For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை இளமையாக வைக்கும் இந்த விதைகளின் மகத்துவம் பற்றி தெரியுமா..?

பூக்களில் உள்ள மருத்துவ குணங்களும், பயன்களும் மனிதனுக்கு அதிகமாக இருப்பதாலே அதிகம் விரும்பப்படுகிறது. அந்த வகையில் நமது தேசிய சின்னமான தாமரையில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

|

இயற்கை தாயின் படைப்பில் பல அற்புதங்கள் என்றுமே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பல வகையான உயிரினங்கள் வாழ இந்த பூமி அதி அற்புதமான சூழலை ஏற்படுத்தி தந்துள்ளது. பூமியின் இயற்கை வர பிரசாத்தின் முக்கிய பங்கு மனிதனின் படைப்புதான். மற்ற உயிர்களை காட்டிலும் மனிதனே இந்த பூமியை நன்கு பயன்படுத்தி வருகின்றான். மற்றொரு அற்புதமான உயிரினங்கள் இந்த பூக்கள்தான். இவை பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் மட்டும், மனிதனால் விரும்ப படவில்லை.

lotus seeds makhana benefits

இவற்றில் உள்ள மருத்துவ குணங்களும், பயன்களும் மனிதனுக்கு அதிகமாக இருப்பதாலே அதிகம் விரும்பப்படுகிறது. அந்த வகையில் நமது தேசிய சின்னமான தாமரையில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இந்த பதிவில் தாமரை விதைகளில் ஒளிந்துள்ள எண்ணற்ற மருத்துவ பயன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு விதைக்குள் இவ்வளவா..!

ஒரு விதைக்குள் இவ்வளவா..!

எப்போதும் ஒரு சிறிய பொருளில்தான் அதிக சக்தி இருக்கும் என்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அதே போன்றுதான், இந்த சிறிய தாமரை விதையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளது. நம் முன்னோர்கள் இந்த விதைகளை மருத்துவத்திற்கு அதிகம் பயன்படுத்தினர். சீனர்கள் தாமரையின் இலைகள் மற்றும் இதழ்களை பாரம்பரிய மருத்துவத்தில் பெரிதும் உபயோகிக்கின்றனர். இதே போன்று ஜப்பானியர்கள் இதன் வேர், விதை, தண்டு என பலவற்றையும் ஒரு காய்கறி போல பயன்படுத்தி வருகின்றனர்.

ஊட்டசத்துக்கள் ஏராளம்..!

ஊட்டசத்துக்கள் ஏராளம்..!

இதில் உள்ள ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்டால் நீங்களே அதிர்ந்து போவீர்கள்..!

கால்சியம் 44 mg

இரும்பு சத்து 95 mg

பொட்டாசியம் 104 mg

மெக்னீசியம் 56 mg

புரதம் 1.2 g

காப்பர் 094 mg

கார்ப்ஸ் 18.6

பாஸ்பரஸ் 168 mg

ஜின்க் 28 mg

உடனடி சக்தியை தரும் விதை..!

உடனடி சக்தியை தரும் விதை..!

நாம் அடிக்கடி சோர்வுற்று போவதால், பல வகையான மாத்திரைகளை விழுங்கி கொண்டிருக்கின்றோம். இதில் இருந்து உங்களுக்கு விடுதலை தருகிறது இந்த தாமரை விதைகள். வறுத்த தாமரை விதையை சாப்பிட்டால், அதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், புரதம் உடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமான சூழலை உடலுக்கு தருகிறது.

தாமரை விதையும் நீரிழிவு நோயும்..!

தாமரை விதையும் நீரிழிவு நோயும்..!

உங்கள் சர்க்கரை அளவை உயர்த்தாமல் இந்த விதைகள் பாதுகாக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான மக்னேசியமும், குறைந்த அளவிலான சோடியமும் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறது. வாரத்திற்கு 2 முறை இதை சாப்பிட்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் பயன்படும். மேலும் பசியின்மை, சோர்வு போன்றவற்றையும் போக்கும். எனவே, நீங்கள் இதனை எடுத்து கொள்ளும் முன் மருத்துவரை அணுகுங்கள்.

