For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் தூங்கும் நிலை, உங்களுக்கு என்னென்ன பலன்கள் தருகிறதுனு தெரியுமா...?

|

இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனி பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இது கட்டாயம் மனிதனுக்கு மனிதன் மாற தொடங்கும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் வாக்கிங் செல்ல வேண்டும் என்ற பழக்கம் இருக்கும். சிலர் வலது கை பழக்கமுள்ளவராக இருப்பார். சிலர் எதை பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்.

நீங்கள் உறங்கும் நிலை உங்களை பற்றி கூறும், சுவாரசிய தகவல்கள் என்னனு தெரியுமா..?

இப்படி பல வகையான பழக்க வழக்கங்களில் தூங்கும் பழக்கமும் அடங்கும். ஒருவர் உறங்கும் நிலையே அவர் எத்தகையவர் என்பதையும், எத்தகைய ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதையும் கூறுமாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை இனி இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நிம்மதியான நித்திரை...!

நிம்மதியான நித்திரை...!

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது இந்த தூக்கம் தான். தூக்கத்தை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார். காலை முதல் மாலை வரை மிகவும் உழைத்து களைத்து போன ஜீவ ராசிகள் தூக்கத்தின் மூலமாக தான் நிம்மதியை பெறுகின்றனர். இந்த தூக்கம் பல வகை படுமாம்.

தூக்கத்தின் வகைகள் தெரியுமா..?

தூக்கத்தின் வகைகள் தெரியுமா..?

தூக்கமானது பல வகையாக பிரிக்க படுகிறது. தூக்கத்தை நீண்ட நேரம் எடுத்து கொண்டால், அது ஆழ்ந்த தூக்கமாக கருதப்படும். வெறும் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் தூங்கினால் "குட்டி தூக்கமாக" கருதப்படும். சிலர் கண்ணை திறந்து கொண்டே தூங்கும் பழக்கத்தை கொண்டிருப்பார். இது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குழந்தையை போல தூங்கும் நிலை...

குழந்தையை போல தூங்கும் நிலை...

இது மிகவும் சிறப்புமிக்க தூங்கும் நிலையாகும். கருவில் உள்ள குழந்தையை போன்று தூங்குவதே இந்த நிலை. கால்களை குறுக்கி கொண்டு தூங்கும் நீங்கள், மிகவும் தீர்க்கமான எண்ணத்தை உடையவர். அத்துடன் மிகவும் மென்மையான மனதை நீங்கள் கொண்டவர்கள். மேலும், சிறிது தயக்க குணம் மற்றும் மிகவும் நட்புணர்வு கொண்டவரும் ஆவர்.

ஆரோக்கிய பயன்...

ஆரோக்கிய பயன்...

இந்த குழந்தையை போன்று தூங்கும் நிலையை கொண்டோர்க்கு சில ஆரோக்கிய பயன்களும் இருக்கின்றன. குறிப்பாக இவர்கள் வலது பக்கம் உறங்கினால் கல்லீரல், நுரையீரல், வயிற்று பகுதி ஆகியவற்றிற்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இதுவே, இடது பக்கம் இந்த நிலையில் தூங்கினால் அவ்வளவும் நல்லது கிடையாது.

MOST READ: 2 வாரத்தில் சட்டென தொப்பையை குறைக்க இந்த எண்ணெய்யை தொப்பையில் தடவுங்க போதும்..!

போர் வீரர் நிலை..!

போர் வீரர் நிலை..!

பலர் இந்த நிலையில் தூங்குவது உண்டு. மக்கள் தொகையில் வெறும் 8% மக்களே இந்த நிலையில் உறங்குவாதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. உடல் முழுவதையும் நேராக வைத்து கொண்டு இந்த நிலையில் தூங்குவர். அதிக ஒழுக்கங்களை இந்த நிலையில் உறங்குபவர்கள் கடைபிடிப்பர். மேலும், சிறு சிறு விஷயத்துக்காக கோபம் கொள்ள மாட்டர்கள்.

ஆரோக்கிய பயன்...

ஆரோக்கிய பயன்...

இந்த நிலையில் நீங்கள் உறங்கினால் உங்களது உடலுக்கு சில விளைவுகள் ஏற்பட கூடும். குறிப்பாக குறட்டை விடும் பழக்கம், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட கூடும். மேலும், வேறு சில பக்கம் தூங்கினால் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

சுதந்திர தூக்க நிலை...

சுதந்திர தூக்க நிலை...

பெரும்பாலானோர் இந்த நிலையில் தான் தூங்குவர். மக்கள் தொகையில் 7% மக்கள் இந்த நிலையில் தூங்குவார்கள். குப்பற படுத்து கொண்டு, தலையை மட்டும் வலது அல்லது இடது பக்கம் திருப்பி கொண்டு தூங்குவார்கள். இப்படி தூங்குவார்கள் சற்றே அடம்பிடிப்பவர்களாக இருப்பர். மேலும், இவர்களை சமாளிப்பதும் சிரமம் தான்.

ஆரோக்கிய பயன்...

ஆரோக்கிய பயன்...

இந்த நிலையில் உறங்கினால் செரிமான கோளாறுகள் இல்லாமல் இருக்கும். மேலும், சுவாச மண்டலத்தை சீராக வைத்து கொள்ளும். எனவே, இது ஆரோக்கியமான நிலையாகவே கருதப்படுகிறது. அத்துடன், நன்றாக மூச்சும் விட முடியுமாம்.

MOST READ: இந்த நடிகைகள் எல்லாம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

கைக்குள் கை...!

கைக்குள் கை...!

13% மக்கள் இந்த நிலையில் தூங்குகின்றனர். அதாவது ஏதோ ஒரு பக்கம் திரும்பி கொண்டு, இரு கைகளையும் கோர்த்த படி அல்லது மேலே பார்த்த படி உறங்கும் நிலை தான் இது. இவர்கள் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்க கூடிய தன்மை கொண்டவர்கள்.

ஆரோக்கிய பயன்...

ஆரோக்கிய பயன்...

தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு இந்த நிலை தூக்கம் சிறந்த முறையாகும். மேலும், இந்த நிலை தூக்கம் உடலுக்கு மிகவும் மென்மையாகவும், இதமாகவும் இருக்கும். சுவாச பிரச்சினை கொண்டோர்க்கு இந்த தூக்க நிலை சிறந்ததாகும்.

ஸ்டார் மீன் தூக்கம்...!

ஸ்டார் மீன் தூக்கம்...!

வலது அல்லது இடது பக்கம் காலை சற்றே மேலே தூக்கி கொண்டு உறங்கும் இந்த நிலையை ஸ்டார் மீன் போன்ற தோற்றமாக இருக்கும். இவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் வட்டம் இருக்குமாம். மேலும், நல்ல கவனிப்பு திறனும் உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள் இவர்கள்.

ஆரோக்கிய பயன்...

ஆரோக்கிய பயன்...

இந்த நிலை தூங்குபவர்கள் தூக்கத்தை அனுபவித்து தூங்குவதில்லையாம். மேலும், இவர்களுக்கு குறட்டை அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த நிலை இருந்து வேறு நிலைகளில் உறங்கினால் பிரச்சினைகள் இல்லாமல் இருக்கலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

MOST READ: அந்த' காட்சியை ஷூட் செய்யும் போது, உண்மையில் என்ன நடக்கும்? நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Your Sleeping Position Tells About Your Personality And Health

The sleep position is a curious yet deep aspect of human personality. It is something that is so personal and basic that even babies have their unique sleep positions.
Desktop Bottom Promotion