டயட் இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது இது தான்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை சரியானதாக பராமரிக்க ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அத்தியாவசியமாகும். அத்துடன் சீரான உடற்பயிற்சி உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம். ஆரோக்கியமான உணவு என்றால் இயற்கையாக கிடைக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

உங்களுக்கு என்ன சத்து தேவை? அதற்கேற்ப என்னென்ன எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து அதற்கேற்ப உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதற்கு இடையில் உடல் எடையையும் கவனித்துக் கொள்வது என்பது சற்று சிரமம் தான் என்றாலும் அதைத் தவிர வேறு வழியில்லை. இப்போது உடல் எடையை குறைக்க பல ஐடியாக்கள் ஒவ்வொருவரும் சொல்வார்கள். அவற்றையெல்லாம் தாண்டி உடல் நலனுக்கும் உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிற பல்வேறு நியூட்ரிசியன்கள் நிறைந்த ஓர் காயைப் பற்றித் தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு :

வரலாறு :

பண்டைய காலத்தில் போலாந்து நாட்டில் முதன் முறையாக இந்த பீட்ரூட் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது நாம் பயன்படுத்துகிற நிறத்தில் இருந்திருக்கவில்லை. பீட்ரூட் மூன்று வகைகளாக பிரிக்கிறார்கள்.

இவை உணவைத் தாண்டி செரிமானக் கோளாறு, ரத்தம் சுத்திகரிப்பு உள்ளிட்ட மருத்துவத்திற்கும் இது பயன்பட்டிருக்கிறது. இது தவிர வைனில் சிகப்பு நிறமேற்றவும் பீட்ரூட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சர்க்கரை :

சர்க்கரை :

1740களில் ஐரோப்பாவில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான சர்க்கரை கரீபியனில் உள்ள பிரிட்டிஷ் காலனியிலிருந்து தான் வந்தது. சுகர் பீட் எனப்படுகிற ஒரு வகை பீட்ரூட் விளைந்ததிலிருந்து சர்க்கரை தயாரித்து ஏற்றுமதி செய்தார்கள். பிரான்சின் முதலாம் நெப்போலியன் பிரிட்டிஷூக்கு தடை விதித்தார்,அதே நேரத்தில் சுகர் பீட் உற்பத்தி செய்ய ஊக்குவித்தார்.

இன்றளவும் அமெரிக்கா மற்றும் யூரோப்பில் சுகர் பீட் பயன்படுத்தப்படுகிறது. இது தற்போது பணம் தரும் காயாக மாறிவிட்டிருக்கிறது.

வளர்த்த நெப்போலியன் :

வளர்த்த நெப்போலியன் :

அமெரிக்காவிற்கு தேவையான பெரும்பாலான சர்க்கரை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடாக க்யூபா இருந்தது. ஆனால் அதற்கும் நெப்போலியன் தடை விதித்ததால் சர்க்கரையை மக்கள் வாங்க முடியவில்லை இதனால் தங்கள் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சுகர் பீட் வளர்க்கத் துவங்கினார்கள்.

பீட் ரூட்டில் சுகர் பீட்,ரூட் பீட் மற்றும் கார்டன் பீட் என நான்கு வகைகள் இருக்கின்றன. இந்த பீட்ரூட் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளலாம். அதோடு இந்த பீட்ரூட் உடல் எடையை குறைக்க எந்த அளவிற்கு உதவிடும் என்று பார்க்கலாம்.

Image Courtesy

கலோரி :

கலோரி :

பீட்ரூட் எடுப்பதினால் உங்களுக்கு நிகழக்கூடிய முக்கியமான நன்மைகள் இது முதன்மையானது. ஏனென்றால் இது குறைவான கலோரி கொண்டது. உடல் எடையை பொறுத்தவரையில் ஒவ்வொரு முறை உணவு எடுக்கும் போதும் அளவுக்கு அதிகமான உணவு எடுத்துக் கொள்வதாலேயே பல பிரச்சனைகள் வருகிறது.

பீட்ரூட் அதற்கு மிகப்பெரிய தீர்வாக அமைந்திடும். பீட்ரூட் ஜூஸ் எடுத்தோ அல்லது அதனை சமைத்தோ நீங்கள் சாப்பிடலாம்.

நோய் எதிப்பு ச்க்தி :

நோய் எதிப்பு ச்க்தி :

பீட்ரூட்டில் பெட்டலைன்ஸ் எனப்படக்கூடிய ஃபைட்டோ நியூட்ரிசியன் இருக்கிறது. இது உடலில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகரிக்க உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை எல்லா வெளியேற்ற உதவிடும். இதனால் உடல் எடை குறைக்கவும், சாப்பிடும் உணவு சீராக செரிமான ஆவதற்கும் இது உதவுகிறது.

