For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...!

நீங்கள் எவ்வளவு உயர்தர, விலையுயர்ந்த சரும பராமரிப்பை மேற்கொண்டாலும் நீங்கள் சரியான டயட்டை பின்பற்றாவிட்டால் அது உங்கள் சருமத்தின் மீது எதிரொலிக்கும்.

|

சரும ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு முக்கியாமான ஒன்றாகும். குறிப்பாக பெண்களுக்கு சரும ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொலிவில்லாத சருமம் பெண்களின் தன்னம்பிக்கையை சிதைக்கக்கூடிய ஒன்றாகும். ஆரோக்கியமான சருமத்திற்காக பெண்கள் செலவிடும் தொகை என்பது மிகவும் பெரியதாகும். அதற்கான அழகுப்பொருட்கள் தயாரிப்பு என்பது இன்றைய உலகில் மிகப்பெரும் வியாபாரமாக இருக்கிறது.

Benefits of Zinc for healthy skin

பெண்களுக்கு அடிக்கடி சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகளான பருக்கள், கொப்புளங்கள், அலர்ஜிகள், பொலிவின்மை போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த பல அழகுசாதன பொருட்கள் உள்ளது. ஆனால் இவை இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாலேயே இந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கலாம். இந்த பதிவில் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் ஊட்டச்சத்தான ஜிங்க் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டயட்

டயட்

நீங்கள் எவ்வளவு உயர்தர, விலையுயர்ந்த சரும பராமரிப்பை மேற்கொண்டாலும் நீங்கள் சரியான டயட்டை பின்பற்றாவிட்டால் அது உங்கள் சருமத்தின் மீது எதிரொலிக்கும். குறைபாடற்ற சருமத்தை அடைவதற்கான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டயட்டின் முக்கியத்துவத்தை உணர வேண்டியது அவசியமாகும். உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து எது அதனை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

நீர்ச்சத்து

நீர்ச்சத்து

நீங்கள் நினைத்த சருமத்தை அடைய உங்கள் உடலுக்கு போதுமான நீர்ச்சத்து அவசியமாகும். எனவே உங்கள் உடலில் எப்பொழுதும் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான டயட் மட்டுமின்றி உங்கள் உடலில் ஆன்டிஆக்சிடண்ட்களின் அளவை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜிங்க்

ஜிங்க்

ஆரோக்கியமான டயட் என்று நம் வடிவமைக்கும் போது அதில் நாம் அதிகம் புறக்கணிக்கும் ஊட்டச்சத்து என்றால் அது ஜிங்க்தான். குறிப்பாக சருமத்திற்கான டயட் என்று வரும்போது பலரும் இதனை கண்டுகொள்வதில்லை. அதற்கு காரணம் ஜிங்க்-ன் அற்புத பலன்கள் பற்றி பலரும் அறியாததுதான்.ஜிங்கில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் நமது உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகளுக்கு எதிராக போராடுவதுடன் சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. இந்த ஊட்டச்சத்தை தொடர்ச்சியாக சேர்த்து கொள்வதுசருமத்தை பொலிவாகவும், இளமையாகவும் காட்டுவதுடன் பருக்கள், வறட்சி போன்ற பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

பயன்கள்

பயன்கள்

ஜிங்க் பல்வேறு செல்களின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகிறது. இதனால் உங்களுடைய நோயெதிர்ப்பு சக்தியும், வளர்ச்சிதை மாற்றமும் அதிகரிக்கும். நமது சருமத்தில் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட முக்கிய காரணம் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசைதான். ஜிங்கை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளும்போது அது உங்கள் எண்ணெய் சுரப்பிகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதன் மூலம் அடிக்கடி சருமம் எண்ணயை வெளியேற்றுவதை தடுக்கிறது. இதன் முக்கிய பணி உங்கள் சருமத்தை பாதிக்கும் புறஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாப்பதாகும்.

MOST READ: இந்த ராசிக்காரங்க மத்தவங்க மனசுல இருக்கறத ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க... உஷாரா இருங்க...!

புறஊதா கதிர்கள்

புறஊதா கதிர்கள்

தீனி விளைவிக்கும் சூரிய கதிர்கள்தான் சருமத்திற்கு முதல் எதிரி ஆகும். சருமத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுதான் அவற்றின் முதல் பணியாகும். ஜிங்க் ஆக்ஸைடு இருக்கும் உணவுப்பொருட்கள் உங்களை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது. மேலும் இது சேதமடைந்த செல்களையும் விரைவில் குணப்படுத்தும் வேலையை செய்கிறது. மேலும் ஜிங்க் உங்களின் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன் அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கும். ஜிங்க் எந்தெந்த உணவுகளில் அதிகம் இருக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

இறைச்சிகள்

இறைச்சிகள்

ஜிங்க் அதிகம் இருக்கும் உணவுகளில் முதல் இடத்தை பிடிப்பது இறைச்சிதான். நீங்கள் அசைவ உணவு பிரியராக இருந்தால் சிக்கனிற்கு பதிலாக மட்டனை அதிகம் சாப்பிடவும். இது உங்கள் உடலுக்கு தேவையான ஜிங்கை வழங்கும்.

முந்திரி

முந்திரி

ஜிங்க் ஊட்டச்சத்து வேண்டுமென்று நினைப்பவர்கள் முந்திரியை தாராளமாக சாப்பிடலாம். ஜிங்க் மட்டுமின்றி இந்த சுவையான பருப்பில் மக்னீசியம், இரும்புசத்து மற்றும் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது.

பயிறு வகைகள்

பயிறு வகைகள்

நீங்கள் சைவ உணவு சாப்பிடுவிப்பவராக இருந்தால் ஜிங்க் ஊட்டச்சத்தை பெற பயிறு வகைகளை சாப்பிடுங்கள். இதனை தினசரி உணவில் சேர்த்து கொள்வது உங்கள் உடலுக்கு தேவையான ஜிங்க் ஊட்டச்சத்தை கொடுப்பதுடன் நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலையும் கொடுக்கிறது.

MOST READ: இந்த நாட்களில் அசைவ உணவு சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையில் நிரந்தர வறுமையை ஏற்படுத்தும் தெரியுமா?

ஓட்ஸ் மற்றும் குயினோ

ஓட்ஸ் மற்றும் குயினோ

முழு தானிய வகைகளை சேர்ந்த ஓட்ஸ மற்றும் குயினோ போன்றவை ஜிங்க் அதிகமிருக்கும் பொருட்களாகும். இவற்றை உங்கள் உணவில் எளிதாக நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். சுவையான உணவாக இருப்பதுடன் இவை உங்களை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits of Zinc for healthy skin

Check out how zinc help us to get a healthy skin.
Story first published: Monday, June 24, 2019, 14:59 [IST]
Desktop Bottom Promotion