தசைப்பிடிப்பு பிரச்சனை ரொம்ப நாளாக இருக்கா? இந்த பொருள் இருக்க, அறுவை சிகிச்சை எதுக்கு?

Written By:
Subscribe to Boldsky

ஒரு தசையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும், உடலில் தண்ணீரின் அளவு குறைவதாலும், மன அழுத்தம் மற்றும் களைப்பு ஆகியவற்றின் காரணமாகவே தசைப் பிடிப்பு ஏற்படுகிறது. பின்னங்கால்களில் தசைப் பிடிப்பு ஏற்பட்டால் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும்.

அதே போல தசை எந்தவித காரணமும் இல்லாமல் ஒன்றுக்கொன்று இறுக்கிக் கொண்டாலும் தசைப் பிடிப்பு வலி ஏற்படும். நமது நரம்பு மண்டலத்தில் தவறான இரசாயன சமிச்ஜைகள் அனுப்பப்பட்டு தசைகள் ஒன்றுக்கொன்று பின்னிக் கொள்கின்றன. இந்த தசைப் பிடிப்பை வீட்டிலேயே சரி செய்வதற்கான வழிமுறைகளை இங்கே கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒத்தடம் கொடுக்கவும்

ஒத்தடம் கொடுக்கவும்

ஒரு மின்சார வெப்பமூட்டும் அட்டையோ அல்லது சுடுநீரில் நினைத்து பிழிந்த துணியையோ எடுத்து, தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் வையுங்கள். இது தசைகளுக்கு ஓய்வு கொடுக்கவும் மற்றும் இரத்த ஓட்டத்தை சரி செய்யவும் உதவும். அந்த வெப்ப அட்டையை குறைவான அளவில் வைத்து விட்டு, சுமார் 20 நிமிடங்களுக்கு தசைப் பிடிப்புள்ள இடத்தில் வைக்கவும். மீண்டும் 20 நிமிடங்கள் இடைவெளி விட்டு அட்டையை வைக்கவும்.

மிதமான சுடுநீரில் குளிக்கவும்

மிதமான சுடுநீரில் குளிக்கவும்

நீண்ட நேரத்திற்கு, மிதவெப்பமான தண்ணீரில் குளிக்கவோ அல்லது மூழ்கி இருக்கவோ செய்யுங்கள். நிவாரணம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், தண்ணீரில் ½ கோப்பை எப்சம் உப்பை போடவும். எப்சம் உப்பில் உள்ள மக்னீசயம் தசைகளை ஓய்வாக இருக்கச் செய்யும்.

அழுத்தம் கொடுக்கவும்

அழுத்தம் கொடுக்கவும்

தசைப் பிடிப்பின் மையப்பகுதியை கண்டு பிடியுங்கள். அந்த இடத்தில் கட்டை விரலையோ, உள்ளங்கையையோ அல்லது கையை முறுக்கிய நிலையில் வைத்தோ அழுத்தம் கொடுங்கள். இந்த அழுத்தத்தை 10 நொடிகளுக்கு வைத்து விட்டு, மீண்டும் அழுத்தம் கொடுங்கள். இப்படி செய்யும் போது சற்றே அசௌகரியமாக இருந்தாலும், மிகவும் வலி தரும் விஷயமாக இருக்காது. பலமுறை இதை செய்த பின்னர், உங்களுடைய தசைப் பிடிப்பு இடம் தெரியாமல் காணமால் போய் விடும்.

ஊட்டச்சத்து குறைபாடு

ஊட்டச்சத்து குறைபாடு

பொட்டாசியம், சோடியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்களின் அளவு குறைவாக இருந்தால் கூட தசைப் பிடிப்பு ஏற்படும். நீங்கள் உங்களுடைய உணவில் அதிகளவு சோடியம் சேர்க்காவிட்டாலும், மற்ற எல்லோரையும் விட அதிக அளவு அது உங்களுக்குத் தேவைப்படுவதாகவும் இருக்கும்.

முழு தானிய ரொட்டிகள் மற்றும் பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் அதிக அளவு மக்னீசியம் உள்ளது. வாழை, ஆரஞ்சு மற்றும் பரங்கிக் காய் போன்ற பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. பால் பொருட்களில் கால்சியம் நிரம்பியுள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும் போது தசைப் பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க, ஒவ்வொரு முறை உடற்பயிற்சி செய்வதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னும் 2 கோப்பை தண்ணீர் அருந்தவும். பின்னர் நிறுத்தி விட்டு 125 முதல் 250 மில்லி தண்ணீரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் குடிக்கவும். இதனால் உங்களுக்கு அதிக வியர்வை வந்தால், விளையாட்டு வீரர்கள் அருந்தும் பானங்களான கேடோரேட் போன்றவற்றை குடிக்கவும். அது இழந்த சோடியம் மற்றும் சில எலக்ட்ரோலைட்களை மறுசீரமைக்கும்.

தூங்கும் நிலை

தூங்கும் நிலை

இரவு நேரங்களில் கால்களில் தசைப் பிடிப்பு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால், பாதங்களை நீட்டிய நிலையில் வைத்து படுக்க வேண்டாம். அதே போல, உங்களுடைய போர்வையை மிகவும் இறுக்கமாக போட்டு இழுக்க வேண்டாம். இவ்வாறு செய்தால் பாதங்கள் கீழ் நோக்கி வளையத் தொடங்கி, தசைப் பிடிப்பு ஏற்படுகிறது.

எண்ணெய் மசாஜ்

எண்ணெய் மசாஜ்

கோலக்காய் எண்ணெய் (wintergreen oil) மற்றும் காய்கறி எண்ணெய்யை 1:4 என்ற விகிதத்தில் கலந்து மசாஜ் செய்து தசைப் பிடிப்பை சரி செய்யலாம். கோலக்காயில் இருக்கும் மெத்தில் சாலிசிலேட், வலியை குறைத்து, இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இந்த கலவையை ஒரு நாளைக்கு சில முறைகள் ஹீட்டிங் பேட் இல்லாமல் தடவி வந்தால், உங்களுடைய தோல் எரிந்து விட வாய்ப்புகள் உள்ளன.

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ உணவுகள்

வைட்டமின் ஈ அதிகம் சாப்பிட்டு வந்தால், இரவு நேர கால் ததை பிடிப்புகளை தவிர்க்கலாம். மேலும் வைட்டமின் ஈ தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

தசைப் பிடிப்புகள் ஏற்பட உடலில் நீர்மச் சத்து அதிகம் இல்லாததும் காரணமாக இருப்பதால், போதிய அளவு தண்ணீரை அருந்தி வரவும்.

வேலைகள்

வேலைகள்

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக நீண்ட நேரம் வண்டி ஓட்டுபவர்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள், கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.

இதற்குத் தீர்வு என்ன?

இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும். கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

எதனால் வருகிறது?

எதனால் வருகிறது?

பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

கொள்ளு

கொள்ளு

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

ஓமம்

ஓமம்

அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.

முருங்கைப்பட்டை

முருங்கைப்பட்டை

முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும். பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும். பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.

விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும். வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு..

இளம்பெண்களுக்கு..

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும். மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Treat Cramps Before Surgery Stage

How to Treat Cramps Before Surgery Stage
Story first published: Wednesday, January 17, 2018, 13:30 [IST]
Subscribe Newsletter