ஆழ்ந்த தூக்கத்தில் அரங்கேறும் செக்ஸோமேனியா குறித்து தெரியுமா?

Posted By: Staff
Subscribe to Boldsky

செக்ஸ் குறித்த விழிப்புணர்வு இன்றும் சரியாக போய்ச்சேரவில்லை என்பது தான் உண்மை, நவ நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்கள் கூட செக்ஸ் என்ற வார்த்தையை கேட்டதும் கொஞ்சம் தயங்கவே செய்கிறார்கள்.

செக்ஸ் குறித்து பேசுவது, உரையாடுவது, விவாதிப்பது என்பது என்னவோ பெரும் குற்றத்தைப் போலவே இன்றும் பார்க்கப்படுகிறது. அதையெல்லாம் உடைத்து தற்போது சமூக வலைதளங்களில் உரையாடத் துவங்கியிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம் தான். செக்ஸ் குறித்த புரிதல்கள் சரியாக இல்லாத காரணத்தினால் நோய்ச்சிக்கல்களிலிருந்து மனச் சிதைவு வரை ஏராளமான தொல்லைகளுக்கு ஆட்படுகிறோம்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாகக்கூட இதனை நாம் குறிப்பிடலாம். செக்ஸோமேனியா குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸோமேனியா :

செக்ஸோமேனியா :

தூக்கத்தில் பாலியல் உணர்வு அதிகரிப்பதும் அல்லது தூக்கத்தில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் செக்ஸோமேனியா என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இது ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஏற்படுகிறது என ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.

தூக்கத்தின் சுழற்சி முறையில் நடுப்பகுதி என்று கூட இதனை நாம் சொல்லாலாம்.

கனவு? :

கனவு? :

பாலியல் படங்களை பார்த்து விட்டு படுத்தால் மட்டுமே இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம், செக்ஸ் கனவு கண்டால்.... என்று சொல்வதெல்லாம் இதில் எடுபடாது. செக்ஸ் ட்ரீம் என்பது வேறு செக்ஸோமேனியா என்பது வேறு, இங்கே நீங்கள் வெறுமனே கனவு மட்டும் காண்பதில்லை.

செக்ஸோமேனியா என்பது செக்ஸ் குறித்த கனவு காண்பதல்ல, நம்மையும் அறியாமல் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

ஆழ்ந்த தூக்கம் :

ஆழ்ந்த தூக்கம் :

பாராசோமேனியா எனப்படக்கூடிய ஒரு வகை குறைப்பாட்டிலிருந்து தான் இந்த செக்ஸோமேனியாவும் வந்திருக்கிறது. பாராசோமேனியா என்றால், ஆழ்ந்த தூக்கத்தில் உங்களையும் அறியாது நீங்கள் மேற்கொள்ளும் விசித்திர செயல்களைத் தான் குறிக்கிறது.

தூக்கத்தில் நடப்பது, தூக்கத்தில் பேசுவது எல்லாம் இந்த வகை, இவர்களில் சிலர் இன்னும் தீவிரமாக செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தான் செக்ஸோமேனியா என்று அழைக்கிறார்கள்.

அரிது :

அரிது :

இந்த செக்ஸோமேனியா என்பது மிகவும் அரிதானது என்று சொல்லப்படுகிறது முதன் முதலாக 1986 ஆம் ஆண்டு இப்படியான குறைப்பாட்டுடன் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உலகம் முழுவதிலும் 94 பேர் மட்டுமே இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது.

ஆனாலும், இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் பாலியல் விழிப்புணர்வு என்பது இல்லை என்றே சொல்லலாம் அதனால் இந்த முடிவுகளில் மாற்றங்கள் இருக்கும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

இதனை பாதிக்கப்பட்டவர்களே கண்டுபிடிப்பது கடினம், பிறர் உதவுயிடன் தான் கண்டுபிடிக்க முடியும். அதோடு இது ஒரு நாளில் பார்த்து முடிவு செய்யவும் முடியாது என்பதால் ஒரு நபர் செக்ஸோமேனியாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது.

இரவுகளில் குறிப்பாக தூக்கத்தில் தொடர்ந்து குறிப்பிட்ட நபரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தால் கண்காணியுங்கள் உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் தயங்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

பொதுவான அறிகுறிகள் :

பொதுவான அறிகுறிகள் :

தங்களது உறுப்புகளை தேய்ப்பது, அல்லது இறுக்கமாக பிடித்துக் கொள்வது, தூக்கத்தில் முணங்குவது, அதிகப்படியாக மூச்சு வாங்கும், வியர்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது, மிக அரிதாக இணையுடன் செக்ஸ் நடவடிக்கைகளில், அல்லது ஃபோர் ப்ளே செய்யத் தூண்டுவர். இடையில் தூக்கத்தை கலைக்க மிகவும் சிரமப்படுவர்.