ஃபைபர் :

ஃபைபர் :

பீட்ரூட்டில் அதிகப்படியாக ஃபைபர் இருக்கிறது. ஆரோக்கியமான உணவுப்பழக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் பெஸ்ட் சாய்ஸ். இதில் அதிகப்படியான ஃபைபர் இருப்பதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

கார்போஹைட்ரேட்ஸ் :

கார்போஹைட்ரேட்ஸ் :

பீட்ரூட் சாலெட்டுடன் தயிர் கலந்து சாப்பிடலாம் . இதில் கார்போஹைட்ரேட் இருப்பதால் இதனை சாப்பிட்டால் உடனடி எனர்ஜி கிடைத்திடும். 100 கிராம் பீட்ரூட் எடுத்துக் கொள்வதன் மூலமாக உங்களுக்கு 8.5 கிராம் கார்போஹைட்ரேட் கிடைத்திடும். பீட்ரூட்டிலிருந்து உங்களுக்கு கிடைக்கிற கார்போஹைட்ரேட் குளுக்கோஸாக மாற்றப்படுவதால் சர்க்கரை நோயாளிகள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

பீட்ரூட்டில் கார்போஹைட்ரேட் மட்டுமல்ல இதில் ப்ரோட்டீனும் இருக்கிறது. அன்றாட ஆரோக்கியமான வாழ்விற்கு ப்ரோட்டீன் அவசியமான ஒன்றாகும். உடலில் இருக்கக்கூடிய செல்களின் வளர்ச்சிக்கு ப்ரோட்டீன் பெரிதும் உதவிடும். உடலியல் செயல்பாடுகள் எல்லாம் சீராக நடக்க வேண்டுமென்றால் பீட்ரூட் எடுத்துக் கொள்ளலாம்.

வாரம் இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ் எடுத்து குடித்திடுங்கள்.

இரும்புச்சத்து :

இரும்புச்சத்து :

உடல் ஆரோக்கியத்திற்கு ரத்த ஓட்டம் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதற்கு இரும்புச் சத்து கண்டிப்பாக தேவை. அனீமிக்காக இருப்பவர்கள் பீட்ரூட் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைத்திடும்.

கர்ப்பிணிகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. இது அவர்களின் உடல்நலத்திற்கு மட்டுமல்ல குழந்தைக்கும் நன்மைபயக்கும்.

பொட்டாசியம் :

பொட்டாசியம் :

இதற்கு அடுத்தப்படியாக பீட்ரூட்டில் அதிகப்படியாக இருப்பது பொட்டாசியம். 100கிராம் பீட்ரூட்டில் 259கிராம் பொட்டாசியம் வரை இருக்கிறது. நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கும் உணவிலிருந்து சத்துக்கள் பிரிக்கவும் பொட்டாசியம் சத்து அவசியமாகிறது.

குடல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க இது உதவிடும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

பீட்ரூட் மலச்சிக்கலை தீர்க்கவும் உதவிடுகிறது. சாப்பிட்ட உணவு செரிக்க உதவுகிறது, உடலில் இருக்கும் நச்சுக்களை எல்லாம் அகற்ற உதவிடுகிறது. அதோடு இது குறைவான கலோரி மேலும் இதில் ஃபைபர் இருப்பதால் நிறைவான உணர்வைத் தந்திடும் என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பீட்ரூட் சாப்பிடலாம்.

டயட் :

டயட் :

டயட் இருந்து உணவை குறைக்கும் போது உங்களுக்கு எனர்ஜியும் குறையும், தொடர்ந்து சோர்வாக இருப்பது போல தோன்றிடும் அதற்கு இப்படியான எனர்ஜி தருகிற அதே சமயம் கலோரி குறைவான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பீட்ரூட்டில் விட்டமின்ஸ்,மினரல்ஸ் , ஃபைபர்,கார்போஹைட்ரேட்,ப்ரோட்டீன் ஆகியவை இருக்கிறது.

எப்படி எடுத்துக் கொள்ளலாம் :

எப்படி எடுத்துக் கொள்ளலாம் :

பீட்ரூட் எப்படி சாப்பிடலாம், குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பீட்ரூட் எப்படி சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் ஃபிரஷ்ஷான பீட்ரூட் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தோல் சீவி சுத்தப்படுத்தி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தண்ணீரில் போட்டு வேக வைக்க வேண்டும். முழுவதும் வேக வைக்க வேண்டாம். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி விடுங்கள் அந்த பீட்ரூட்டுடன் வெங்காயம்,வினிகர் மற்றும் உப்பு கலந்து சாப்பிடலாம். தேவையென்றால் அதில் எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to Cook Beetroot For Weight Loss Diet

Tips to Cook Beetroot For Weight Loss Diet
Story first published: Thursday, April 12, 2018, 16:35 [IST]