For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி தினமும் கட்டிப்பிச்சா நம்ம உடம்புக்குள்ள என்னென் நடக்கும் தெரியுமா? இப்ப தெரிஞ்சிக்கங்க...

|

கட்டிப்பிடிப்பது என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அது, "நான் உனக்காக இருக்கிறேன்", "நீ எனக்கு மிகவும் முக்கியம்", "நான் உன்னை பாதுகாப்பேன்", " நான் உன்னை புரிந்து கொள்வேன்", "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று மட்டுமில்லாமல் இன்னும் பலவற்றை உணர்த்தும். ஆனால் இதற்கான நன்மைகள் பல உள்ளன. இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பது இதன் நன்மைகள் மிகவும் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஆகும்.

The Benefits of Hugs for Your Health

இந்த பதிவில், கட்டிப்பிடிப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு உண்டாகும் பல்வேறு நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். இதனை படித்து முயற்சித்தும் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டியணைத்தல்

கட்டியணைத்தல்

கட்டிப்பிடிப்பது, ஒருவரை மற்றவருடன் இணைக்கிறது, அந்த சூழலை சௌகரியப்படுத்துகிறது, நமது உணர்வை வெளிப்படுத்த அனுமதிக்கிறது, வானத்தில் பறப்பது போன்ற உணர்வைத் தருகிறது. மேலும் கட்டிப்பிடித்தலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இவை ஒரு வித உளவியல் மருந்தாக விளங்குகிறது. மேலும் சுவாரஸ்யமான பல விஷயங்களை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் இந்த பதிவை.

MOST READ: கொதிக்க வைத்த நீரை ஆறியபின் மீண்டும் சூடுபடுத்தி குடிக்கலாமா? அப்படி செஞ்சா என்ன ஆகும்

நன்மைகள் என்ன?

நன்மைகள் என்ன?

நீங்கள் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது அல்லது மற்றவர் உங்களை கட்டிப்பிடிக்கும் போது ஆக்சிடோசின் என்ற சந்தோஷ ஹார்மோன் சுரக்கிறது. இது சமூக பிணைப்புடன் தொடர்புடையது, குறிப்பாக, தாய் மற்றும் குழந்தை இடையே உருவாகும் பிணைப்பு. மேலும் சில நன்மைகள் இதில் உள்ளன, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, மன அழுத்த அளவைக் குறைக்கிறது, மேலும் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் சிறப்பான தீர்வுக்கு, இது உண்மையான அன்புடன் செய்ய வேண்டிய ஒரு செயல் ஆகும்.

உடல் ரீதியாக

உடல் ரீதியாக

மேலும் சில நொடிகள் தொடர்ச்சியாக கட்டிப்பிடிக்க வேண்டும். நமக்கு மிகவும் அன்பானவர்களிடம் அடைக்கலம் புகுவது போன்ற அற்புதமான விஷயம் வேறு எதுவும் இல்லை. நமக்கு மிகவும் நெருக்கமானவர்களை கட்டித் தழுவுவது என்பது மனதிற்கு மிகவும் நெருக்கமான விஷயமாக இருந்தாலும், தெருவில் முகம் தெரியாத ஒருவரை கட்டிப்பிடிப்பதால் அந்த நாளில் உண்டான வெறுப்பு குறையும்.

கட்டிப்பிடிப்பதால் உண்டாகும் உடல் ரீதியான ஆரோக்கிய நன்மைகள் பற்றி இப்போது காணலாம்.

உடலுக்கு ஆக்சிஜனை தருகிறது

உடலுக்கு ஆக்சிஜனை தருகிறது

நீங்கள் ஒருவரைக் கட்டிப்பிடிக்கும்போது உங்கள் உடலில் ஹீமோக்ளோபின் அளவு ஊக்குவிக்கப்பட்டு, உடலின் முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தில் அதிக ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் உடலில் உடனடி உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சி பிறக்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது

கட்டிப்பிடிப்பதால் மட்டுமல்ல, உங்களுக்கு நெருக்கமானவர்களின் கைகளைப் பற்றிக் கொள்வதால் கூட இந்த நன்மை உண்டாகிறது. இன்னொரு வழியில், உங்கள் இதய துடிப்பை மிதப்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, இதனால் உடல் மற்றும் மனம் அமைதி அடைகிறது, இதனால் இதய நோய் பாதிப்பிற்கான அபாயம் குறைகிறது.