இளமைக்கு இல்லை எல்லை..!

இளமைக்கு இல்லை எல்லை..!

தாமரை விதையில் இளமையாக வைத்து கொள்ளும் தன்மை அதிகமாக உள்ளது. L-isoaspartyl methyltransferase என்ற நொதி சிதைவடைந்த புரதம் மற்றும் செல்களை சரி செய்யும். இதனால் நீங்கள் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பீர்கள். மேலும் சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் இது வைக்க உதவும். முகத்தில் ஏதேனும் பிரச்சினை வந்தால் இந்த விதையை உபயோகித்தாலே போதும்.

இதய ஆரோக்கியத்திற்கு..!

இதய ஆரோக்கியத்திற்கு..!

அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதால் இது ரத்தத்தின் செயல்பாட்டை குறைக்கிறது. இதனால் இதயம் சார்ந்த கோளாறுகள் பெரிதும் ஏற்படுகிறது. தாமரை விதைகள் இதற்கு சிறந்த தீர்வாக உள்ளது. வறுத்த தாமரை விதைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பசியின்மையை ஓட்டும் விதை..!

பசியின்மையை ஓட்டும் விதை..!

தாமரை விதைகளில் உள்ள astringent என்ற மூல பொருள், பசியின்மையை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. சரியான வேளையில் உணவை எடுத்து கொள்ள அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். அத்துடன் நாள்பட்ட வயிற்றுப்போக்கும் குணமடையும்.

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்...

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்...

பலருக்கு இன்று அதிகரித்துள்ள பிரச்சினை இந்த சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள். இவற்றால் பலர் நிம்மதியான வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றனர். தாமரை விதைகள் சிறுநீர் பாதையில் உள்ள நோய் கிருமிகளை அழித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். ஏனெனில் இவற்றின் நொதியில் இதனை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது.

வயிற்று புண்களை குணப்படுத்த...!

வயிற்று புண்களை குணப்படுத்த...!

இந்த தாமரை விதைகளில் இயற்கையாகவே வீக்கத்தை குணப்படுத்தும் மருத்துவ குணம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அல்சர், வாய் புண்கள் மற்றும் குடல் புண்களை குணப்படுத்தி, வயிற்றின் ஆரோக்கியத்தை காக்குமாம். மேலும் பல்லின் உறுதியை பலப்படுத்தவும் இந்த விதைகள் உதவுகிறதாம்.

எவ்வாறு பயன்படுத்தலாம்..?

எவ்வாறு பயன்படுத்தலாம்..?

உலர வைத்த தாமரை விதைகளை, இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் அதனை சூப், சாலட்ஸ் அல்லது மற்ற உணவுகளில் சேர்த்து சமைத்து உண்ணலாம். அல்லது இதனை வறுத்து சமையலில் தேவைக்கேற்ப பயன்படுத்தியும் கொள்ளலாம். மேலும் சாயுங்கால வேளையில் இதனை ஸ்னாக் போன்றும் தயார் செய்து பரிமாறலாம்.

செய்ய கூடாதவை..!

செய்ய கூடாதவை..!

எந்த உணவு வகையாக இருந்தாலும் அது சீரான அளவு எடுத்து கொண்டால்தான் உடலுக்கு மருந்தாக அமையும். இல்லையேல் நஞ்சாகி விடும். குறிப்பிட்ட அளவே இதனை உணவில் சேர்க்க வேண்டும். மிகவும் முக்கியமானது என்னவென்றால், சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் உங்கள் மருத்துவரை ஆலோசித்து விட்டே இதனை உணவில் பயன்படுத்தலாம்.

இதே போன்று புதிய தகவல்களை அறிய விரும்பினால், எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள் நண்பர்களே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Lotus Seed

Lotus seeds contains magnesium, potassium, protein and phosphorus. They are also low in saturated fat, sodium. They have many health benefits.
Desktop Bottom Promotion