For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்?

கீழ்வரும் சில அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து, மக்னீசியத்தின் அளவை கவனிப்பது நல்லது.

By Mahi Bala
|

மக்னீசியம் என்பது மனித உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவுகின்ற வகையில் பல தேவைகளை நிறைவு செய்வதற்கான ஒருவகை மினரல் ஆகும். நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தான மக்னீசியம் பற்றாக்குறையை நம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

what are the symptoms of magnesium deficiency

கீழ்வரும் சில அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது ரத்தப் பரிசோதனை செய்து பார்த்து, மக்னீசியத்தின் அளவை கவனிப்பது நல்லது. ஒருவேளை மக்னீசியம் குறைவாக இருந்தால், அதை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

நம்முடைய உடலில் உண்டாகும் சில அறிகுறிகளை வைத்தே நம் உடலில் மக்னீசியம் குறைபாடு இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். அவை என்னவென்று பார்ப்போம்.

மூட்டுவலி

அடிக்கடி தசை பிடிப்புகள் ஏற்படுதல்

சீரற்ற இதயத் துடிப்பு

உயர் ரத்த அழுத்தம்

அடிக்கடி தலைவலி ஏற்படுவது

வாயைச் சுற்றிலும் வெள்ளைப்படலம் ஏற்படுதல்

கண்ணிமைகளில் வலி உண்டாதல்

தூங்கி எழும்போது உடல் சோர்வாக இருப்பது

வாந்தி மயக்கம்

மார்பில் வலி ஏற்படுதல், சீரற்ற சுவாசம்

மலச்சிக்கல்

பற்களில் சுதம் ஏற்படுதல்

தேவையில்லாமல் கோபம் உண்டாதல்

அதிக அளவு உப்பு மற்றும் சாக்லெட் சாப்பிடுவது

MOST READ: தொப்பையை குறைக்கதான் முடியல... ஆனா மறைக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்ஸ ட்ரை பண்ணுங்க...

சரியான அளவு

சரியான அளவு

நம்முடைய உடலில் சரியான அளவில் மக்னீசியம் இருந்தால், உடலில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.

தசைகள் தளர்வாக இருக்கும்

மார்புத் தசைகள் மற்றும் இதயத் தசைகள் உறுதியாகும்

மன அழுத்தம் குறையும்.

ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

கொலஜன் உற்பத்தி அதிகரிக்கும்

உடல் வலி குறையும்

இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்

ஆஸ்துமா கட்டுக்குள் வரும்

மக்னீசியம் நிறைந்த உணவுகள்

மக்னீசியம் நிறைந்த உணவுகள்

மக்னீசியத்தின் அளவுகள் நிறைந்த உணவுகளின் பட்டியல் கீழெ கொடுக்கப்பட்டுள்ளது. அவை,

டார்க் சாக்லேட்

ஸ்பின்னாச், பார்ஸிலி போன்ற பச்சை இலை காய்கறிகள்

வாழைப்பழம், ஆப்ரிகாட், அவகேடோ, ஆப்பிள், பிளம் ஆகிய பழங்கள்

பாதாம், முந்திரி, வால்நட் ஆகிய நட்ஸ்கள்

தானியங்கள், பட்டாணி

பிரௌன் அரிசி, ஓட்ஸ், சிறுதானியங்கள்

உருளைக்கிழங்கு

பூசணிக்காய்

மீன்

MOST READ: டயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா? இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...

மக்னீசியம் தேவையை நிறைவுசெய்யும் ஸ்மூத்தி

மக்னீசியம் தேவையை நிறைவுசெய்யும் ஸ்மூத்தி

வீட்டிலேயே நம்முடைய உடலுக்குத் தேவையான மக்னீசியத்தின் தேவையை நிறைவு செய்யும் வகையில் நல்ல ஸ்மூத்தி தயார் செய்து கொள்ளலாம்.

பார்ஸிலி இலைகள் சிறிதளவு, ஆப்பிள் மற்றும் ஒரு வாழைப்பழம் சேர்த்து இனிப்பு தேவைப்பட்டால் சிறிது தேன் சேர்த்துப் பருகலாம்.

மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ்

மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ்

நம்முடைய விளைநிலங்களில் ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிட்டதாலும், ரசாயன உரங்களாலும் விளைகின்ற காய்கறிகளில் போதிய சத்துக்கள் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்கிறோம்.

நான்கு வகையான மக்னீசியம் சப்ளிமெண்ட்டுகள் இருக்கின்றன. அவை,

மக்னீசியம் குளோரைடு

மக்னீசியம் சிட்ரேட்

மக்னீசியம் கார்பனேட்

மக்னீசியம் சல்பேட்

MOST READ: இந்த மாதிரி உங்க தலையில இருக்கா? உடனே இத தடவுங்க... இல்லன்னா வழுக்கை விழுந்திடும்...

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

இதில் மக்னீசியம் குளோரைடு சப்ளிமெண்டுகளை அசிடிட்டி பிரச்சினை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

மக்னீசியம் கார்பனேட்டில் அதிக அளவில் உயர் ஆல்கலைசிங் தன்மை உண்டு.

மக்னீசியம் சல்பேட் என்னும் உப்பை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். எப்சம் உப்பு கேள்விப்பட்டிருப்போம். அதை நாம் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு போட்டு குளித்து வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

what are the symptoms of magnesium deficiency

meta description - In this article, we will explain the symptoms of magnesium deficiency, as well as its functions, food that contains it,
Desktop Bottom Promotion