கவனம் :

கவனம் :

விழிப்பு வந்ததும், அல்லது பகல் வேலைகளில் தான் இரவில் அப்படி நடந்து கொண்டேனா என்று கேட்டு ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். சில நேரங்களில் தன்னில் மட்டுமே செய்து கொண்ட பாலியல் நடவடிக்கைகள் சில நேரங்களில் எமோஷனலாக மாறிட வாய்ப்புண்டு, அதன் தாக்கம் தான் க்ரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

தூண்டுவது :

தூண்டுவது :

தூக்கத்தில் இப்படியான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களது வாழ்க்கை முறை, எண்ணங்கள் தான் காரணமாக இருக்கிறது. அதை விட மிக முக்கிய காரணம், அவர்களது தூக்க சுழற்சி நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது.

இதைத்தவிர, உடல் ரீதியாக அவருக்கு இருக்கும் குறைபாடுகள், எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகள், தூக்கத்தில் அடிக்கடி இடர்பாடுகள் ஏற்படுவது, அவர்களது வாழ்க்கை முறை,மன அழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது

இதைத் தவிர :

இதைத் தவிர :

இதைத் தவிர என்று பார்த்தால் நேரத்திற்கு சரியாக தூங்காமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக மது அருந்துவது, போதைப்பழக்கம், மனச் சிதைவு, தூங்கும் இடம் சரியில்லாமல் இருப்பது, அது படுக்கையறை அதிக வெளிச்சத்துடன் இருப்பது, வெப்பமாக இருப்பது, தொடர்ந்து ஏதேனும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருப்பதால் நிம்மதியாக தூங்க முடியாது தவிப்பது,அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த குறைபாடு இருக்க அதிக வாய்ப்புண்டு.

தவிர்க்க :

தவிர்க்க :

இதனைத் தவிர்க்க மிக ஆரோக்கியமான அதே நேரத்தில் சிறந்த வழி என்று சொன்னால் அது இது தான், உங்களது தூக்கத்தினை சீராக பராமரிப்பது தான்.தூக்கத்தின் நடுவில் எழுந்தரிப்பது, அல்லது அடிக்கடி தூக்கம் கலையும் வகையில் இருக்கும் தொல்லைகளை எல்லாம் கலைத்துவிட்டு நிம்மதியாக தூங்க வேண்டியது அவசியம்.

மன அழுத்தத்திலிருந்து மீண்டு வர மருத்துவமும், உறவுகளும் துணையிருக்க வேண்டும்.

வாழ்க்கை முறை :

வாழ்க்கை முறை :

செக்ஸோமேனியாவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் முதலிடத்தை பிடிப்பது உங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவது தான், இது உங்கள் மீதான மதிப்பை குறைத்து விடும் என்பதால் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

கண்டறியும் முறை :

கண்டறியும் முறை :

இந்த செக்ஸோமேனியா கண்டறிய என குறிப்பிட்ட டெஸ்ட்டுகள் எல்லாம் இல்லை, தூக்கம் தொடர்பான பிரச்சனையை கண்டறிய பயன்படுத்தும் முறை தான் இதிலும் பின்பற்றப்படுகிறது.

பெரும்பாலும் மருத்துவர் தான் கேட்கும் கேள்விகளினாலேயே இதனை உறுதிப்படுத்துகிறார், தொடர்ந்து இதனை ஊர்ஜிதப்படுத்த video-polysomnography (vPSG) என்ற டெஸ்ட் எடுக்கப்படுக்கிறது.

Image Courtesy

vPSG :

vPSG :

இந்த டெஸ்ட் எடுக்கப்படும் போது, தனியறையில் பாதிக்கப்பட்ட நபரை படுக்க வைத்திருப்பார்கள், நிறைய கருவிகளை அவர் உடல் பொறுத்தப்பட்டிருக்கும், அவரது இதயத் துடிப்பு,மூச்சு விடும் வேகம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்கப்படும். அவர் முழுவதுமாக தூங்கி எழும் வரையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்.

இந்த ஸ்லீப் செக்ஸ் என்பது ஒருவகையான தூக்கத்தில் செய்யும் குறைபாடு என்று வகுத்திருக்கிறார்கள். இதனை ஓர் மனநல குறைபாடு என்று சொல்கிறார்கள். ஆங்கிலத்தில் Diagnostic Statistical Manual of Mental Disorders (DSM-5) எனப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health sex
English summary

Sexual Activities During Deep Sleep

Sexual Activities During Deep Sleep
Story first published: Wednesday, March 7, 2018, 12:46 [IST]