்தும் பல வித எண்ணெய்களின் தன்மையை பொருத்து அவற்றை எவ்வளவு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் என்ன?

காரணம் என்ன?

ஒவ்வொரு எண்ணெய் வகையின் தன்மையும், அதன் அடர்த்தியும், பண்பும் முற்றிலுமாக மாறுபடும். சில எண்ணெய்யில் நல்ல கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருக்கும்.

சில எண்ணெய்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவில் இருக்கும். இந்த தன்மையை ஆராய்ந்த பிறகு தான், நாம் அவற்றை எவ்வளவு அளவு சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இயலும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

ஆரோக்கியம் அதிகம் கொண்ட தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்க்கும் போது சற்று ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். காரணம் இவற்றில் 90% கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் தான்.

மேலும், இவை நல்ல கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய உதவும். நீங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவராக இருந்தால் 3 அல்லது 4 டீஸ்பூனிற்கு மேல் ஒரு நாளைக்கு பயன்படுத்த கூடாது.

MOST READ: ஏன் சில பிரட்களை பேப்பர் பைகளிலும், சில பிரட்களை பிளாஸ்டிக் பைகளிலும் விற்கின்றனர்..? உண்மை காரணம்?

சூரிய காந்தி எண்ணெய்

சூரிய காந்தி எண்ணெய்

வைட்டமின் ஈ நிறைந்துள்ள சூரிய காந்தி எண்ணெய்யை உணவில் சேர்த்து கொள்வதால் பல நன்மைகள் உண்டாகும். எவ்வளவு தான் சூரிய காந்தி எண்ணெய்யை நாம் சூடு செய்தாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் அப்படியே இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதனை ஒரு நாளைக்கு 3 ஸ்பூன் அளவு எடுத்து கொள்வது சிறந்தது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்ய இந்த ஆல்வி எண்ணெய் உதவுகிறது. சமையலுக்கு மற்ற எண்ணெய் வகைகளை விடவும் இது மிக பொருத்தமாக இருக்கும். இதனை ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவுக்கு சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

பனைமர எண்ணெய்

பனைமர எண்ணெய்

பனம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் அவ்வளவும் நல்லது கிடையாது. உணவில் இந்த வகை எண்ணெய்யை சேர்க்க விரும்பினால் குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது. முடிந்த அளவுக்கு இந்த வகை எண்ணெய்யை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடலை எண்ணெய்

கடலை எண்ணெய்

குறைந்த அளவிலே இதில் கெட்ட நிறையுற்ற கொழுப்புகள் உள்ளன. ஆதலால், இதை சமையலில் பயன்படுத்துவது நல்லது தான். கடலை எண்ணெய்யை 3 ஸ்பூன் அளவு ஒரு நாளைக்கு எடுத்து கொள்ளலாம் என உணவியல் நிபுணர்கள் ஆலோசனை தருகின்றனர்.

MOST READ: சீனர்கள் இந்த புதுவித உப்பை ஏன் உணவில் சேர்க்கறாங்க தெரியுமா? இதில் மறைந்துள்ள இரகசியம் என்ன?

கொட்டைகளில் இருந்து...

கொட்டைகளில் இருந்து...

தாவரங்களின் கொட்டைகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்யானது அந்த அளவிற்கு நல்லது கிடையாது. இந்த வகை எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்தினால் அது பலவித பாதிப்புகளை உண்டாக்கும். இதை வறுத்தல், பொரித்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

ரைஸ் பிரான் எண்ணெய்

ரைஸ் பிரான் எண்ணெய்

அரிசியின் வெளி தோலில் இருந்து பெறப்படுவது தான் இந்த வகை எண்ணெய். இதில் oryzanol என்கிற முக்கிய மூல பொருள் இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்து கொள்ளும்.

இதை சமையலுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். 3 முதல் 4 ஸ்பூன் ரைஸ் பிரான் எண்ணெய் ஒரு நாளைக்கு சிறந்ததாம்.

ஆராய்ச்சி

ஆராய்ச்சி

எந்த வகை எண்ணெய்யாக இருந்தாலும் அவற்றை அளவாக நாம் பயன்படுத்தி வந்தால் எந்த வித பாதிப்புகளும் உண்டாகாது.

ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இதன் அளவு மீறினால் சிலபல அபாயங்கள் நிச்சயம் உண்டாகும் என ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.

MOST READ: தூங்கும்போது விந்து வெளியேறுவதை தடுக்க, இரவில் தேனுடன் இதை கலந்து சாப்பிட்டால் போதும்!

பாதிப்புகள்

பாதிப்புகள்

எண்ணெய்யை உணவில் அதிக அளவில் சேர்த்து கொண்டால் முதலில் வர கூடிய பாதிப்பு கொலஸ்ட்ரால் தான். பிறகு உடல் எடை கூடுதல், இதய நோய்கள், மாரடைப்பு, இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக உண்டாகும். இதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Much Cooking Oil Should Consume In A Day?

This article explains about How much cooking oil can you consume in a day?
Desktop Bottom Promotion