For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள இந்த சாதாரண உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!

சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுகளால் இரத்தத்தில் சிறுநீர், அதிக காய்ச்சல், முதுகு வலி, பசியின்மை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.

|

நமது உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுவது என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நச்சுப்பொருட்கள் வெளியேறாமல் இருக்கும் போது அது நமது உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. உடலில் இருக்கும் பெரும்பாலான நச்சுப்பொருட்கள் சிறுநீர் வழியாகத்தான் வெளியேற்றப்படுகிறது.

Daily Habits to Prevent Recurrent UTIs

சிறுநீர்பாதையில் ஏற்படும் தொற்றுகளால் இரத்தத்தில் சிறுநீர், அதிக காய்ச்சல், முதுகு வலி, பசியின்மை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை அறிகுறிகள் வைத்து கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆன்டி பயாடிக் மருந்துகள் உடனடி நிவாரணத்தை வழங்கும், ஆனால் இதனை மீண்டும் மீண்டும் தடுப்பது என்பது மிகவும் கடினமாகும். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி இந்த தொற்றுநோயை வராமல் தடுக்கும் வழிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிறைய தண்ணீர் குடிக்கவும்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

இதுதான் உங்கள் சிறுநீரக பாதையை பாதுகாக்கும் அடிப்படை மந்திரமாகும். தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேயேற்றும். இது தொற்று ஏற்படுவதை தடுக்கும். ஆல்கஹால், கார்பனேட் குளிர்பானங்கள், காஃபைன் போன்றவற்றை தவிர்க்கவும்.

யோகர்ட்

யோகர்ட்

உங்கள் தினசரி உணவில் குறைந்தது ஒரு கப் யோகார்ட்டாவது சேர்த்து கொள்ளுங்கள். இதில் இருக்கும் ப்ரோபையோட்டிக்குகள் உங்கள் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும். மேலும் கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றவும் உதவும்.

உரா உர்சி

உரா உர்சி

உரா உர்சி அதன் குணப்படுத்தும் பண்புகள் காரணமாக பல சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. காயவைத்த இந்த இலைகளை தேநீர் இலைகளுடன் சேர்த்து தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கவும். இது உடனடி பலன்களை கொடுக்கும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி

தினமும் உங்கள் உணவில் வைட்டமின் சி உள்ள உணவுகளை சேர்த்து கொள்வது உங்களை சிறுநீர்ப்பாதை தொற்று நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும். வைட்டமின் சி சிறுநீரில் அமிலத்தன்மையை அதிகரிக்க பயன்படுகிறது. மேலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.

MOST READ: உங்கள் ராசிப்படி உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கும் தெரியுமா?

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

இதில் பல ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது இதனால் இது உடலில் இருக்கும் தீமையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்றி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வெளியேற்ற இது உதவுகிறது. தினமும் எலுமிச்சை சாறு குடிப்பது உங்களை அனைத்து தொற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது, இது உங்கள் உடலுக்கு கூடுதல் நீரை பெற்றுத்தருவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நீங்கள் அதிகளவு நீர் குடிக்காத போது கண்டிப்பாக உங்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோய் ஏற்படும். அதிகளவு நீர் குடிக்க இயலாதபோது வெள்ளரிக்காயை சாப்பிடுங்கள்.

க்ரான்பெரி ஜுஸ்

க்ரான்பெரி ஜுஸ்

க்ரான்பெரி ஜுஸ் என்பது சிறுநீர்ப்பாதை தொற்றுநோய்க்கான சிறந்த மருந்தாகும். தினமும் அரை கிளாஸ் க்ரான்பெரி ஜுஸ் குடிப்பது உங்களை சிறுநீர்ப்பாதை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும். இதனை எப்போதும் சர்க்கரை இல்லாமல்தான் குடிக்க வேண்டும் ஏனெனில் சர்க்கரை சிறுநீர்ப்பாதை தோற்று ஏற்படுவதற்கான முக்கியமான காரணம் ஆகும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தினமும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடியுங்கள். இது சிறுநீர்ப்பாதை தொற்றுநோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கிறது. இதனை மருத்துவரிடம் கேட்டு கொண்ட பிறகு செய்யுங்கள் ஏனெனில் இது உங்கள் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

MOST READ: இந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்வில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

ஆய்வுகளின் படி பேக்கிங் சோடா சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் என்று கூறுகிறது. இது தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Prevent recurrent UTI's with Daily Habits

It is difficult to prevent the UTI infection from recurring again and again. Check out the daily habits to prevent UTI infection.
Story first published: Tuesday, May 21, 2019, 14:30 [IST]
Desktop Bottom Promotion