For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலச்சிக்கலை ஏற்படுத்தும் உங்கள் அன்றாட செயல்கள்

|

கழிவறையில் அதிக நேரம் செலவிடுபவர்களில் நீங்களும் ஒருவரா, தினமும் காலை கழிவறையில் மலம் கழிக்க உங்களை நீங்களே கட்டாயப்படுத்துகிறீர்களா, அப்படியானல் உங்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக் கூடியது.

ten surprising causes for constipation you must know

மலச்சிக்கல் வாழ்க்கை முறை சார்ந்து ஏற்படக் கூடிய ஒன்று. மலமானது குடல் பகுதியில் கடினமாக இருந்தால் அதை வெளியேற்றுவதில் உடலுக்கு சிரமம் ஏற்படுவதால், தினமும் சரிவர ஏற்படாமல் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றுள் சில முக்கியமான காரணங்களை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது

1. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது

பெரும்பாலும் உட்கார்ந்தே வேலை செய்பவர்களான ஓட்டுனர்கள், தையல்கார்கள், கணினியில் வேலை செய்பவர்கள் மற்றும் இதே போல் உட்கார்ந்தே நீண்ட வேலை செய்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஏனென்றால் ஒரு நபர் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது, உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் மெதுவாக மாறும், இதனால் குடல் இயக்கங்கள் குறைகிறது, மலச்சிக்களை ஏற்படுத்தும்.

2. அதிக பால் பொருட்கள் உட்கொள்வது

2. அதிக பால் பொருட்கள் உட்கொள்வது

பால் பொருட்களான பாலாடைக்கட்டி எனப்படும் சீஸ், பால் மற்றும் பன்னீர் போன்றவற்றை அதிக அளவில் தினசரி எடுத்து கொள்ளவது மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் இவை உடலில் வாயு உற்பத்தியை அதிகம் உற்பத்தியாக தூண்டும். அதோடு அவை செரிமானத்தின் போது வயிற்றில் நடக்கும் நொதித்தல் செயல்முறையின் போது குடலில் இருக்கும் மலத்தின் தன்மையை கடினமாக்கும்.

3. மனஅழுத்தம்

3. மனஅழுத்தம்

மனஅழுத்தமும் மலச்சிக்கலை ஏற்படுத்தும் ஒரு காரணம். மனஅழுத்தமும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரின் மூளையில் செரோடோனின் அளவு குறைகிறது. இதனால் மூளையிலிருந்து செரிமான மண்டலத்திற்கு கட்டளை சரிவர அனுப்பப்படாது. இதனால் உடலிருந்து கழிவுகள் சரிவர வெளியேற்றப்படாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

MOLST READ: காதலியை இ-பேயில் விற்க முயன்ற காதலன், விளையாட்டு வினையானதால் விபரீதம்!

4. கார்போஹைட்ரெட் குறைவான உணவு

4. கார்போஹைட்ரெட் குறைவான உணவு

கேட்டோ போன்ற குறைந்த கார்போஹைட்ரெட் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் இயக்கங்கள் சீரான முறையில் நடைபெற உடலுக்கு அனைத்து ஊட்டசத்துக்களும் அவசியமாகிறது.

நீங்கள் குறைந்த அளவு கார்போஹைட்ரெட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது பெருங்குடலில் இருக்கும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு மலத்தை உலர செய்து கடினமாக்கிவிடும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.

5. அதிக மலமிளக்கி பயன்பாடு

5. அதிக மலமிளக்கி பயன்பாடு

மலமிளக்கிகள் மலம் கழிக்கும் செயலை மிகவும் எளிதாக்குகிறது. ஆனால் அடிக்கடி மலமிளகிக்களை பயன்படுத்தும்போது அது குடல் இயக்கங்களை பாதித்து இந்த செயலை மெதுவாக மாற்றிவிடும். இது மலச்சிக்கலை ஏற்படுத்தி மலம்கழிப்பதை கடினமான செயலகமாற்றிவிடும்.

6. தினமும் சாக்லேட் சாப்பிடுவது

6. தினமும் சாக்லேட் சாப்பிடுவது

தினமும் சாக்லேட் சாப்பிடுவது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதில் முக்கியமான ஒன்று மலச்சிக்கல் ஆகும். சாக்லேட்டில் அதிகளவு சர்க்கரை உள்ளது இது மலம்கழிப்பதை கடினமான செயலாக மாற்றிவிடுகிறது, மேலும் குடலில் வீக்கங்களை ஏற்படுத்துகிறது.

7. சில மருந்துகள்

7. சில மருந்துகள்

மனஅழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள், ஆண்டிபையோட்டிக்குள், இரத்த அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் போன்றவற்றை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது அது குடலை உலர்வாக வைத்திருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் மருத்துவரிடம் மாத்திரையின் வீரியத்தை குறைக்க பரிந்துரையுங்கள்.

MOST READ: கர்ப்பப்பை அறுவைசிகிச்சை செய்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?

8. ஹார்மோன் கோளாறுகள்

8. ஹார்மோன் கோளாறுகள்

சமீபத்திய ஆய்வுகளின் படி PCOS, ஹைப்போதைராய்டிசம், ஹைபர்தைராய்டிசம் போன்ற ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதற்கு காரணம் குடலின் சீரான இயக்கங்களுக்கு சில ஹார்மோன்களின் சுரப்பு அவசியமாகும். அது குறையும்போது மலசிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

9. பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்

9. பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள்

பெண்கள் குழந்தை பிறப்பதை தள்ளிப்போட அவர்கள் எடுத்துக்கொள்ளும் சில மாத்திரைகள் மலச்சிக்கலை பக்கவிளைவாக ஏற்படுத்தும். இதற்கு காரணம் பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் ஹார்மோன்கள் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதனால் குடலில் வீக்கங்கள் ஏற்படலாம்.

10. உடற்பயிற்சிகள்

10. உடற்பயிற்சிகள்

குறைவான உடற்பயிற்சிகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று நாம் படித்திருப்போம், ஆனால் அதிக உடற்பயிற்சியும் மலச்சிக்கலை ஏற்படுத்துமாம். இதற்கு காரணம் அதிக உடற்பயிற்சி செய்யும்போது அது உடலில் எலெக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீரை குறைக்கிறது. இதனால் குடல் உலர்வடைவதால் மலச்சிக்கல் ஏற்படும்.

MOST READ: சிவனிடம் எந்தெந்த வேண்டுதலுக்கு என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ten surprising causes for constipation you must know

Constipation is a lifestyle-related ailment in which the stools harden in the intestines and do not pass out of the body easily or regularly.
Story first published: Thursday, October 11, 2018, 17:22 [IST]
Desktop Bottom Promotion