நெருப்புத் துண்டை விழுங்கியது போல் வயிறு எரிகிறதா? இதோ அதற்கான சில நிவாரணிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் வயிறு ஒருவித எரிச்சலுடனேயே உள்ளதா? ஏதோ நெருப்புத் துண்டை விழுங்கியது போல் வயிறு எரிகிறதா? நிறைய பேர் இம்மாதிரியான பிரச்சனையால் பெரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். வயிற்று எரிச்சலுடன், உங்கள் வயிற்றின் மேல் பகுதி அல்லது நெஞ்சுப் பகுதியில் அசௌகரிய உணர்வு, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை, ஏப்பம், சாப்பிட ஆரம்பிக்கும் போதே வயிறு நிறைந்த உணர்வைப் பெறுவது மற்றும் குமட்டல் உணர்வு போன்றவற்றையும் உணரக்கூடும்.

Home Remedies for a Burning Sensation in Your Stomach

இதற்கு காரணம் அளவுக்கு அதிகமான அமிலம் இரைப்பையில் சுரப்பது தான். வயிற்றில் எரிச்சல் ஏற்படுவதற்கு குடல் அழற்சி நோய், உணவு ஒவ்வாமை அல்லது சகிப்புத்தன்மை, எரிச்சல் கொண்ட குடல் நோய், அல்சர், பாக்டீரியல் தொற்று போன்றவற்றாலும் வயிற்றில் எரிச்சல் ஏற்படலாம். இன்னும் சில சமயங்களில் குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகள், மன அழுத்தம், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், உடல் பருமன், அதிகமாக ஆன்டி-பயாடிக்ஸ் எடுப்பது, குளோரினேட்டட் நீர் குடிப்பது மற்றும் மோசமான டயட்டினாலும் ஏற்படலாம்.

இங்கு வயிறு எரிவதை உடனடியாக தடுக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி வயிற்று எரிச்சலில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

* 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் சுவைக்கு சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* இந்த பானத்தை தினமும் 1-2 முறை, உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.

புரோபயோடிக்ஸ்

புரோபயோடிக்ஸ்

* புரோபயோடிக்ஸ் என்பது நல்ல பாக்டீரியாவாகும். இந்த நல்ல பாக்டீரியா தயிர், குறிப்பிட்ட பால் வகைகள், சோயா பொருட்கள், டார்க் சாக்லேட், மிசோ சூப், கிமிச்சி, கொம்புச்சா டீ போன்றவற்றில் அதிகம் உள்ளது

* இந்த புரோபயோடிக்ஸ் உணவுகளினால் மட்டுமின்றி, சப்ளிமெண்ட்டுகளின் மூலமும் கிடைக்கும். எனவே அதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சி அனைத்துவிதமான செரிமான பிரச்சனைகளையும் தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

* 1 டீஸ்பூன் இஞ்சி பொடியை 1 கப் கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, தேன் கலந்து மெதுவாக குடியுங்கள். இந்த டீயை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடியுங்கள்.

* இல்லாவிட்டால், 1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி ஜூஸில் சிறிது தேன் சேர்த்து கலந்து, உணவு உண்பதற்க முன் குடியுங்கள். இப்படி ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு வேளை எடுங்கள்.

* இன்னும் எளிமையான வழி என்றால், நற்பதமான இஞ்சி துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள்.

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி வயிற்றில் சுரக்கும் அமிலங்களை நடுநிலையாக்கி, அல்சர் அபாயத்தைக் குறைக்கும்.

* 1-2 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூவை ஒரு கப் சுடுநீரில் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, சிறிது தேன் சேர்த்து கலந்து, தினமும் 3-4 முறை குடியுங்கள்.

* சீமைச்சாமந்தி கேப்ஸ்யூல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இருப்பினும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுங்கள்.

* முக்கியமாக சீமைச்சாமந்தி பூவை எப்போதும் நீரில் கொதிக்க வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அதனுள் உள்ள உட்பொருட்கள் அழிந்துவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

* 1/2-1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டம்ளர் நீரில், நன்கு கரையும் வரை கரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து உடனே குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் 2-3 முறை உணவு உட்கொண்ட 1-2 மணிநேரத்திற்குப் பின் குடிக்க வேண்டும்.

* குறிப்பாக பேக்கிங் சோடாவை வயிறு முழுமையாக நிரம்பியிருக்கும் போது எடுக்காதீர்கள். அதேப் போல் ஒரு வாரத்திற்கு மேல் குடிக்க வேண்டாம்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஜூஸ்

கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற செரிமானத்திற்கு தேவையான மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை நீக்கும் சத்துக்கள் உள்ளன. உங்களுக்கு வயிற்று எரிச்சல் அதிகமாக இருந்தால், உணவு உண்பதற்கு முன் 1/2 கப் கற்றாழை ஜூஸைக் குடியுங்கள். ஆனால் வயிற்று உப்புசம் இருந்தால், கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம்.

சூயிங் கம்

சூயிங் கம்

சூயிங் கம் வயிற்றில் ஏற்படும் எரிச்சலைப் போக்க உதவும் ஒரு எளிய வழி. சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுவதால், எச்சிலின் உற்பத்தி தூண்டப்பட்டு, உடலில் அமிலத்தன்மை குறையும். அதிலும் மதிண உணவு உட்கொண்ட 1/2 மணிநேரம் கழித்து சூயிங் கம்மை வாயில் போட்டு மெல்லுங்கள். இது இரைப்பையில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையைக் குறைக்கும். அதேப் போல் சர்க்கரை நிறைந்த மற்றும் புதினா ப்ளேவர் கொண்ட சூயிங் கம்மைத் தவிர்த்திடுங்கள்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் இது செரிமானத்தை வேகப்படுத்தி, அசிடிட்டியின் அபாயத்தைக் குறைத்து, நெஞ்சு மற்றும் வயிற்று எரிச்சலைத் தடுக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் இயற்கையாகவே ஆன்டாசிட்டுகள் உள்ளன. இது அதிகப்படியான அமில உற்பத்தியை எதிர்க்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தை கட்டுக்குள் வைக்கும்.

* நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், அசிடிட்டியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* வேண்டுமானால் வாழைப்பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி தயாரித்துக் குடிக்கலாம்.

* வயிற்று எரிச்சலில் இருந்து வாழைப்பழம் மட்டுமின்றி, ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி போன்றவைகளும் நிவாரணம் அளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies for a Burning Sensation in Your Stomach

Here are some home remedies for a burning sensation in your stomach. Read on to know more...