MOST READ: எந்தெந்த பூக்களை எவ்வளவு நேரம் தலையில் வைத்திருக்க வேண்டும்? அதற்குமேல் வைத்தால் என்னவாகும்?

குழந்தையின் வளர்ச்சிக்கு

குழந்தையின் வளர்ச்சிக்கு

புதிதாக பிறந்த குழந்தையை தாய், குடும்ப உறுப்பினர்கள், மருத்துவர், நர்ஸ் ஆகியோர் கட்டிப்பிடிப்பதால் குழந்தையின் ஆற்றல் அதிகரித்து, அதன் வளர்ச்சி மேம்படுகிறது , நோயெதிர்ப்பு மண்டலம் வளர்ச்சி அடைகிறது, மேலும் அந்த குழந்தை அந்த சூழலுக்கு தகுந்தபடி மாற்றம் அடைகிறது. இதனால் குழந்தைக்கு மற்றவர்களை எளிதில் அடையாளம் காண முடிகிறது.

மன அழுத்தத்தைக் குறைக்க

மன அழுத்தத்தைக் குறைக்க

ஒரு நாள் முழுக்க வெளியில் வேலை முடித்து களைப்பாகவும் மன அழுத்தத்துடனும் வீடு வந்தவுடன் உங்கள் குழந்தைகள் அல்லது துணை அல்லது செல்ல பிராணியிடம் இருந்து கிடைக்கும் ஒரு கட்டிப்பிடி வைத்தியம் போல் சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. உங்கள் மனதிற்கு விருப்பமானவர்களுடன் உடல் மூலம் நேரடி தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதால் உங்கள் கவலை மறைகிறது.

வேலை, நிதி பிரச்சனை போன்றவை மறந்து விடுகிறது. இதனால் உங்கள் முகத்தில் தானாகவே புன்னகை மலர்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரங்களில் ஒரு மூலிகை டீ, வெந்நீர் குளியல் போன்றவை தராத ஒரு சிகிச்சையை இந்த கட்டிப்பிடி வைத்தியம் தருகிறது என்று சொன்னால் அதை மறுப்பதற்கில்லை.

நோயெதிர்ப்பு மண்டலம்

நோயெதிர்ப்பு மண்டலம்

கட்டிப்பிடிப்பதில் உள்ள மற்றொரு நன்மை, உங்கள் வயது அதிகரிக்கும்போது உங்களுக்கு அது உதவுகிறது. நீங்கள் மற்றவரை கட்டிப்பிடிப்பதால் அல்லது மற்றவர் உங்களைக் கட்டிப்பிடிப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைஅடைகிறது. வயது அதிகரிக்கும்போது நோய் தாக்கும் அபாயம் குறைகிறது.

குறிப்பாக குளிர் காலத்தில்.. குறிப்பாக வெப்பநிலை குறையும்போது இந்த பலன் அதிகரிக்கிறது. ஆகவே இதுவே சரியான காலம். உடனே உங்களுக்கு பிடித்தவர்களை கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். இதனால் சளி, வறண்ட தொண்டை போன்ற பாதிப்புகள் குறையும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

வீட்டின் வெளியில் பயங்கரமான புயல் அடிக்கும்போது, அல்லது உங்கள் மனதின் உள்ளே ஒரு பெரிய பிரச்சனையை சுமந்து கொண்டிருக்கும்போது, உங்களால் சரியாக தூங்க முடியாது. அந்த நேரம் ஒரு தூக்க மாத்திரையைப் போல் கட்டிப்பிடிப்பது உதவும்.

ஆரோக்கியத்தில் பாதிப்பு இருப்பதால் அல்லது எந்த ஒரு காரணத்தாலும் தூங்க முடியாமல் நீங்கள் அவதிப்படும்போது ஒரு சிறந்த மருந்து, உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அருகில் படுத்தக் கொள்வது. ஒருவேளை நீங்கள் தனியாக இருப்பவர் என்றால், உங்கள் வீட்டு நாய் அல்லது பூனையை இழுத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.

