For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிம்மோனியா இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறிகளும்... அதை சரிசெய்யும் வழிகளும்...

|

நிம்மோனியா என்பது நுரையீரலில் பாக்டீரியா அல்லது வைரஸால் ஏற்பட்ட அழற்சி நிலையாகும். ஒருவருக்கு நிம்மோனியா இருந்தால், அதை ஆரம்பத்திலேயே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒருவேளை அதை கவனிக்காமல், சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், அது பின் உயிருக்கே உலை வைத்துவிடும். நிம்மோனியா பிரச்சனையை மருந்து மாத்திரைகளின் உதவியோடு மட்டுமின்றி, ஒருசில இயற்கை வழிகளின் மூலமும் சரிசெய்ய முடியும்.

Pneumonia: Symptoms and Best DIY Home Remedies

சொல்லப்போனால் மருந்து மாத்திரைகளால் கூட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இயற்கை வழிகளால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்பே இல்லை. பலருக்கும் நிம்மோனியா இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரியாது. அத்தகையவர்களுக்கு இக்கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும்.

ஏனெனில், இந்த கட்டுரையில் நிம்மோனியாவிற்கான அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, நிம்மோனியாவில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிம்மோனியா அறிகுறிகள்:

நிம்மோனியா அறிகுறிகள்:

* அதிகளவிலான காய்ச்சல்

* வலிப்பு

* நடுக்கம்

* தீவிரமான நெஞ்சு வலி

* சுவாசிப்பதில் சிரமம்

* ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருந்து, பின் இரத்தம் கலந்த சளி வெளியேறுதல்

* மலச்சிக்கல்

இப்போது நிம்மோனியாவில் இருந்து விடுவிக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

கற்பூரம்

கற்பூரம்

கற்பூரத்திற்கு நுரையீரலில் தேங்கியுள்ள சளியை நீக்கும் திறன் உள்ளது மற்றும் இது சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் கற்பூரத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரணிப் பண்புகள் உள்ளன. இந்த கற்பூரத்தை பொடி செய்து, டர்பென்டைன் எண்ணெயுடன் சேர்த்து கலந்து நெஞ்சுப் பகுதியில் மசாஜ் செய்தால், நெஞ்சு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேண்டுமானால் கற்பூர எண்ணெய் கொண்டும் மார்பு பகுதியை மசாஜ் செய்யலாம்.

கேரட்

கேரட்

கேரட்டுகளில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. கேரட் ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலை பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும். அதுவும் இரவு உணவிற்கு பின், கேரட் ஜூஸில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், நுரையீரல் சளியின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தய டீயை நிம்மோனியாவின் ஆரம்ப கட்டத்தில் குடித்து வந்தால் சரிசெய்யலாம். வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு கப் ப்ளாக் டீயில் 3 டீஸ்பூன் வெந்தய பொடி சேர்த்து, அத்துடன் சுவைக்கு தேன் மற்றும் வெல்லத்தை சேர்த்து கலந்து தினமும் ஒரு கப் குடித்து வாருங்கள். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்கள் முழுமையாக நீங்குவதோடு, நுரையீரல் தொற்றுக்களும் சரியாகும்.

இஞ்சி

இஞ்சி

நற்பதமான இஞ்சியை சிறிது துருவி கொள்ளுங்கள். பின் எலுமிச்சை சாற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கப் நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் இஞ்சி துருவல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் எலுதிச்சை சாறு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் நெஞ்சில் தேங்கிய சளி வெளியேறி, வலியும் நீங்கும்.

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், உடலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழித்துவிடும். அதற்கு 2-3 பல் பூண்டை சூடேற்றி நசுக்கி, நெஞ்சுப் பகுதியில் தடவுங்கள். அதுவும் ஆலிவ் ஆயில் ஊற்றி 3 பூண்டு பற்களைப் போட்டு வதக்கி, நெஞ்சுப் பகுதியில் தடவுங்கள். இதனால் நெஞ்சில் தேங்கியுள்ள சளி முழுமையாக வெளியேறி, நிம்மோனியாவில் இருந்து விடுவிக்கும்.

தேன்

தேன்

தேன் நிம்மோனியாவில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. 200 மிலி வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். இப்படி 3-ஜ டம்ளர் தேன் கலந்த நீரைக் குடித்து வந்தால், நிம்மோனியாவில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தேன் நீரில் மிளகுத் தூள் மற்றும் சுக்குப் பொடி சேர்த்து கலந்து குடியுங்கள்.

துளசி

துளசி

உலர்ந்த துளசி இலைகளை நசுக்கி சூடான யூகலிப்டஸ் எண்ணெயில் போட்டு, அந்த புகையை சுவாசியுங்கள். இது நெஞ்சுப் பகுதியில் உள்ள சளியை கரைக்கும். இல்லாவிட்டால், 5-6 துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் சிறிது மிளகுத் தூள் சேர்த்து வடிகட்டி குடியுங்கள். இந்த டீயை ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் ஒருமுறை குடித்து வந்தால், அது நிம்மோனியாவில் இருந்து விடுவிக்கும்.

எள்ளு விதைகள்

எள்ளு விதைகள்

எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது நெஞ்சு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு எள்ளு விதைகளைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்க வேண்டும். இந்த டீ தயாரிப்பதற்கு, 250 மிலி நீரில், 2 டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள் போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு, 1 சிட்டிகை உப்பு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-செப்டிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவை நிறைந்துள்ளதால், இது நிம்மோனியாவை சரிசெய்யும் சிறப்பான பொருளாக உள்ளது. மஞ்சளில் குர்குமின் அதிகம் உள்ளது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 டம்ளர் குடித்து வந்தால், நிம்மோனியாவில் இருந்து முற்றிலும் குணமாகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pneumonia: Symptoms and Best DIY Home Remedies

Pneumonia is an inflammation of the lungs, which is caused by bacteria or virus. Natural remedies for pneumonia is helpful for reducing the side effects caused as a result of taking drugs to treat pneumonia.
Desktop Bottom Promotion