தண்ணீர் அதிகமாக குடித்தால் தொப்பை ஏற்படுமா?

Posted By:
Subscribe to Boldsky

தொப்பையை குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதற்கான முன்னெடுப்புகளை எடுக்கும் அதே சமயத்தில் தொப்பை ஏற்படுவதற்கான காரணங்கள், தான் செய்யும் தவறுகள் எல்லாம் என்னென்ன என்பது குறித்து ஓர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.வெயில் காலம் வந்து விட்டாலே எல்லாரும் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள்.

உங்களது உடலுக்கு மேல் அதிகமாக தேவைப்படுகிற தண்ணீரை குடிக்கும் பட்சத்தில் அவையும் உங்கள் தொப்பை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடலாம்.

Tips To Reduce Water Belly

பலரும் செய்கிற தவறு இது. குறைவான உணவைச் சாப்பிட்டு நிறையத் தண்ணீர் குடித்தால் வயிறு நிறைந்ததைப் போன்ற உணர்வு ஏற்படும். குறைவான உணவை எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் குடிப்பதால் வயிற்றுப் பகுதி விரிவடையும் அதோடு, நீங்கள் எடுத்துக் கொண்ட உணவு செரிமானம் ஏற்படுவதில் சிக்கல்கள் உண்டாகும். இதனால் கூடிய விரைவிலேயே பசியெடுத்து அடிக்கடி சாப்பிட ஆரம்பிப்பீர்கள். இதைத் தான் வாட்டர் பெல்லி என்று குறிப்பிடுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேஸ் :

கேஸ் :

இப்படி ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் குடிப்பதால் வயிறு உப்பியதைப் போன்ற உணர்வு ஏற்படும். இது தண்ணீர் குடிப்பதால் மட்டுமல்ல அதிகப்படியான உணவு சாப்பிடுவதாலும் ஏற்படுகிறது. உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்,ஃபைபர் மற்றும் சர்க்கரை ஆகியவை சேரும் போது அவை உடைத்து செரிமானம் ஏற்பட வேண்டும்.

வயிற்றில் பாதியளவு செரிக்கப்பட்டு பெருங்குடலுக்கு அனுப்பப்படும். அங்கிருக்ககூடிய பேக்டீரியா அவற்றை மேலும் செரிக்க உதவிடும். அந்த பேக்டீரியாவினால் ஏற்படுவது தான் கேஸ் தொல்லை.

ஃபைபர் :

ஃபைபர் :

உடலுக்கு தேவைப்படுகிற உணவுகளை எடுத்துக் கொள்வதில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மிக குறைந்த அளவு எடுத்துக் கொண்டால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

இதே அதிகளவு எடுத்துக் கொண்டால் கேஸ் தொல்லை வயிறு உப்புசம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

மாதவிடாய் :

மாதவிடாய் :

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இந்த வயிற்றுப் பிரச்சனை ஏற்படும்.அந்த நேரத்தில் அவர்களுக்கு ப்ரோஜெஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால் தான் இப்படி ஏற்படுகிறது. மாதவிடாய் முடிந்த பிறகு ப்ரோஜெஸ்டிரோன் அளவு குறைந்ததும் வயிறு உப்பியதைப் போன்ற உணர்வு பசியின்மை ஆகியவை குறைந்திடும்.

சோடியம் :

சோடியம் :

வழக்கத்தை விட கூடுதலாக உப்பு சேர்த்துச் சாப்பிடுவதும் இந்த வாட்டர் பெல்லிக்கு ஓர் அடிப்படைக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதில் மட்டும் தானே.... உப்பு சரியாக அல்லது சற்று தூக்கலாக இருந்தால் தான் சாப்பிட பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவது ஒரு கட்டத்தில் உங்கள் உடல் நலனை பெரிதும் பாதிக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் சோடியம் அதிகப்படியாக சேரும்பட்சத்தில் நிறைய தண்ணீர் குடிக்கத் தோன்றிடும்.

உணவுகள் :

உணவுகள் :

இவற்றைத் தாண்டி நீங்கள் அதிகப்படியாக எடுத்துக் கொள்ளப்படும் உணவுகளும் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வீர்கள். ப்ரோக்கோலி, காலிஃப்ளவர், காளான், கோதுமை,கார்பனேட்டட் டிரிங்கஸ்,செயற்கையான இனிப்புகள் இதைத்தாண்டி சோர்பிடோல்,மனிட்டோல் மற்றும் க்சைலிடோல் ஆகியவை நிறைந்திருக்கும் உணவுகள் எடுத்துக் கொள்வதாலும் தண்ணீரை அதிகமாக எடுத்துக் கொள்வீர்கள்.

காற்று :

காற்று :

வேக வேகமாக சாப்பிடும் போது உணவுடன் சேர்ந்து காற்றையும் சேர்த்து முழுங்குவீர்கள். இதனால் உணவு செரிக்கப்படுவது கடுமையாக தடைபடும். இதனால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். இதனால் கேஸ்,நெஞ்செரிச்சல்,வயிறு உப்புசம் ஆகியவை ஏற்படும்.

உங்களுடைய சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட் :

கார்போஹைட்ரேட்ஸ் தான் நமக்கு எனர்ஜியை கொடுக்கும் மூலப்பொருளாக இருக்கும். நீங்கள் கார்போஹைட்ரேட் எடுக்கும் போது அவை க்லைகோஜனாக மாற்றிடும். இவை தான் உங்கள் சதையாக மாறுகிறது.

இதனால் தான் அரிசிச் சாதம் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

தண்ணீர் :

தண்ணீர் :

இதற்காக தண்ணீர் குடிக்கக்கூடாது என்றோ அல்லது தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்ளலாமா என்று கேட்டால் அது தவறானது. உள்ளுறுப்புகள் சீராக இயங்குவதற்கும் நீங்கள் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் திரவு உணவுகளும் அடங்கும். வெறும் தண்ணீராக இல்லாமல் தண்ணீர் சத்து நிரம்பிய காய்கறி பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

குறைவான ஃபைபர் எடுத்துக் கொள்வது, உடலுக்கு எந்த விதமான உழைப்பையும் கொடுக்காமல் இருப்பது ஆகியவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதனால் கூட உங்களுக்கு வயிறு உப்புசம் ஏற்படலாம்.

இந்த தொல்லை அடிக்கடி ஏற்படுபவர்களுக்கு தொப்பை பிரச்சனை இருக்கும். இதனை தவிர்க்க சராசரியாக ஒருவர் எடுத்துக் கொள்ள வேண்டிய ஃபைபரை நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும், பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராமும் ஆண்கள் ஒரு நாளைக்கு 38 கிராம் வரையிலும் எடுத்துக்கொள்ளலாம். இதைத் தவிர இருவருமே ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சுயிங்கம் :

சுயிங்கம் :

நீங்கள் யதார்த்தமாக விளையாட்டாக மேற்கொள்ளக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்களுக்கு தொப்பையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் அடிக்கடி சுயிங்கத்தை வாயில் போட்டு மெல்பவராக இருந்தால் அதனை முதலில் நிறுத்தங்கள். அதிக நேரம் அப்படி மெல்வதால் அதன் வழியாக காற்று உள்ளே சென்று விடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Reduce Water Belly

Tips To Reduce Water Belly
Story first published: Tuesday, April 10, 2018, 16:30 [IST]