For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்க ஆல்கலைன் தண்ணீர் குடிங்க!

ஆல்கலைன் தண்ணீரைக் குடிப்பதினால் ஏற்படுகிற நன்மைகள்

|

ஆல்கலைன் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம். ஆல்கலைன் தன்ணீர் என்றதும் அது எதோ புதுவகை மருந்து கலந்ததாக இருக்குமோ என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சாதரண தண்ணீருக்கும் அதற்கும் ஒரேயொரு வேறுபாடு தான் இருக்கிறது.

அதாவது சாதரண தண்ணீரில் இருக்கும் பிஎச் அளவை விட இந்த ஆல்கலைன் தண்ணீரில் பிஎச் அளவு அதிகமாக இருக்கும். இப்படி பிஎச் அளவு அதிகமுள்ள ஆல்கலைன் தண்ணீரைக்குடிபதினால் உங்கள் உடல் நலனுக்கு மிகவும் நல்லது. ஆல்கலைன் தண்ணீரின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் பிஎச் அளவு என்றால் என்ன அதனை எப்படி கணக்கிடுகிறார்கள் என்ற அடிப்படையை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிஎச் அளவு :

பிஎச் அளவு :

ஒரு பொருளை கரைக்கக்கூடிய திரவத்தின் அளவுகோல் தான் இந்த பிஎச் என்பது. இதனை 0விலிருந்து 14 வரையிலான மதிப்பைக் கொண்டிருக்கிறது. இந்த மதிப்புகளை வைத்து திரவத்தில் இருக்கிற அமிலத்தன்மையையும் காரத்தன்மையையும் நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

இவை இரண்டுக்கும் நடுவில் இருப்பது நடுநிலை என்பார்கள். பிஎச் அளவுகோலின் படி திரவம் ஏழாம் இடத்தில் இருந்தால் அது நடுநிலையில் இருக்கிறது என்று அர்த்தம். அதே ஏழுக்கு கீழே இந்தால் அமிலத்தன்மை கொண்டவை என்றும் ஏழுக்கு மேலே இருப்பவரை காரத்தன்மை கொண்டவை என்றும் பிரிக்கிறார்கள்.

 ஆல்கலைன் :

ஆல்கலைன் :

சாதரண சுத்தமான நீரின் பிஎச் அளவு ஏழு. இதனுடன் பிற பொருட்களை சேர்த்து அதன் பிஎச் அளவு அதிகரிக்கும் போது தான் அதனை ஆல்கலைன் தண்ணீர் என்கிறார்கள். இதன் விரிவாக்கம் பவர் ஆஃப் ஹைட்ரஜன் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டு டென்மார்க்கை சேர்ந்த சோரென் பீடர் லாவ்ட்ரிஸ் சோரென்சன் என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.

தண்ணீரின் பிஎச் அளவு ஏழு கடந்து எட்டு,ஒன்பது என இருப்பவை ஆல்கலைன் தண்ணீர் எனப்படுகிறது. இந்த ஆல்கலைன் தண்ணீரில் கால்சியம்,மக்னீசியம்,சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை இருக்கின்றன.

தயாரிப்பு முறை :

தயாரிப்பு முறை :

ஆல்கலைன் தண்ணீரை வீட்டிலேயே மூன்று வகைகளாக தயாரிக்கலாம். முதலில் பேக்கிங் சோடா. இரண்டு டம்பளர் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா வீதம் கலந்து கொள்ளுங்கள். பொதுவாக சோடாவில் அதிகப்படியான ஆல்கலைன் இருக்கிறது. அதனை தண்ணீருடன் கலந்திடும் போது ஆல்கலைன் அளவு அதிகரிக்கும். இதில் சோடியம் அதிகப்படியாக இருக்கும்.

எலுமிச்சை :

எலுமிச்சை :

ஒரு கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு எலுமிச்சையை சின்ன சின்ன பிஸ்களாக நறுக்கி அந்த தண்ணீரில் போட வேண்டும். கவனம், எலுமிச்சை பிழிந்து அந்த சாறை சேர்க்கக்கூடாது. மாறாக முழு எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அந்த தண்ணீரில் போட வேண்டும்.

அதனை மூடி சுமார் எட்டு முதல் பன்னிரெண்டு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.எலுமிச்சை அந்த தண்ணீரில் ஊரட்டும். அதன் பிறகு அந்த தண்ணீரை அப்படியே குடிக்கலாம்.

