வயிற்றுப் புண்ணை விரைவில் குணமாக்கும் சில கை வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று ஏராளமானோர் வயிற்றுப் புண்ணால் அவஸ்தைப்படுகிறார்கள். ஒருவருக்கு வயிற்றுப் புண் வருவதற்கு காரணம் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது தான். இப்படி சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது உணவைத் தவிர்த்தாலோ, இரைப்பையில் உணவை செரிக்க உற்பத்தி செய்யப்படும் அமிலத்தால், இரைப்பைச் சுவர்கள் அரிக்க ஆரம்பித்து, வயிற்றுப் புண்ணை உண்டாக்கிவிடும்.

Home Remedies For Peptic Ulcer Pain For People At All Ages

வயிற்றுப் புண் இருந்தால், கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும். வயிற்றுப் புண்ணில் இருந்து விடுபடவும் அல்லது வயிற்றுப் புண்ணைத் தீவிரமாக்குவதிலும் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கிறது. வயிற்றுப் புண்ணை சரிசெய்யும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, உணவுகளின் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் வயிற்றுப் புண்ணை சரிசெய்யலாம்.

இந்த கட்டுரையில் வயிற்றுப் புண்ணில் இருந்து விடுவிக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருவர் பின்பற்றி வந்தால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் வயிற்றுப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வயிற்றுப் புண்ணில் இருந்து விடுவிக்கும் ஓர் பொருள் தான் வாழைப்பழம். வாழைப்பழத்தை வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால், அது எளிதில் செரிமானவதோடு, செரிமான மண்டலத்தின் வலிமையும் அதிகரிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகவே வயிற்றுப் புண் இருந்தால், அதிலிருந்து விரைவில் விடுபட தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள்.

சாதம்

சாதம்

அரிசி சாதம் வயிறு மற்றும் அடிவயிற்று வலியில் இருந்து நிவாரணம் அளிப்பதாக பலர் கூறுகின்றனர். அரிசியில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள் தான், வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலியைப் போக்குவதாக கருதுகின்றனர். அரிசி மட்டுமின்றி, பார்லி மற்றும் கோதுமை போன்றவையும் வயிற்றுப் புண்ணில் இருந்து விடுவிக்கும்.

 ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆப்பிளை வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால், அது குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இருப்பினும் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் தான் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதிகமாக ஆப்பிளை சாப்பிட்டால், அது வயிற்று உப்புசத்தை உண்டாக்கி, எதிர்மறை விளைவை உண்டாக்கும்.

டோஸ்ட்

டோஸ்ட்

பிரட் டோஸ்ட் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு. அதே சமயம் இந்த பிரட் டோஸ்ட் தான் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கும் ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இது வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும்.

கேரட்

கேரட்

கேரட்டில் இயற்கையாகவே மலமிளக்கும் பண்புகள் உள்ளதால், இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படும். கேரட்டில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இதை வயிற்றுப் புண் உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. நிறைய ஊட்டச்சத்து நிபுணர்கள், பல தாய்மார்களுக்கு குழந்தைகளுக்கு வேக வைத்த கேரட்டைக் கொடுக்க அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்தது மட்டுமின்றி, மிகவும் எளிதில் செரிமானமாகக் கூடியதும் கூட.

தயிர்

தயிர்

நமது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை செரிப்பதற்கும் உதவியாக இருக்கும். இந்த பாக்டீரியாக்களின் அளவு குறைவாக இருக்கும் போதும் ஒருவருக்கு வயிற்றுப் புண் வரக்கூடும். ஆகவே நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை ஒருவர் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் வருவது தடுக்கப்படும். மேலும் தயிர் மென்மையான செரிமானத்திற்கு உதவி, வயிற்று வலியைக் குறைக்கும்.

பால் மற்றும் முட்டை

பால் மற்றும் முட்டை

பால் மற்றும் முட்டை வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்வதால், இது வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும். அதுவும் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சூடான பாலைக் குடிக்கக்கூடாது. அதேப் போல் முட்டையை சாப்பிட நினைத்தால், அதை வேக வைத்தோ அல்லது சூப்புடன் சேர்த்தோ அல்லது கஞ்சியாகவோ சாப்பிடுவதே சிறந்தது. வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு அஜீரண பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், வாரத்திற்கு 2-3 முறை உணவை உண்பதே நல்லது.

இறால் மற்றும் மீன்

இறால் மற்றும் மீன்

இறால் மற்றும் மீன்களில் புரோட்டீன் அதிகம் இருப்பதுடன், ஜிங்க் என்னும் கனிமச்சத்தும் ஏராளமாக உள்ளது. இவை இரண்டுமே மனித உடலுக்கு அவசியமான சத்துக்களாகும். அதிலும் இதில் உள்ள ஜிங்க் உடலினுள் ஏற்படும் எப்பேற்பட்ட புண்ணையும் சரிசெய்யக்கூடியது. ஆகவே இந்த இறால் மற்றும் மீனை வயிற்றுப் புண் இருப்பவர்கள் அடிக்கடி சாப்பிட்டால், விரைவில் விடுபடலாம்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

தோல் நீக்கப்பட்ட இறைச்சி மற்றும் மீன்களில் புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இவற்றை எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதைத் தவிர்த்து, வேக வைத்து சாப்பிட்டாலே நன்மை கிடைக்கும். மேலும் இறைச்சி மற்றும் தீன் எளிதில் செரிமானமாவதோடு, அதில் உள்ள சத்துக்களால் உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.

தேன்

தேன்

தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள், வயிற்றில் புண்ணை உண்டாக்கும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, இரைப்பைச் சுவர், உணவுக் குழாய், குடல் போன்றவற்றின் உட்பகுதியை மென்மையாக வைத்து, வலியைக் குறைக்க உதவும். எனவே வயிற்றுப் புண் இருந்தால், தேனை அவ்வப்போது சாப்பிடுங்கள்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் பல அமினோ அமிலங்கள், எல்-க்ளுட்டமைன், ஜிபர்னேட் மற்றும் வைட்டமின் யூ போன்ற வயிற்றுப் புண்ணிற்கு சிகிச்சை அளிக்கத் தேவையான சத்துக்கள் உள்ளது. முட்டைக்கோஸை வேக வைத்து அடிக்கடி வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால், அது இரைப்பைச் சுவற்றை சுற்றி சளி உற்பத்தியை மேம்படுத்தி, அல்சரில் இருந்து விடுவித்து நல்ல பாதுகாப்பை வழங்கும். குறிப்பாக முட்டைக்கோஸ் விரைவில் வயிற்று புண்ணால் சந்திக்கும் வயிற்று வலியைக் குறைக்க உதவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு வயிற்றுப் புண்ணிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவும். இருப்பினும் உருளைக்கிழங்கை வறுத்தோ அல்லது பொரித்தோ சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அது வயிற்றுப் புண் நிலைமையை மோசமாக்கும். உருளைக்கிழங்கை வேக வைத்து சூப்பாகவோ, கஞ்சியாகவோ சாப்பிடுவது மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Peptic Ulcer Pain For People At All Ages

Here are some of the best home remedies for peptic ulcer pain that people should learn and make use right at home without concerning about any side effect.