நுரையிரல் பிரச்சனைகள தவிர்க்க அருமருந்து நம்ம வீட்லயே இருக்கு!

Posted By:
Subscribe to Boldsky

நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சமையல் பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளில் இருக்கிற மருத்துவ குணங்களைப் பற்றிய் அதன் பயன்பாடுகள் குறித்தெல்லாம் ஏராளமான தகவல்களை படித்திருப்போம். இதிலிருக்கும் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்கள் நம் உடல் நலத்திற்கு அவசியமான ஒன்றாகும்.

உள்ளுருப்புகளில் அதிகமான பாதிப்புகளை சந்திப்பது நுரையீரல் தான். இதனால் சில நேரங்கள் வீக்கங்கள் கூட ஏற்படுகிறது. இது வீக்கமடைவதால் நுரையீரல் மட்டுமல்லது உடலில் இருக்கக்கூடிய பிற உறுப்புகளுக்கும் சேதங்கள் ஏற்படுகின்றன. இதனால் நமக்கு நிறைய சிரமங்கள் உண்டாகும் அதோடு இந்த பாதிப்புகளால் மூச்சு விடுவதில் பிரச்சனை உண்டாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீக்கம் :

வீக்கம் :

கல்லீரலில் வீக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். நோயெதிர்ப்பு சக்திக்கான செல்கள் மற்றும் ப்ரோட்டின் ஆகியவை தான் காயம் ஏற்பட்டால் உடனே ஆற்றுவதும்,அலர்ஜி,நோய்த்தொற்று ஆகியவை ஏற்பட்டால் அவற்றை வெளிப்படுத்துகிறது. இப்படியான அலர்ஜியினாலோ அல்லது ஒவ்வமையினாலோ உங்களுக்கு வீக்கம் ஏற்படலாம்.

இங்கே மஞ்சள் பயன்படுத்துவதால் கல்லீரலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

ஆஸ்துமா :

ஆஸ்துமா :

மூச்சுக்குழாயில் ஏற்படுகிற தொற்று, அதீத சளி ஆகியவற்றினால் ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்பட்டால் மூச்சுவிடுவதில் சிரமங்கள் உண்டாகும். இதைத் தவிர இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவையும் உண்டாகக்கூடும்.

இவற்றை தவிர்க்க மஞ்சள் உதவி செய்கிறது.

நுரையீரல் அலர்ச்சி :

நுரையீரல் அலர்ச்சி :

கல்லீரலில் படியக்கூடிய சளி கிருமிகள் ஆகியவற்றால் மூச்சுக்குழாயில் தடை ஏற்படலாம், இதனால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படுவது மூச்சு விடும் போது சிரமமாக உணர்வது. காய்ச்சல் சளி ஆகிய பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும்.

இவர்களுக்கு மஞ்சள் மிகச்சிறந்த நிவாரணியாகும். சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

சிஒபிடி :

சிஒபிடி :

COPD என்பதன் விரிவாக்கம் Chronic Obstryctive Pulmonary Disorder இது ஒரு வகை நுரையீரல் பிரச்சனை தான் ஆனால் இதைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. இவற்றில் இரண்டு வகை இருக்கிறது முதலாவது ப்ரோன்சிட்ஸ் இரண்டாவது எபிசீமா

இதன் அறிகுறிகளாக மூச்சுத்திணறல்,இருமல் ஆகியவை ஏற்படும். இதனை உடனே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நிமோனியா,நுரையிரல் புற்றுநோய்,இதயப் பிரசன்னை ஆகியவை ஏற்படக்கூடும்.

மூச்சுத்திணறல் :

மூச்சுத்திணறல் :

நுரையில் தொடர்பாக என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதன் முதல் அறிகுறியாக இருமல் தோன்றிடும் அதன் பிறகு மூச்சுத் திணறல் ஏற்படும். இந்த அறிகுறிகளை தவிர்க்க வேண்டு அதாவது உங்களுடைய நுரையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.

நிமோனியா :

நிமோனியா :

நோய்த்தொற்று, பாக்டீரியா,மற்றும் சில வைரஸ் கிருமிகளால் நுரையிரலில் பாதிப்பு உண்டாகலாம். அப்படி நுரையிரலில் உண்டாகக்கூடிய நோய்த் தொற்றுகளில் ஒன்று தான் நிமினோயா. இந்த நிமினோனியா காய்ச்சல் streptococcus pneumoniae என்ற பாக்டீரியாவால் உருவாகிறது.

மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டி செப்டிக் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் நுரையிரலில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த பேக்டீரியா தொற்றினை சரி செய்திடும்.

நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

நுரையிரல் சார்ந்த பிரச்சனை என்பதல்ல மட்டுமல்ல உடலில் பிற பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் இன்னபிற சத்துக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

ஒரு கப் சுடுநீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு கொதிக்க வைத்திடுங்கள். அந்த நீர் ஆறியதும் எடுத்து குடிக்கலாம்.

சத்துக்கள் :

சத்துக்கள் :

நுரையிரல் நன்றாக செயல்பட பல சத்துக்கள் தேவைப்படுகிறன. அதோடு ஐயர்ன், பொட்டாசியம்,மக்னீசியம்,விட்டமின் பி6 மற்றும் ஃபைபர் ஆகியவையும் தேவைப்படும். அந்த சத்துக்கள் பெற வேண்டும் என்றால் அவற்றை கிரகத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் நம் உடலில் இருக்க வேண்டும்.

நெஞ்சு வலி :

நெஞ்சு வலி :

மூச்சு விடுவதில் சிரமங்கள் உண்டாகி ஒரு கட்டத்தில் அவை நெஞ்சில் இடைஞ்சலை ஏற்படுத்த ஆரம்பிக்கும். சிலருக்கு மூச்சு இழுக்க ஆரம்பிக்கும் போதிருந்தே நெஞ்சில் வலி ஆரம்பித்துவிடும். இதனை ப்ளூரிசி என்பார்கள். நெஞ்சுப்பகுதிக்கு உள்ளேநுரையிரல் அருகில் அமைந்திருக்கக்கூடிய ப்ளூரே என்ற இடத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பினால் தான் இந்த வலி உண்டாகிறது.

மஞ்சளை தொடர்ந்து உங்களது உணவுப் பொருளில் சேர்ப்பதனால் இந்த பாதிப்பை நீங்கள் தவிர்க்க முடியும்.

பாதிப்புகள் :

பாதிப்புகள் :

நுரையிரல் பாதிக்கப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகள், கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்வது என நிறைய விஷயங்களை சொல்லலாம். இதைத் தவிர இதயத்துடிப்பில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் பிற உறுப்புகளுக்கு ரத்தம் கொண்டு செல்வதில் தடங்கல்கள் உண்டாகும்.

இதனால் உணவு செரிமானம்,நரம்பு பிரச்சனை என பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

ஃபிபரோசிஸ் :

ஃபிபரோசிஸ் :

நுரையிரல் பிரச்சனைகளிலேயே மிகவும் கவனிக்கத்தக்கது Lung Fiberosis. பல்மோனரி திசுக்கள் பாதிப்படைவதால் இந்த பிரச்சனை உண்டாகிறது. மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பிக்கும். மூச்சினை உள்ளிழுக்கும் இடைவேளியும் அதிகரிக்கும். இதன் கால அளவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

சோர்வாக உணர்வது,மூச்சு விடும் போது சத்தம் வருவது ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இது அப்படியே தொடர்ந்தால் ஆறு வருடங்களில் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து உயிரே பறிபோகவும் வாய்ப்புண்டு.

நுரையிரல் புற்றுநோய் :

நுரையிரல் புற்றுநோய் :

மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமினில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட சத்து இருக்கிறது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்திடும். நுரையிரல் புற்றுநோயில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று ப்ரைமரி மற்றொன்று செக்கண்டரி.

நுரையில் செல்கள், திசுக்கள் ஆகியவற்றில் புற்றுநோய் பாதிப்பு உண்டானால் அவை நுரையிரல் புற்றுநோய் எனப்படுகிறது. இதே பிற உறுப்புகளிலிருந்து நுரையிரலுக்கு பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்றால் அது செக்கண்டரி எனப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Uses of Turmeric For Lung Problems

Uses of Turmeric For Lung Problems
Story first published: Friday, April 13, 2018, 16:15 [IST]