For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் பத்து பெண்களில் ஒரு பெண்ணுக்கு இந்த பாலியல் நோய் உள்ளதாம்...காரணம் என்ன தெரியுமா?

ஹைபோஆக்டிவ் பாலியல் குறைபாடு என்பது பெண்களிடையே காணப்படும் ஒரு பாலியல் குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ள பெண்களுக்கு உறவில் ஈடுபட விருப்பம் இருக்காது.

|

பாலியல் உறவு என்பது ஆண், பெண் இருவருக்குமே மிகவும் அவசியமான ஒன்றாகும். இது அவசியம் என்பதை காட்டிலும் ஆரோக்கியம் என்றே கூட சொல்லலாம். ஏனெனில் உடலுறவில் ஈடுபடுவதால் ஆண்,பெண் இருவருக்கும் அளவற்ற நன்மைகளை வழங்குக்கூடியதாகும். ஆனால் இதன் மூலம் சில நோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. சிலருக்கு உடலுறவால் பிரச்சினை,சிலருக்கோ உடலுறவில் ஈடுபடுவதே பிரச்சினை.

Causes And Treatment Of Hypoactive Sexual Desire Disorder

உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சினை என்பது ஆண், பெண் இருவருக்குமே ஏற்படும் பிரச்சினையாகும். இந்த பிரச்சினை ஏற்பட பல காரணங்கள் உள்ளது. ஆண்களுக்கு மட்டுமே அதிகம் இருந்த இந்த பிரச்சினை இப்பொழுது பெண்களுக்கும் அதிகம் ஏற்பட தொடங்கிவிட்டது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பத்தில் ஒரு பெண்ணுக்கு ஹைபோஆக்டிவ் என்னும் பாலியல் நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைபோஆக்டிவ் பாலியல் குறைபாடு

ஹைபோஆக்டிவ் பாலியல் குறைபாடு

ஹைபோஆக்டிவ் பாலியல் குறைபாடு என்பது பெண்களிடையே காணப்படும் ஒரு பாலியல் குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ள பெண்களுக்கு உறவில் ஈடுபட விருப்பம் இருக்காது. அவர்களுக்கு பாலுறவை பற்றிய நினைப்பும் இருக்காது, ஒருவேளை உறவில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு அது மகிழ்ச்சியானதாக அமையாது. இந்த நோய் உள்ள பெண்க;ளுக்கு உறவில் ஈடுபட பதட்டமும், பயமும் இருக்கும். இது உடலளவிலும், மனதளவிலும் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஹைபோஆக்டிவ் நோய் இருப்பதற்கான காரணங்கள் என்னவென்று மேற்கொண்டு பார்க்கலாம்.

பிறப்பு கட்டுப்பாடு

பிறப்பு கட்டுப்பாடு

பிறப்பு கட்டுப்பாடு முறைகள் என்பது பெண்கள் சமீப காலத்தில் குழந்தை பிறப்பதை தள்ளிப்போட பயன்படுத்தும் ஒரு முறையாகும். பிறப்பு கட்டுப்பாட்டில் பல முறைகள் உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பை தள்ளிப்போட மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்கள் தங்களுக்கு உறவில் ஈடுபடும் ஆசைகள் குறைவதாக கூறியுள்ளார்கள். இந்த மாத்திரைகள் பெண்களின் ஹார்மோன்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே மற்ற பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளுக்கு செல்வது நல்லது.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

மனஅழுத்தத்தை எதிர்கொள்ள பெண்கள் எடுத்து கொள்ளும் மாத்திரைகள் பெண்களின் பாலுணர்வையும், உச்சக்கட்டம் அடைவதையும் பெரிதும் பாதிக்கும். இது மனஅழுத்தத்தால் ஏற்படும் பலருக்கும் தெரியாத ஒரு பக்கவிளைவாகும். இந்தியாவில் எட்டு பெண்களில் ஒரு பெண் மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். இது தங்களின் பாலியல் ஆசைகளை எப்படி குறைக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

MOST READ: ஆண்களே! இந்த பெண்களை ஒருபோதும் 'நெருங்காதீர்கள்' மீறினால் உங்களுக்கு நரகம்தான்...!

மெனோபாஸ்

மெனோபாஸ்

90 சதவீத பெண்களுக்கு மெனோபாசை நெருங்கும் போது அவர்கள் தங்கள் பாலியல் ஆசையை இழந்து விடுவதாக கூறிவிடுகிறார்கள். ஒருவேளை அவர்களின் கணவருக்கு பாலியல் ஆசைகள் குறையாமல் இருந்தால் அது அவர்கள் வாழ்வில் பல பிரச்சினைகளை உண்டாக்கும்.

மாதவிடாய்க்கு பிந்தைய காலம்

மாதவிடாய்க்கு பிந்தைய காலம்

வயது பெண்களின் பாலியல் ஆசைகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பெண்கள் வயது அதிகரிக்கும் போது அது அவர்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பின் அளவை குறைக்கிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது அது பாலியல் ஆசைகளை குறைப்பதுடன் பெண்ணுறுப்பில் வறட்சியையும் ஏற்படுத்தும்.

மோசமான அனுபவங்கள்

மோசமான அனுபவங்கள்

ஹைபோஆக்டிவ் நோய் கடந்தகால மோசமான அனுபவங்களால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. பாலியல் கொடுமை, கற்பழிப்பு, அல்லது உடலுறவு கொள்வது பாவச்செயல் போன்று சித்தரிக்கப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்தது என இந்த நோய் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. இந்த பிரச்சினைகளால் HSDD நோய் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு மனரீதியான சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும்.

வலி நிறைந்த உறவு

வலி நிறைந்த உறவு

HSDD-க்கு முக்கியமான காரணமாக இருப்பது உறவில் ஈடுபடும்போது ஏற்படும் வலி ஆகும். இதனால் அவர்களுக்கு பாலியல் ஆசை குறைவதுடன் வெறுப்பும் உண்டாகும். எண்டோமெட்ரோசிஸ், இடுப்பு அழற்சி நோய், பிற தொற்றுநோய்கள் போன்றவற்றால் வலி நிறைந்த உறவு ஏற்படலாம். இது போன்ற பிரச்சினைகளுக்கு பாலியல் மருத்துவரை அணுக வேண்டியது கட்டாயமாகும்.

MOST READ: இந்த 2019 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்... இதோ தெரிஞ்சிக்கங்க

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

HSDD நோய்க்கு அனுமதி அளிக்கப்பட்ட ஒரு மருந்து என்றால் அது பில்பான்செரின் மட்டும்தான். இது பெண்களின் வயகரா என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது பெண்களின் பாலியல் ஆசைகளை தூண்டும். ஆனால் இதனை எடுத்துக்கொள்ள சில விதிமுறைகள் உள்ளது. மது அருந்தும் போது இதனை எடுத்துக்கொள்ள கூடாது, மெனோபாஸை அடைந்த பெண்கள் இதனை எடுத்துக்கொண்டாலும் பயன் இருக்காது. இது தவிர சில உளவியல்ரீதியான சிகிச்சைகளும் ஹஸ்ட்ட் நோய்க்காக வழங்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: women sex உடலுறவு
English summary

Causes And Treatment Of Hypoactive Sexual Desire Disorder

Check out the reasons for the causes and the treatment of Hypoactive sexual disorder.
Desktop Bottom Promotion