For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அடிக்கடி சாப்பிடும் இந்த உணவு உங்கள் ஆயுளில் நான்கு ஆண்டுகளை குறைக்குமாம் தெரியுமா?

சில உணவுகளை அவை கெடுதல் என தெரியாமல் நாம் சாப்பிடுகிறோம், ஆனால் சில உணவுகளை அவை ஆரோக்கியத்திற்கு கேடு என தெரிந்தே நாம் சாப்பிடுகிறோம்.

|

நம் முன்னோர்கள் காலத்தில் நோய்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. இப்போது வாழும் மக்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் காட்டிலும் பழங்காலத்தில் வாழ்ந்தவர்களின் ஆயுள் அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் அவர்களிடம் இருந்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம்தான். ஆனால் இன்று நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள்தான் நமது ஆரோக்கியத்தையே கெடுக்கின்றன.

foods that might take years off your life

சில உணவுகளை அவை கெடுதல் என தெரியாமல் நாம் சாப்பிடுகிறோம், ஆனால் சில உணவுகளை அவை ஆரோக்கியத்திற்கு கேடு என தெரிந்தே நாம் சாப்பிடுகிறோம். இந்த வகையான உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமின்றி உங்கள் ஆயுளையும் குறைக்கவல்லது. இந்த பதிவில் நீங்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் உங்கள் ஆயுளை குறைக்கக்கூடியவை என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை பானங்கள்

சர்க்கரை பானங்கள்

சோடா அதிகம் சேர்க்கப்படும் குளிர்பானங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதற்கு மாற்றாக வேறு பானத்தை குடிக்க தொடங்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இந்த வகை குளிர்பானங்கள் உங்கள் ஆயுளையும் விரைவில் குறைக்கக்கூடும். ஒரு நாளைக்கு 24 அவுன்ஸ் குளிர்பானங்கள் குடிக்கும் போது அது உங்கள் நுரையீரல் பாதிப்புகளை இருமடங்காக அதிகரிக்கும். மற்றொரு ஆய்வின்படி சோடா அதிகம் குடிப்பது உங்கள் செல்களின் வயதை அதிகரிக்கும். இதனை அதிகம் குடிப்பது உங்கள் வாழ்நாளில் நான்கு ஆண்டுகளை குறைக்கக்கூடும்.

செயற்கை இனிப்புகள்

செயற்கை இனிப்புகள்

உங்கள் ஆயுளில் செயற்கை இனிப்புகள் எத்தனை ஆண்டுகளை குறைக்கும் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் இதனால் ஆயுள் குறையும் என்பதில் சந்தேகமேயில்லை. இதனால் எடை அதிகரிப்பு, இதய கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மற்றொரு ஆய்வின்படி செயற்கை இனிப்புகள் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதோடு டிமென்ஷியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உப்பு உணவுகள்

உப்பு உணவுகள்

உப்பு உணவின் சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான பொருளாகும். அதேசமயம் அதிகளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரிய பிரச்சினைகளை உண்டாக்கும். அதிகளவு சோடியம் சேர்த்து கொள்வது உங்களுக்கு கார்டியோவாஸ்குலர் பிரச்சினை, வயிற்று புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதிகளவு சோடியம் உங்கள் செல்களின் வயதை அதிகரிக்கும், நம் உடலுக்கு கேடுவிளைவிக்கும் உப்புகளில் 70 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து கிடைக்கிறது.

பதப்படுத்தப்பட்ட நொறுக்கு தீனிகள்

பதப்படுத்தப்பட்ட நொறுக்கு தீனிகள்

அனைத்து நொறுக்குத்தீனிகளும் அது தயாரிக்கப்பட்ட இடத்திலிருந்து கடைக்கு செல்லும்வரை இடையே அது கெட்டுப்போகாமல் இருக்க பல வேதியியல் பொருட்களையும், செயற்கை பொருட்களையும் சேர்த்து அனுப்புவார்கள். மேலும் இதனை அதிகளவில் பதப்படுத்தி வைத்திருப்பார்கள். ஆய்வுகளின் படி இந்த உணவுகள் அதிகம் சாப்பிடும்போது இது புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. வயது, பாலினத்தை பொருத்தெல்லம் இது மாறாது, இந்த உணவுகளை சாப்பிடும் அனைவருக்கும் ஆயுளில் கணிசமான ஆண்டுகள் குறையும்.

MOST READ: உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் செல்வம் சீர்குலைய உங்களின் இந்த சின்ன தவறுகள்தான் காரணம்..!

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாப்பிடுவது உங்கள் ஆயுளை குறைப்பதுடன் தொடர்புடையது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுபவர்களுக்கு இதய கோளாறு ஏற்படும் வாய்ப்பு 72 சதவீதமும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 11 சதவீதமும் அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது.

கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள்

கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகள்

கார்போஹைட்ரேட் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருந்தாலும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் உங்கள் ஆயுளை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் உங்கள் ஆயுளில் நான்கு ஆண்டுகளை குறைக்கக்கூடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

இது மிகவும் விவாதத்திற்கு உரிய பொருளாகும். ஏனென்றால் சில ஆய்வுகள் குறைவாக குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. சில ஆய்வுகள் ஆல்கஹால் குடிப்பது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் என்று கூறுகிறது. சமீபத்திய ஆய்வில் வாரத்திற்கு 100 கிராம் அளவு ஆல்கஹால் குடிப்பது உங்கள் வாழ்நாளில் ஆறுமாதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள்

புற்றுநோயை உண்டாக்கும் உணவுகள்

உங்கள் இதயத்தை பாதிக்கும் உணவுகள் பெரும்பாலும் இலவச இணைப்பாக புற்றுநோயையும் உண்டாக்கும். ஆல்கஹால், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பார்பிக்யூ உணவுகள் அனைத்திலும் கார்சினோஜெனிக் என்னும் பொருள் உள்ளது. இது புற்றுநோயை உண்டாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதிக வெப்பநிலையில் இறைச்சியை வேகவைப்பது, அதிகளவு ஆல்கஹால் அருந்துவது போன்றவை கல்லீரல், புரோஸ்ட்ரேட், வயிறு போன்ற புற்றுநோய்களை உண்டாக்கும்.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது முள்ளங்கி சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆகும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health healthy foods
English summary

foods that might take years off your life

Food is the main source of our healthy long life. But unfortunately some foods might might take years of our life.
Desktop Bottom Promotion