For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூளையை செயலிழக்க வைக்கும், நம்மை அறியாமல் செய்யும் விஷயங்கள் என்னென்னு தெரியுமா..?

|

மனிதன் மற்ற உயிரினத்தை விட தனித்துவமாக இருப்பதற்கு ஒரே காரணம் நமது மூளை தான். மூளை இல்லையெனில் நாமும் மற்ற விலங்குகளை போன்றோ பறவைகளை போன்றோ இருந்திருப்போம். "சிந்தித்தல்" என்கிற ஒரே நிகழ்வு நம்மை இந்த அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைய வைத்து விட்டது.

மூளையை செயலிழக்க வைக்கும், நீங்கள் செய்யும் தினசரி விஷயங்கள் என்னென்னு தெரியுமா..?

நம்முடைய புத்தி கூர்மை குறைய குறைய நாமும் ஒரு சாதாரண உயிரினத்தை போன்று மாறி விடுவோம். நாம் செய்கின்ற சில முக்கிய விஷயங்கள்தான் நமது மூளையை செயலிழக்க வைக்கிறது என்பதே உண்மை. அவை என்னென்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளை இல்லையா..?

மூளை இல்லையா..?

மற்ற உறுப்புகளை விட ஒரு படி மேலான உறுப்பு இந்த மூளை தான். பல நாட்கள் நாம் எதையுமே சிந்திக்காமலோ, எதை பற்றியும் நினைக்காமலே இருந்தால். நமது மூளை முற்றிலுமாக மழுங்கி போய் விடும். இது போன்று நடப்பதற்கு பல காரணிகள் உள்ளது. மனித மூளையில் இன்னும் அறிவியலே நுழையாத பகுதிகளும் இருக்கிறதாம்.

கருப்பு உலகம்

கருப்பு உலகம்

பலர் எப்போதும் இருட்டிலே வாழ வேண்டும் என எண்ணுவார்கள். இந்த வகை மனிதர்களுக்கு வெளிச்சம் ஒரு அலர்ஜிமிக்க விஷயமாக தான் தோன்றும். ஆனால், இந்த இருட்டு உலகம் உங்களை அதிக மன அழுத்தத்தில் தள்ளி வியூடம். ஆகையால் மூளையின் செயல்திறனும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலுமாக செயலிழக்க ஆரம்பித்து விடும்.

 ஹெட் போன்ஸ்

ஹெட் போன்ஸ்

இன்று யாரை பார்த்தாலும் காதில் ஒரு ஹெட்போனை மாட்டி கொண்டு இரைச்சல் மிக்க சத்தத்தை எந்நேரமும் கேட்டு கொண்டே இருக்கின்றனர். இது பல வகையான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்று தெரிந்தே நாம் செய்து வருகின்றோம். 30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் , உங்களின் காதையும், மூளையையும் சேர்த்தே இது பாதிக்க செய்து விடுமாம். நம்மில் எத்தனை பேர் 60% மேல் சத்தம் வைக்க கூடாது என உங்கள் போன் அலர்ட் கொடுத்தும் பயன்படுத்திருப்போம்..!?'

ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம்

நம்மில் பலர் இன்னும் ஒரு குழந்தையை போன்று தான், ஐஸ்கிரீமை பார்த்ததும் அலாதி பிரியத்துடன் அதை வாங்கி சாப்பிடுகின்றோம். ஆனால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் பாதிப்படைய செய்யும். அத்துடன் மூளைக்கு செல்லும் ரத்தமும் சூடாகி அடிக்கடி தலைவலி, மூளையின் செயல்திறனை குறைத்தல் போன்ற பிரச்சினைக்கு வழி தரும்.

MOST READ: சர்க்கரை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் நமது உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன..?

தண்ணீர்..! தண்ணீர்..!

தண்ணீர்..! தண்ணீர்..!

