For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ இவற்றை செய்தாலே போதும்

உணவுமுறைகளில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் நிறைய உள்ளது. எனவே எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் என்பது மட்டுமின்றி எப்படி சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமான ஒன்ற

|

ஆரோக்கியமான வாழ்விற்கு உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. பெரும்பாலும் உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றே அனைவரும் விரும்புவோம். ஆனால் அதற்கு நாம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் தவறானவை. உணவு சாப்பிடுவதை குறைத்தால் எடை குறையும், காலை உணவை தவிர்த்தல் என்று நாம் செய்யும் உணவுதவறுகள் பல.

healthy eating rules for a healthy life

உணவுமுறைகளில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள் நிறைய உள்ளது. எனவே எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம் என்பது மட்டுமின்றி எப்படி சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமான ஒன்றாகும். இந்த பதிவில் உணவு சாப்பிடும் போது செய்ய வேண்டியவை என்னவென்பதை பார்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொடர்ந்து சாப்பிடுங்கள்

தொடர்ந்து சாப்பிடுங்கள்

மிதமாக மற்றும் வழக்கமாக சாப்பிட வேண்டியதில் நீங்கள் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். போதுமான உணவு உண்ணாமல் உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை குறைய அனுமதிக்காதீர்கள். உங்கள் வயிறு நிறைவாய் இருக்கும்போது உங்களுக்கு பசியுணர்வு குறைவாய் இருக்கும் அந்த நேரங்களில் கலோரிகள் நிறைந்த உணவை விரும்புவீர்கள்.

வீட்டில் சமைத்த உணவு

வீட்டில் சமைத்த உணவு

பதப்படுத்தப்படாத மற்றும் புதியதாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவு உங்கள் இதயத்திற்கு நல்லதாகும். நீங்கள் உணவில் சேர்க்கும் பொருட்கள் மற்றும் அதன் அளவுகளில் கவனமாக இருக்கவும். இதனால் தேவையில்லாத கலோரிகள் உடலில் சேர்வதை தடுக்கிறது.

வண்ணமிகு உணவுகள்

வண்ணமிகு உணவுகள்

உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். பதப்படுத்தப்படாத உணவுகள் உங்கள் ஆற்றல் அளவை மட்டும் உயர்த்தாமல் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. இதனுடன் வித்தியாசமான மசாலாப் பொருட்கள் சேர்ப்பது உணவை மேலும் சிறப்பாக்கும்.

MOST READ: உதவிக் கேட்டு வந்தவர்களின் படங்களை ஏடாகூடாமாக எடிட் செய்த நபர்- புகைப்படத் தொகுப்பு!

மசாலாப்பொருட்களை குறைவாக சாப்பிடுங்கள்

மசாலாப்பொருட்களை குறைவாக சாப்பிடுங்கள்

உப்பு அல்லது மற்ற மசாலா பொருட்களை உணவில் சேர்ப்பது உங்கள் உணவுக்கு சுவையை சேர்க்கும் ஆனால் அதனை அதிகம் சேர்ப்பது ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். மெதுவாக உங்கள் உணவில் மசாலாப்பொருட்களின் அளவை குறைத்து இயற்கையான சுவையை சாப்பிட தொடங்குங்கள்.

நீர் குடியுங்கள்

நீர் குடியுங்கள்

நீர் உணவுகளை எடுத்துக்கொள்வது குறிப்பாக தண்ணீர் அதிக அளவு எடுத்துக்கொள்வது உங்கள் உடலுறுப்புகளை சுத்தம் செய்வதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும். டீ, காபி, ஆல்கஹால் போன்ற நீர் உணவுகள் கூட உங்களுக்கு சில நன்மைகளை வழங்கும் ஆனால் அது அவை எடுத்துக்கொள்ளப்படும் அளவை பொறுத்தது.

