சிறுநீர் கழிக்கும் போது இந்த பிரச்சனை வருகிறதா? காரணம் இதுவாக கூட இருக்கலாம்!

Written By:
Subscribe to Boldsky

சிறுநீர் கழிக்கும் போது அல்லது கழித்த பின்னர் உண்டாகும் எரிச்சலால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதன் காரணமாக அவர்களால் சிறுநீர் கழிக்க முடியாத ஒரு நிலை உண்டாகிறது. அவ்வாறு சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் கூட அடக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இவ்வாறு சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலிக்கு என்ன காரணம் என்று கேட்டால், பலரும் தெரிந்தது, சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்றால் தான் இது போன்ற எரிச்சல் உண்டாகிறது என்று கூறுவார்கள்..

ஆனால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலுக்கு, சிறுநீர் பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்று மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு சில காரணங்களும் உள்ளன. சிறுநீர் கழிக்கும் போது அல்லது கழித்த பின்னர் எரிச்சல் ஏன் உண்டாகிறது, அதற்கான தீர்வுகள் என்னென்ன, எப்படி தடுக்கலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் குழாய் தொற்று

சிறுநீர் குழாய் தொற்று

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலிக்கு பொதுவான காரணம், சிறுநீர் குழாய் தொற்று ஆகும். சிறுநீர் குழாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரிக்கும் போது இந்த தொற்றுக்கள் உண்டாகும். இந்த தொற்றுக்கு காரணம் சிறுநீர் குழாயில் நீண்ட நேரம் சிறுநீர் தேங்கி இருப்பதே ஆகும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாக காரணம், சிறுநீர் கற்களாக கூட இருக்கலாம். இது பொதுவாக கீழ் முதுகு வலியுடன் சேர்ந்து வருகிறது.

பால்வினை நோய்கள்

பால்வினை நோய்கள்

ஆண்களுக்கும் உண்டாகும் இந்த சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலாக இருக்கும் பிரச்சனை பால்வினை நோய்களால் வந்ததாக கூட இருக்கலாம். புரோஸ்டேட் புற்றுநோய்க்கு ஒரு காரணமாக கூட இது அமையலாம்.

யோனி திசுக்கள் பாதிப்பு

யோனி திசுக்கள் பாதிப்பு

இளம் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாயின் போது யோனியில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதால், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகலாம். ஈஸ்ட் தொற்றுகளும் கூட இந்த பிரச்சனைக்கு காரணமாக அமையலாம்.

மேலும் சில காரணங்கள்

மேலும் சில காரணங்கள்

  1. பிரசவத்திற்கு முன்போஅல்லது பின்போ நரம்புகளில் பாதிப்பு இருப்பது
  2. விந்து அல்லது விரைகளில் உள்ள தொற்றுநோய்
  3. பால்வினை நோய்
  4. நீரிழிவு
  5. ஊட்டச்சத்துக் குறைவு
  6. குறுகிய சிறுநீர் பாதை
சிகிச்சை

சிகிச்சை

இந்த சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டாகும் பிரச்சனைக்கு, தகுந்த சிகிச்சை அளிக்காமல் போனால் அது உயிருக்கே ஆபத்தை அளிப்பதாக கூட மாறலாம். எனவே இரண்டு நாட்களுக்கு மேலாக இந்த பிரச்சனை நீண்டால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகி தீர்வு காண வேண்டியது அவசியமாகும். சிறுநீரில் துர்நாற்றம், சிறுநீரில் இரத்தம் கலந்து இருப்பது, வாந்தி, காய்ச்சல், கீழ் முதுகு வலி, மற்றும் அடிக்கடி குளிர் போன்றவை இருந்தால் மருத்துவரை சந்தித்து தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

தண்ணீர்

தண்ணீர்

உடலுக்கு தேவையான அளவு தூய்மையான தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியமாகும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரை பருக வேண்டியது கட்டாயமாகும்.

சிறுநீர் கழிக்கவும்

சிறுநீர் கழிக்கவும்

சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்ட உடனேயே சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாகும். இது சிறுநீர் பாதையில் சிறுநீர் தேங்குவதால் உண்டாகும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடை செய்ய உதவும். அதோடு, தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாக்கவும் உதவும்.

இனிப்பு, காரம்

இனிப்பு, காரம்

மிகவும் இனிப்பான மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். காரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக அது இடுப்பு பிடிப்பு சிறுநீர் பாதை எரிச்சல் போன்றவற்றிற்கு காரணமாக அமையும்.

மது அருந்துதல்

மது அருந்துதல்

மது அருந்துதல், காபி, தேநீர் அருந்துவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இது உங்களது சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சலை அதிகரிப்பதோடு, உடலில் வறட்சியையும் உண்டாக்கும்.

சுகாதாரம்

சுகாதாரம்

உங்களது பிறப்பு உறுப்பு பகுதிகளை எப்போதும் சுகாதாரமான முறையில் பராமரித்து வர வேண்டும். ஈரமாக வைத்திருக்க கூடாது. மாதவிடாய் காலங்களில் குறிப்பாக பிறப்புகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கெமிக்கல்கள்

கெமிக்கல்கள்

பிறப்பு உறுப்பு பகுதிகளில் வாசனை நிறைந்த சோப்புகள், பவுடர்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் எரிச்சல் உணர்வு உண்டாகும். எனவே வாசனை பொருட்களை பிறப்பு உறுப்புகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

இறுக்கமான உள்ளாடைகள்

இறுக்கமான உள்ளாடைகள்

இறுக்கமான ஆடைகள் என்றாலே பாதுகாப்பற்றது என்று தான் குறிப்பிட வேண்டும். அதிலும், இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை நீங்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால், வெப்பம் வெளியேற இடம் இருக்காது. ஈரப்பதமும் வெளியேறாது.. இதனால் பெண்களுக்கு பூஞ்சை தொற்றுகள் உண்டாகும்.

உடலுறவுக்கு பின்

உடலுறவுக்கு பின்

உடலுறவின் போதும் தொற்றுக்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உடலுறவுக்கு பின்னர் நிச்சயமாக சிறுநீர் கழிக்க வேண்டியது அவசியமாகும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஒரு அருமையான மருந்தாகும். நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் இந்த சிறுநீர் பாதையில் உண்டாகும் எரிச்சலை குணப்படுத்த முடியும்.

தேங்காய் நீர்

தேங்காய் நீர்

தேங்காய் நீர் குடிப்பதால் உடல் வறட்சி, மயக்கமான நிலை போன்றவற்றில் இருந்து மீளலாம். தேங்காய் நீருடன் சிறிதளவு வெல்லம் மற்றும் மல்லி தூளை சேர்த்து குடிப்பதால் சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் வலிகள் குணமாகும்.

மல்லித்தூள்

மல்லித்தூள்

ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் சரியாகி விடும்.

அன்னாசி பழம்

அன்னாசி பழம்

அன்னாசிப் பழத்தை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி அரைத்து சாறு பிழிந்து, அந்த சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

தாமரை

தாமரை

தாமரை பூவின் இதழ்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற ரோஜா இதழ்கள் இரண்டையும் நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Painful urination Causes Symptoms and Home Remedies

Painful urination Causes Symptoms and Home Remedies
Story first published: Tuesday, January 2, 2018, 13:00 [IST]