For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தம்பதிகள் காலை வேளையில் உடலுறவு கொள்வதால் பெறும் நன்மைகள்!

இங்கு காலையில் எழுவதற்கு முன் உடலுறவு கொள்வதால் பெறும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

பலருக்கும் காலையில் படுக்கையில் இருந்து எழவே பிடிக்காது. என்ன தான் காலையில் எழுவதற்கு அலாரத்தை வைத்துவிட்டு தூங்கினாலும், அந்த அலாரம் காலையில் ஒலிப்பதற்கு முன்பே, பலர் எழுந்து அந்த அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தூங்குவோம். ஒருவரை இரவு வெகு நேரம் விழித்திருக்க சொன்னால் நிச்சயம் விழித்திருப்போம். ஆனால் காலையில் வேகமாக எழச் சொன்னால், இது பலருக்கும் ஒரு கொடுமையான விஷயமாகவே தெரியும்.

குறிப்பாக ஆண்களை எடுத்துக் கொண்டால், காலையில் தாமதமாக எழுந்து அவசர அவசரமாக வேலைக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். இப்படி ஒரு தினத்தை அவசர அவசரமாக ஆரம்பித்தால், பின் அந்நாள் முழுவதுமே அவ்வாறே ஒருவித பதற்றத்துடன் செல்லும். எப்போதும் ஒரு தினத்தை ரிலாக்ஸாக ஆரம்பிப்பதே சிறந்தது. இதனால் அந்நாள் சிறப்பாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஒரு தினத்தை ரிலாக்ஸாகவும் சிறப்பாகவும் ஆரம்பிக்க ஒரு கப் காபி அல்லது டீ மட்டுமின்றி உடலுறவும் உதவும். பொதுவாக ஆண்களுக்கு காலையில் உடலுறவு கொள்ள அதிகம் விரும்புவார்கள். ஆண்களின் உடல் மற்றும் மனம் காலையில் எழும் போதே உடலுறுவு கொள்வதற்கு தயாராக இருக்கும். ஆனால் பெண்களின் மனதிலோ காலையில் எழும் போதே அவர்களின் மனதில் அன்றைய தினத்தில் எதிர்கொள்ளவிருக்கும் விஷயங்கள் தான் ஓடிக் கொண்டிருக்கும். பெண்கள் உடலுறுவில் ஈடுபடுவதற்கு முன், தங்களை தயார் செய்வதற்கு சிறிது நேரம் தேவைப்படும்.

இருப்பினும் தம்பதிகள் மற்ற வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவதை விட, காலை வேளையில் உடலுறவில் ஈடுபட்டால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அப்படி என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சந்தோஷமான மனநிலை

சந்தோஷமான மனநிலை

தம்பதிகள் காலையில் உடலுறவில் ஈடுபட்டால், அது அன்றைய நாள் முழுவதும் சந்தோஷமான மனநிலையில் இருக்க உதவுவதோடு, ஒருவரது ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே தினமும் காலையில் காபி, டீ குடிப்பது போன்று, ஒருமுறை காலையில் உடலுறவிலும் ஈடுபடுங்கள்.

தம்பதிகளின் பிணைப்பை மேம்படுத்தும்

தம்பதிகளின் பிணைப்பை மேம்படுத்தும்

தம்பதிகள் அதிகாலையிலேயே உடலுறவில் ஈடுபடும் போது, அது நாள் முழுவதும் தம்பதியருக்குள் இருக்கும் பிணைப்பை அதிகரிக்கும். அதுவும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும், தங்கள் துணையைப் பற்றிய நினைப்பு எந்நேரமும் இருந்து, அவர்கள் மீதான அன்பை இன்னும் அதிகரிக்கும். மேலும் அவர்களை அறியாமேலே ஒருவித புன்னகை முகத்தில் மலர்ந்தவாறு இருக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உங்களுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறதா? உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளதா? காலையில் எழும் போதே உடலுறவில் தம்பதிகள் ஈடுபட்டால், அவர்களது சந்தோஷம் அதிகரிப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமையடைய உதவியாக இருக்கும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தினமும் காலையில் உடலுறவு கொள்ளுங்கள்.

சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்

சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்

உடலுறவில் ஈடுபடும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒருவரது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், முகம் பிரகாசமாகவும், பளிச்சென்றும் காணப்படும். மேலும் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, அது மயிர்கால்களை வலிமைப்படுத்தி, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே நீங்கள் காலையில் வெளியே செல்லும் முன் இயற்கையாகவே பிரகாசமான முகத்தைப் பெற நினைத்தால், காலையில் உடலுறவு கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை

உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை

இன்று ஏராளமானோர் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கு காலையில் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். ஒருவேளை காலையில் நீங்கள் உடலுறவில் ஈடுபட்டு, ஜிம் செல்ல முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். ஏனெனில் உடலுறவில் ஈடுபடுவதே, உடற்பயிற்சி செய்ததற்கு சமம். சொல்லப்போனால், உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிக்கும் அளவை விட, உடலுறவில் ஈடுபட்டால் அதிகளவு கலோரிகளை எரிக்கலாம்.

மாரடைப்பு, பக்கவாத அபாயம் குறையும்

மாரடைப்பு, பக்கவாத அபாயம் குறையும்

தினமும் காலையில் உடலுறவில் ஈடுபட்டால், அது உடற்பயிற்சி செய்ததற்கு இணையான பலனைத் தரும். முக்கியமாக இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, தங்கு தடையில்லாத இரத்த ஓட்டத்திற்கு வழிவகுத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயம் குறையும்.

புத்துணர்ச்சி அளிக்கும்

புத்துணர்ச்சி அளிக்கும்

காலையில் உடலுறவு கொள்வதால், அது மனதில் உள்ள அழுத்தத்தை நீக்கி, மனதை ரிலாக்ஸ் அடையச் செய்து, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன், நன்கு சுறுசுறுப்பாகவும் செயல்படச் செய்யும்.

வலி நிவாரணி

வலி நிவாரணி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி, உடல் வலி போன்றவை வருமா? அப்படியானால் காலையில் உடலுறவில் ஈடுபடுங்கள். இதனால் அது எப்பேற்பட்ட தலைவலி மற்றும் ஆர்த்ரிடிஸ் வலி போன்றவற்றைக் குறைக்க உதவும். மொத்தத்தில் உடலுறவு ஒரு வலி நிவாரணி போன்று செயல்படும்.

கலோரிகளை எரிக்கும்

கலோரிகளை எரிக்கும்

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்படியானால், கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. காலையில் உடலுறவில் ஈடுபட்டாலே, சுமார் 300 கலோரிகளை எரிக்கலாம். இதனால் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons 'Morning Intercourse' Is The Best Start Of The Day

Here are some reasons why morning sex is the best start of the day. Read on to know more....
Story first published: Wednesday, March 14, 2018, 13:59 [IST]
Desktop Bottom Promotion