பிடித்தவர்கள் சுற்றி இருப்பது

பிடித்தவர்கள் சுற்றி இருப்பது

பிடித்தவர்களுக்காக சமைப்பதும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதும் உங்கள் கவனத்தை உணவின் மீது செல்லாமல் அவர்களின் துணை மீது கொண்டு செல்லும். பிடித்தவர்களுக்காக சமைக்கும்போது நிச்சயம் அது ஆரோக்கியமான உணவாக இருக்கும் முடிந்தளவு மோசமான நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

உண்மையான உணவை சாப்பிடுங்கள்

உண்மையான உணவை சாப்பிடுங்கள்

இது ஆரோக்கியமான உணவிற்கான அடிப்படையான விதி ஆகும். பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவை ஒருபோதும் சாப்பிடாதீர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாதீர்கள். பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், இறைச்சிகள், முட்டை, மீன் போன்றவற்றை சாப்பிடாதீர்கள். ஏனெனில் இவற்றில் அதிகளவு சோடியம் இருக்கும். அதிகளவு சோடியம் ஆபத்தில்தான் முடியும்.

MOST READ: உங்க கையில இந்த அதிர்ஷ்ட ரேகை இருக்கானு பாருங்க... வாழ்க்கையில ஓஹோனு வருவீங்க

நச்சுத்தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்

நச்சுத்தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்

புகையிலை, ஆல்கஹால் மற்றும் தவறான போதை பொருட்கள் போன்றவற்றை அறவே தவிர்க்கவும். அதேபோல உணவுகளிலும் சுக்ரோஸ் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் சர்க்கரை உணவுகள் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆரோக்கியமான வாழ்விற்கு இதுபோன்ற உணவுகளை தவிர்க்கவும்.

உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை கண்டு பயப்படாதீர்கள்

உப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை கண்டு பயப்படாதீர்கள்

கொழுப்பு உணவுகள் உங்களை குண்டாக மாற்றுவதில்லை. அப்படித்தான் ஆய்வு முடிவுகள் கூறுகிறது. நிறைவுறா கொழுப்புகள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் போன்றவை உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடியவை. அதேபோல்தான் உப்பும், உங்கள்உடலுக்கு தேவையான சில முக்கிய சத்துக்களை உப்பு வழங்குகிறது. அதனை சாப்பிடும் அளவில் மட்டும் கவனமாய் இருங்கள்.

வெளியிடங்களில் சாப்பிடும்போது சரியான உணவுகளை தேர்ந்தெடுங்கள்

வெளியிடங்களில் சாப்பிடும்போது சரியான உணவுகளை தேர்ந்தெடுங்கள்

நீங்கள் வெளியில் சாப்பிட முடிவெடுத்துவிட்டால் நீங்கள் சாப்பிடும் உணவகத்தை தேர்ந்தேடுப்பதில் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். அவை பதப்படுத்தப்பட்ட உணவுகளை பயன்படுத்தாத உணவகங்களா என்பதை முதலில் தெரிந்துகொள்ளவும். அது கடினமாக இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாத உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.

பசிக்கு மதிப்பு கொடுங்கள்

பசிக்கு மதிப்பு கொடுங்கள்

உங்கள் உடல் சுறுசுறுப்பாய் இயங்க உணவுதான் அதற்கான எரிபொருளாகும். எனவே உங்கள் உடலுக்கு எரிபொருள் தேவைப்படுவது மட்டுமே சாப்பிடவேண்டும், வயிறு நிறைந்துவிட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடவும். எனவே அதிகமாக சாப்பிடுவதோ அல்லது சாப்பிடாமல் இருப்பதோ உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

MOST READ: குழந்தைகளுக்கு 2 வயதானால் ஏற்படும் முக்கிய விஷயங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

healthy eating rules for a healthy life

There are some simple rules can be followed for healthy eating. These eating rules can make your healthy and happy.
Story first published: Thursday, October 4, 2018, 17:55 [IST]
Desktop Bottom Promotion