Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம்
வயிற்று சதையை குறைக்க இது மட்டும் செஞ்சா போதும்!
வயிற்று தசையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைப்பதை விட தொப்பையை குறைக்கவேண்டும் என்பது தான் பலரது கனவாக இருந்திடும். தொடர் முயற்சிகளினால் மட்டும் தான் அதை நாம் குறைத்திடவும் கட்டுப்படுத்தவும் முடியும். தொப்பையை குறைக்க கண்டிப்பாக நீங்கள் பிரயத்தனப்பட வேண்டியது அவசியம்.
செய்யத் தயார் ஆனால் என்ன செய்ய வேண்டும், என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது தான் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. அந்த புதிரை அவிழ்க்கிறது இந்த கட்டுரை. தொப்பையை குறைப்பது மட்டுமின்றி வயிறு உப்புசம், அஜீரணக்கோளாறுகள் போன்ற பல்வேறு தொல்லைகளை இதன் மூலமாக நீங்கள் தீர்க்க முடியும்.

உணவு :
மூன்று வேலை உணவை மொத்தமாக சாப்பிடுவதற்கு பதிலாக சிறிது சிறிதாக பிரித்து ஐந்து அல்லது ஆறு வேலை உணவாக சாப்பிட வேண்டும். உணவைப் பிரித்து சிறிது சிறிதாக உண்கிறேன் என்று சொல்லி எல்லா நேரங்களிலும் கலோரி அதிகமான உணவை எடுத்துக் கொள்ளக்கூடாது.
பெரும்பாலும் ஸ்நாக்ஸ் உணவுகள் என்று நீங்கள் எடுத்துக் கொள்வதில் எல்லாம் நிறைய கலோரிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முறை உணவு எடுக்கும் போதும் உணவின் கலோரிகளை கணக்கிட்டு எடுத்துக் கொள்வது அவசியம்.

செரிமானம் :
குறைந்தளவு உணவு எடுத்துக் கொள்வதினால் தொடர்ந்து பசித்துக் கொண்டேயிருப்பது போல இருக்கும். ஜன்க் உணவுகளை தவிர்த்து குறைவான அளவை எடுத்துக் கொள்வதினால் செரிமானப் பிரச்சனை எதுவும் இருக்காது.
உணவில் ஃபைபர் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது விரைவில் செரிக்க வைத்திடும். அதோடு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கும்.

ப்ரோட்டீன் :
ப்ரோட்டீன் அவசியம் தான். ஆனால அசைவ உணவுகளிலிருந்து கிடைக்கக்கூடிய ப்ரோட்டீனை அதிகமாக சேர்ப்பதை தவிர்க்கவும். அதனை அதிகமாக எடுத்துக் கொள்வதினால் செரிமானத்தில் சிக்கல்கள் உண்டாகும்.
முளைகட்டிய தானியங்கள், பீன்ஸ்,பருப்பு வகைகளில் கிடைக்கக்கூடிய ப்ரோட்டீன் நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

மீன்:
சிக்கன் மட்டன் ஆகியவற்றுக்கு பதிலாக மீன் எடுத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டையும் விட இதில் அதிகப்படியான ப்ரோட்டீன் இருக்கிறது. அதோடு மீன் எளிதாக செரிமானம் ஆகிவிடும். அதோடு இதில் இருக்கக்கூடிய ஒமேகா 3 உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமாகும்.

திண்பண்டம் :
ஸ்நாக்ஸ் என்று சொன்னதுமே பாக்கெட் உணவுகள், எண்ணெயில் பொறித்த உணவுகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். தொப்பைக்கு முக்கிய காரணியாக இது போன்ற அளவில்லாமல் நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகள் தான் காரணமாக இருக்கின்றன.
அதற்கு பதிலாக வறுத்த பாதாம், முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

தொப்பையை குறைக்கவேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் நீங்கள் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது தான். உணவில் சேர்த்து வருகிற எண்ணெய்,சர்க்கரையை குறைக்க வேண்டும்.
சர்க்கரையை குறைப்பதென்றால் வெள்ளைச் சர்க்கரை மட்டுமல்ல இனிப்பு சார்ந்த அனைத்து விஷயங்களையும் குறைத்திடுவது அவசியம். இதே போல உப்பும். அதிகமான உப்பு சேர்ப்பதால் வயிறு உப்பியிருப்பது போல தோன்றிடும்.

செய்ய வேண்டியவை :
எடுத்துக் கொள்ளும் உணவை மென்று மெதுவாக சாப்பிடுங்கள், அவசர அவசரமாக விழுங்குவது கூடாது. மன அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு செரிமானம் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் என்பதால் மனதளவில் நீங்கள் சந்தோஷமாக இருப்பது அவசியம். பல நேரங்களில் சொல்லப்படுவது தான் போதுமான அளவு தண்ணீர் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
தாகமெடுத்த பிறகு தான் தண்ணீர் குடிப்பேன் என்றிருக்காமல் நீங்களாகவே சிறிது சிறிதாக தண்ணீரை குடித்திடுங்கள்.

நேர அட்டவணை :
உணவு சாப்பிட அரை மணி நேரம் முன்பாக தண்ணீரை குடித்திடுங்கள். அதே போல உணவு சாப்பிட்டு முடித்த உடனேயே தண்ணீரை முழுங்காமல் சிறிது நேர இடைவேளி விட்டு குடித்திடுங்கள். ஒவ்வொரு நேர உணவுக்கும் சரியான நேர இடைவேளி இருப்பது மிகவும் அவசியம். அதே போல தூங்கும் நேரமும் கணக்கிடுங்கள். ஆரோக்கியமான உடலுக்கு நல்ல ஆழ்ந்த தூக்கமும் அவசியம்.
இரவு நீண்ட நேரம் முழித்திருப்பது, இரவு ஹெவியான உணவு எடுத்துக் கொள்வது ஆகியவற்றை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி :
உங்களுடைய உணவில், அன்றாட வாழ்க்கை முறையில் இது போன்ற மாற்றங்களை எல்லாம் செய்ததுடன் இன்னொரு முக்கியமானது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் நடைப்பயிற்சி சென்று வாருங்கள்.
ஆக தொடர்ந்து நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் என்றால் நீங்களாகவே எழுந்து சின்ன வாக் சென்று விட்டு வாருங்கள்.

குறைக்க :
தொப்பையை குறைக்கவேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் நீங்கள் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இது தான். உணவில் சேர்த்து வருகிற எண்ணெய்,சர்க்கரையை குறைக்க வேண்டும்.
சர்க்கரையை குறைப்பதென்றால் வெள்ளைச் சர்க்கரை மட்டுமல்ல இனிப்பு சார்ந்த அனைத்து விஷயங்களையும் குறைத்திடுவது அவசியம். இதே போல உப்பும். அதிகமான உப்பு சேர்ப்பதால் வயிறு உப்பியிருப்பது போல தோன்றிடும்.



Click it and Unblock the Notifications