MOST READ: மரண ரகசியம் பற்றி எமனே தன்வாயால் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

இயற்கையான மன அழுத்த எதிர்ப்பி

இயற்கையான மன அழுத்த எதிர்ப்பி

தூங்க உதவுவது மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவது போன்றவற்றைப் போல் கட்டிப்பிடித்தல் என்பது ஒரு சிறந்த இயற்கை மன அழுத்த எதிர்ப்பியாகவும் விளங்குகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாமல் சோகமாக இருந்தால், அல்லது உங்கள் வாழ்க்கைக்கு எந்த ஒரு அர்த்தமும் இல்லை என்ற எண்ணத்தில் இருந்தால் உடனே, உங்கள் அன்புக்குரியவரை மிகவும் நெருக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த நெருக்கம் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை மீட்டுத் தரும், நீங்கள் தனியாக இல்லை என்பதை உங்களுக்கு புரிய வைக்கும்.

கட்டிபிடிப்பதின் மன ரீரியான நன்மைகள்

கட்டிபிடிப்பதின் மன ரீரியான நன்மைகள்

மேலே கூறிய ஆரோக்கிய நன்மைகளுடன் சேர்த்து சில உணர்ச்சி ரீதியான மற்றும் மன நல ரீதியான நன்மைகளும் கட்டிப்பிடிப்பதால் உண்டாகிறது. அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகக் காணலாம்.

பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது

பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது

கட்டிப்பிடிப்பது ஒரு வித ஆறுதல், ஆதரவு மற்றும் சௌகரியத்தைத் தருகிறது. ஒரு பெரிய கூட்டத்திற்கு முன் பேசுவதாக இருந்தாலும், பரிட்சையை எதிர்கொண்டு நல்ல விதமாக எழுதுவதாக இருந்தாலும், நீண்ட நாட்களாக செய்து கொண்டிருக்கும் ஒரு செயலில் ஒரு முக்கிய முடிவெடுப்பதாக இருந்தாலும், எதையும் சிறப்பக எதிர்கொள்ள கட்டிப்பிடி வைத்தியம் உதவுகிறது. உங்களை பதட்டமடையச் செய்யும் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஒரு சின்ன கட்டிப்பிடி வைத்தியம் போதுமானது. நீங்கள் ரிலாக்ஸாக உணர்ந்து எதையும் சாதிக்க முடியும்.

குறைவான கோபம்

குறைவான கோபம்

அதிக கோபத்தில் இருக்கும்போது கட்டிப்பிடிப்பதால் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு கோபம் குறைகிறது. இதனால் உங்கள் டென்ஷன் குறைந்து ரிலாக்ஸ் ஆக முடிகிறது. எந்த ஒரு காரணமும் இல்லாமல் மூட் அவுட்டில் இருப்பவர்கள் உங்கள் துணையை கட்டிப்பிடித்து அந்த மனநிலையைப் போக்க முடியும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் உங்கள் சக ஊழியர்களைக் கூட கட்டிப்பிடிக்கலாம்.

MOST READ: பிரியாணி இலைல டீ போட்டு குடிச்சா ஒரே வாரத்துல 8 முதல் 10 கிலோ குறையுதாம்.. எப்படி செய்யறது?

உணர்வுகளை வெளிப்படுத்துவது

உணர்வுகளை வெளிப்படுத்துவது

உங்களுக்கு நெருக்கமானவர்களை கட்டிப்பிடிப்பதை விட சிறந்த பரிசு அவர்களுக்கு வேறு எதுவும் இல்லை. வார்த்தைகள் இல்லாமல் உங்கள் அன்பை வெளிபடுத்த உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழி. கட்டிப்பிடிப்பதற்கான அர்த்தம் அனைவருக்கும் தெரியும். அது, "நான் உனக்காக இருக்கிறேன்", , "நீ எனக்கு மிகவும் முக்கியம்", "நான் உன்னை பாதுகாப்பேன்", " நான் உன்னை புரிந்து கொள்வேன்", "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று மட்டுமில்லாமல் இன்னும் பலவற்றை உணர்த்தும். கட்டிப்பிடி வைத்தியம் நம்மை மற்றவருடன் இணைக்கிறது. இதனால் நாமும் மற்றவரும் பலனடைகிறோம். ஆகவே இன்னும் அதிகமாக கட்டிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Benefits of Hugs for Your Health

Here are some of the ways in which getting physical is best for your health, take a look
Story first published: Friday, November 23, 2018, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more