Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
கிட்சனில் நீங்கள் செய்யும் இந்த தவறுகள், உங்கள் உயிருக்கே ஆபத்தானதாம்...!
உன் சமையல் அறையில்..! அப்படினு பாட்டு பாடுற பலருக்கு சமையல் அறையில் எதை செய்யணும் எதை செய்ய கூடாதுனு தெரியமாட்டுது. நாம்ம சமையல் அறையில் செய்யற இந்த பழக்க வழக்கங்கள் தான் உயிருக்கே உலை வாக்குதுனு விஞ்ஞானிகள் சொல்ராங்க..!

சமையல் அறையில கூட இப்படிப்பட்ட ஆப்பு நமக்கு இருக்கா..? அப்படினு யோசிக்கிற உங்களுக்கு தான் இந்த பதிவு. எப்படியெல்லாம் சமையல் அறை உங்கள போட்டு தாக்குதுனு தெரிஞ்சிக்கோங்க.

நுண்கிருமிகளின் கூடாரம்..!
நாம் உண்ணும் உணவை தயாரிக்கும் சமையல் அறையில் தான் பலவித பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் உள்ளது என ஆராய்ச்சிகள் சொல்கிறது. நிச்சயம் இதற்கு காரணம் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்கின்ற ஒரு சில முக்கிய பழக்க வழக்கங்கள் தான். இதுதான், உணவின் மூலமாக பரவ கூடிய நோய்களுக்கு முக்கிய காரணமாகும்.

ஒரே பையா..?
காய்கறி அல்லது பழங்களை நாம் வாங்கும் பைகளை பல நாட்களுக்கு பெரும்பாலும் கழுவாமலே பயன்படுத்துவோம். இது போன்ற செயல்கள் தான் நமக்கு ஆபத்தை தருகிறது. அதாவது, இந்த பைகளில் பாக்டீரியாக்கள் அப்படியே இருந்து கொண்டு நாம் உண்ணும் உணவில் ஒட்டி கொள்ளுமாம். இவை காலரா போன்ற உடல்நல கோளாறுகளை தரும்.

இது தெரியுமா..?
நம்மில் பலர் சமையல் அறையில் உள்ள சின்ங்கில் அப்படியே இறைச்சிகளை கழுவுவோம். அவ்வாறு கழுவும் போது அதன்மீது பட்ட நீர் அருகில் இருக்கும் பாத்திரங்கள் அல்லது மற்ற பொருட்கள் மீது படக்கூடும். இவை இறைச்சி மீதுள்ள கிருமிகளை நமது சமையல் அறை முழுக்க பரவ செய்து நோய்களை உண்டாக்கும்.

ஒரே ஸ்பான்ஜ்ஸ் பல நாட்களுக்கா..?
பாத்திரம் கழுவ கூடிய ஸ்பாஞ்சை மாற்றாமல் பல நாட்கள் பயன்படுத்துவோம். இவை பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்குமே ஒழிய, குறைக்காது. எனவே, அடிக்கடி இந்த ஸ்பாஞ்சை மாற்ற மறந்து விடாதீர்கள். இல்லையேல், உங்களுக்கு தான் ஆபத்துகள் அதிகம்.

அந்த 5 நொடி..!
நம்மில் பலர் கீழே விழுந்த உணவு பொருட்களை அப்படியே எடுத்து சமைப்பதற்கோ அல்லது சாப்பிடவோ செய்வோம். இது போன்ற பழக்கம் தவறானதாம். கீழே விழுந்த உணவுகளில் 5 நொடிகளுக்கு கிருமிகள் ஒட்டி கொள்ளுமாம். எனவே, கீழே உணவுகளை கழுவிட்டு அல்லது துடைத்து விட்டு பயன்படுத்துவது சற்று சிறந்தது. இல்லையேல் அவற்றை அப்படியே தூக்கி போட்டு விடலாம்.

லீக்கான பைப்புகளா..?
பெரும்பாலும் நம் வீடுகளில் உள்ள லீக்கான பைப்புகளை சரி செய்யாமல் அப்படியே விட்டு விடுவோம். ஆனால், இவை கரப்பான் பூச்சிகளுக்கு கூடாரம் போட்டு தருவதற்கான வழியாகும். இவை உணவு, பாத்திரங்கள் அல்லது தண்ணீரில் அமர்ந்தால் உணவே விஷமாகி விடும்.

இதிலும் ஆபத்துதான்..!
நாம் வாங்கும் இறைச்சிகளை அப்படியே ஃபிரிட்ஜில் வைத்து கொள்வோம். இவ்வாறு செய்யும் போது, அவற்றில் உள்ள நுண் கிருமிகள் மற்ற உணவு பொருட்கள் மீது பரவ தொடங்குமாம். எனவே இவை உங்களுக்கு ஒரு சில உடல்நல குறைபாட்டை தர வாய்ப்புகள் அதிகம்.

ஒரே பொருளே எல்லாவற்றிற்கும்..!
எல்லா வித சமையலுக்கும் ஒரே பாத்திரங்களை பயன்படுத்துவது தவறான விஷயமாகும். இவ்வாறு செய்வதால் ஒன்றின் மீதுள்ள கிருமிகள் மற்றவைகளின் மீது பரவி பலவித நோய் தொற்றுகான ஆபத்துகள் அதிகமாகி விடும். இவை உணவின் தன்மையையும் பாழாக்கி விட கூடும்.

அரை வேக்காடு சமையலா..?
பொதுவாகவே ஒரு சில உணவுகளை அப்படியே சாப்பிட கூடாது. அதுவும் இறைச்சிகளை அரைவேக்காடாக நாம் சாப்பிட்டால் நமது உடலுக்கு பலவித நோய்களை உண்டாக்கும். குறிப்பாக குடல் பகுதியில் நோய் தொற்றுகளை உருவாக்கி பலவித பிரச்சினைகளை தரும்.

இந்த பழக்கம் இல்லையா..?
நாம் கையை சுத்தமாக கழுவாமல் சமையல் செய்வதாலையே பலவித நோய்கள் நமக்கும், அந்த உணவை உண்ணுவோருக்கும் வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த பழக்கத்தால் தான் 10% சதவீத நோய்கள் நமக்கு பரவுகிறதாம்.



Click it and Unblock the Notifications