நமது மூளையானது கிட்டத்தட்ட 70-80 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. மூளையை சுறுசுறுப்பையுடன் வைத்து கொள்ள நீர் முக்கியமான ஒன்றாகும். ஆனால், நாம் தண்ணீரை போதுமான அளவு குடிக்காமல் இருந்தால் நமது மூளை மங்கி விடும். இது பல நாட்கள் தொடர்ந்தால் மூளை செயலிழக்க கூட வாய்ப்புகள் உள்ளள.

இதை செய்யாதீர்கள்..!

இதை செய்யாதீர்கள்..!

நீங்கள் தூங்கும் போது உங்களின் முகத்தையும் சேர்த்தே போர்த்தி கொண்டு தூங்குகிறீர்கள் என்றால், இந்த பாதிப்பு உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இது போன்று தூங்கினால் உங்களுக்கு ஆக்சிஜென் அளவு மிக குறைவாக கிடைக்கும். எனவே, இவையும் மூளையை பாதிக்க செய்யும்.

பேச்சு இல்லையா..?

பேச்சு இல்லையா..?

நாம் யாரிடமும் பேசாமல் நம் வேலைகளை மட்டும் செய்து வந்தால், அது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 20 நிமிடமாவது பிறரிடம் பேசும் பழக்கம் நமக்கு இருத்தல் வேண்டும். பெற்றோரிடமோ அல்லது நண்பர்களிடமோ தினமும் பேசி மகிழ்ச்சியாக இருக்க கூடிய பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். இது பல வழிகளில் நமக்கு உதவும்.

காலை உணவுக்கு நோ..?

காலை உணவுக்கு நோ..?

இன்று வேலை பளுவால் நமது உடலை நாம் கவனிப்பது கூட இல்லை. குறிப்பாக காலை உணவை மறந்த பலர் இங்குள்ளனர். காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் குளுக்கோஸ் அளவை குறைத்து, மூளையின் செயல்திறனை பாதித்து அதனை மோசமான நிலையை ஏற்படுத்தும்.

MOST READ: இப்படி தினமும் கட்டிப்பிச்சா நம்ம உடம்புக்குள்ள என்னென் நடக்கும் தெரியுமா? இப்ப தெரிஞ்சிக்கங்க...

போன் என்னும் எமன்..!

போன் என்னும் எமன்..!

மூளை புற்றுநோயிற்கும் மொபைல் போனிற்கும் பல வித தொடர்புகள் உள்ளன. நேரடியாக போனை பயன்படுத்தாமல் ஹெட்போன் அல்லது ஸ்பீக்கர் பயன்படுத்தி பேசுவது சிறந்த முறையாகும். மேலும், தூங்கும் போது போனை அருகில் வைத்து கொண்டு தூங்கவும் வேண்டாம்.

இணைப்பு துண்டிக்கபடும்..!

இணைப்பு துண்டிக்கபடும்..!

பொதுவாக மது பழக்கம் நமது உடலை பெரிதும் பாதிக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், இவை மூலையில் உள்ள செல்களை சிதைக்க கூடிய மிக பெரிய அபாயத்தை கொண்டதாம். மது பழக்கம் உள்ளவர்கள் மழுங்கிய நிலையில் இருப்பதற்கு இதுவே காரணம்.

சர்க்கரை-கசப்பே..!

சர்க்கரை-கசப்பே..!

நாம் விரும்பி சாப்பிட கூடிய பல பொருட்களில் சர்க்கரை அதிகம் சேர்க்கின்றனர். நியூரான் உற்பத்தி தான், நமது ஞாபக சக்திக்கு பெரிதும் உதவும் ஒன்று. இவற்றின் உற்பத்தி பாதித்தால் ஞாபக மறதி அதிகமாகி விட கூடும். சர்க்கரை இந்த பாதிப்பை தர கூடிய ஒரு மோசமான ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unexpected Things That Damage Your Brain

Some unexpected things that can be affect our brain.
Desktop Bottom Promotion