ட்ராப்ஸ் :

ட்ராப்ஸ் :

இதைத் தவிர சந்தையில் பிஎச் ட்ராப்ஸ் கிடைக்கிறது. மருந்தகங்களில் அதை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம். அதில் குறிப்பிட்டிருப்பது போல ஒரு கிளாஸ் தண்ணீருக்கு எவ்வளவு ட்ராப்ஸ் ஊற்றுவது என தெரிந்து அதன்படி பின்பற்றலாம் அப்படியில்லை என்றால் மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

இந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

இது நம் உடலில் ரத்தச் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. அதோடு கெட்ட கொழுப்பினை கரைக்கவும் உதவிடுகிறது. இது ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

எலும்புகளுக்கு :

எலும்புகளுக்கு :

நம் உடலில் அமிலத்தன்மை குறைவது என்பது நம் எலும்புகளின் ஸ்திரத்தன்மையை குறைக்கிறது. இதனால் கை கால் வலி எடுப்பது, எலும்பு முறிவு ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். இதனை தடுக்க ஆல்கலைன் தண்ணீர் உதவுகிறது. இது எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.

ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடும். அதோடு இது உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஆல்கலைன் நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதால் சுறுசுறுப்புடன் இருப்போம் அதோடு உடலில் நடக்கிற செயல்களும் மிக வேகமாக நடைபெறும். அதோடு இது புற்றுநோயின் தாக்கத்தையும் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

அமிலத்தன்மை :

அமிலத்தன்மை :

இந்த ஆல்கலைன் தண்ணீர் வயிற்றிலிருக்கும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இதனால் சில நேரங்களில் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் வயிற்றிலிருக்கும் அமிலத்தின் அளவு கூடவோ குறையவோ செய்திடலாம். அதன் அளவு மாறுபடும் போதெல்லாம் உங்களுக்கு செரிமானத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த ஆல்கலைன் அந்த அமிலத்தின் அளவை சீராக வைத்திருக்க உதவிடும்.

டெலிவரி :

டெலிவரி :

கர்ப்பிணிப்பெண்கள் ஆல்கலைன் தண்ணீரைக் கொடுப்பதினால் குழந்தை பிரசவிக்கும் நேரம் மிகவும் சுமையானதாக அமையாது என்கிறார்கள். அதோடு இது தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும். குழந்தைக்கு மஞ்சள் காமாலை வராமல் தடுத்திடும்.

டெலிவரிக்கு பிறகு தாய்க்கு ஏற்படுகிற மனமாற்றத்தையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள்.

கண்கள் :

கண்கள் :

இன்றைக்கு பெரும்பாலனவர்கள் கணினி முன்பாக பணியாற்றும் வேலை தான். குழந்தைகளுக்கு விடுமுறை விட்டால் போதும் எப்போதும் டிவி,செல்போன் என பொழுதை போக்குவார்கள். இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அதன் ஆரம்ப அறிகுறியாக கண்கள் வரண்டு போகும். இதனைத் தவிர்க்கவும் இந்த ஆல்கலைன் தண்ணீர் பயன்படுகிறது.

கட்டி :

கட்டி :

இந்த ஆல்கலைன் தண்ணீர் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய கட்டிகளை கரைக்க வல்லது. அதோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஓவரியன் சிண்ட்ரோம் பிரச்சனையை தவிர்க்க முடியும். இதைத் தவிர சருமம் சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்க முடியம், கூந்தல் வளர்ச்சியையும் அதிகப்படுத்தும்.

பக்கவிளைவுகள் :

பக்கவிளைவுகள் :

இந்த ஆல்கலைன் தண்ணீரை தினமும் குடிப்பதினால் சிலருக்கு பக்கவிளைகள் ஏற்படலாம். பெரும்பாலும் தலைவலி, மூக்கடைப்பு, உடல் சோர்வு ஆகியவை ஏற்படும். இது இரண்டு வாரங்களையும் கடந்து தொடர்ந்தால் மருத்துவரை அணுகவும்.

இதைத் தவிர மிகத் தீவிரமான அளவில் என்று சொன்னால் வாந்தி, கை மற்றும் கால்கள் மரத்துப் போவது அல்லது கூசுவது எப்போதும் ஒரு வித பதட்ட மனநிலையிலேயே இருப்பது ஆகியவை ஏற்படும்.

ஸ்ட்ரிப் :

ஸ்ட்ரிப் :

சந்தையில் பிஎச் ஸ்ட்ரிப் கிடைக்கிறது. அதனைக் கொண்டு நாம் தண்ணீரின் பிஎச் அளவினை கண்டு பிடிக்கலாம். அந்த ஸ்ட்ரிப்பை தண்ணீரில் மூழ்கும்படி பிடித்திருக்க வேண்டும் அந்த ஸ்ட்ரிப்பில் 0 முதல் 14 வரை எண்கள் இருக்கும். தண்ணீரின் பிஎச் அளவு பொருத்து நிறம் மாறும்.நிறம் மாறுவதை வைத்து நாமே அதன் அளவை கண்டுபிடிக்கலாம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Benefits of Alkaline Water

Surprising Benefits of Alkaline Water
Story first published: Friday, April 20, 2018, 15:47 [IST]
Desktop Bottom Promotion