Latest Updates
-
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
L- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா?
L- லூசின் என்பது அத்தியாவசியமான அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இது அத்தியாவசியம் என்று கூற காரணம் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க இது அவசியமான ஒன்றாகும்.
நமது உடல் என்பது பல ஆச்சரியங்கள் நிறைந்ததாகும். நமது உடலுக்கு எவையெல்லாம் ஆரோக்கியத்தை வழங்கும், எவையெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆராய்ச்சிகளுக்கு முடிவேயில்லை. நமக்கு ஆரோக்கியம் மற்றும் உடலமைப்பிற்கு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பது குறித்து நாம் முதலில் தெளிவாக இருக்க வேண்டும்.

நமக்கு ஆரோக்கியத்தை வழங்கும் பொருள்களில் பல பொருட்கள் பற்றி நமக்கே தெரியாது. அதில் மிகவும் முக்கியமான ஆனால் நமக்கு தெரியாத ஒரு பொருள் L- லூசின் ஆகும். இந்த பதிவில் L - லூசின் என்றால் என்ன அது நமக்கு வழங்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

L- லூசின் என்றால் என்ன?
L- லூசின் என்பது அத்தியாவசியமான அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இது அத்தியாவசியம் என்று கூற காரணம் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க இது அவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை நம் உடல் உற்பத்தி செய்யாது, இதனை நாம் நமது டயட் மூலமாகத்தான் பெற முடியும். L- லூசின் போன்ற அமினோ அமிலங்கள்தான் புரோட்டினை உருவாக்க உதவுகிறது. புரோட்டின் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நன்கு அறிவோம்.

லூசினின் வகைகள்
லூசினில் மொத்தம் இரண்டு வகைகள் உள்ளது. L- லூசின் என்றால் அது இயற்கையாக உணவில் இருந்து பெறப்படுவதாகும். D- லூசின் என்றால் அது ஆய்வங்களில் உருவாக்கப்படும் ஒன்றாகும்.

L- லூசினின் பயன்கள்
ஆற்றலை அதிகரிப்பதுதான் L - லூசினின் அடிப்படை பணியாகும். இது உடற்பயிற்சி செய்வதற்கு போதுமான ஆற்றலையும், உடற்பயிற்சியால் ஏற்பட்ட களைப்பிலிருந்தும் மீட்க இந்த L- லூசின் அவசியமாகும்.

பழுதான தசைகளை சரிசெய்யும்
ஆய்வுகளின் படி L- லூசின் பழுதான தசைகளை சரிசெய்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உடல்நிலை மோசமாவதால் ஏற்படும் தசைகளின் பலவீனத்தை L- லூசின் அதிகரிக்கும்.

வலிமைப்படுத்தும்
இது உங்களின் பளுதூக்கும் சக்தியை அதிகரிக்கிறது, உங்கள் தசைகளின் அளவை அதிகரிக்காமலே L- லூசின் செய்யக்கூடும். எடையை பராமரிக்கவும், எடையை தூக்கவும், விளையாட்டு வீரர்கள் இதைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள்.

கொழுப்பு அளவை அதிகரிக்கும்
ஆய்வுகளின் படி L- லூசின் அமினோ அமிலம் உங்கள் உடலில் நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கிறது. இது உங்களின் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் ஆர்த்தோகுளோரோசிஸ், மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

எடை குறைப்பு
போதுமான உடற்பயிற்சியுடன் லூசினை சேர்த்து கொள்ளும்போது அது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் எடை குறைப்பிற்கும் வழிவகுக்கும்.

லூசின் இருக்கும் உணவுகள்
புரோட்டின் இருக்கும் உணவுகள் அனைத்திலும் லூசின் இருக்கும். பாதம், நிலக்கடலை போன்ற தானியங்கள், சோயா, ப்ரோக்கோலி, அமினோ அமிலங்கள் இருக்கும் பழங்கள் போன்றவற்றில் இது லூசின் அதிகமிருக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் இதனை பவுடர் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
