For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேண்டி கிரஷ் விளையாடறது ரொம்ப பிடிக்குமா?... அப்போ இது உங்களுக்குதான்...

|

உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் சர்வதேச வகைப்பாடு நோய்களின் 11 வது பதிப்பை வெளியிட்டுள்ளது, மேலும் "கேமிங் கோளாறு" முதன்முறையாக மனநல சுகாதார நிலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

health

உலக சுகாதார அமைப்பு, கேமிங் கோளாறை, கண்டறியும் கோளாறு பட்டியலில் இணைத்திருப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை என்று குடும்ப மற்றும் அடிமைகள் சிகிச்சை நிபுணர் பால் ஹொகேமேயர், Ph. D கூறியிருக்கிறார். இவர் மருத்துவ ரீதியாக தனது சொந்த நடைமுறையில் இந்த பிரச்சனையைப் பற்றி அறிந்திருக்கிறார். இந்த கோளாறு, கடந்த சில ஆண்டுகளில் அதிக வேகமாக வளர்ச்சி அடைந்திருப்பதாக கருத்து தெரிவிக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவர்

மருத்துவர்

நான் ஒரு தனிநபரின் தொழில்நுட்ப பயன்பாட்டின் மீது குடும்பத்திலுள்ள மோதல்களில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன், ஒரு குழந்தையின் சமூக, கல்வியியல் மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டில் ஏற்படும் சேதத்தைத் தணிப்பதோடு, அவற்றின் கட்டாய விளையாட்டு நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகளையும் நான் பார்க்கிறேன் என்று "டாக்டர் ஹொகேமேயர் கூறுகிறார்.

உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம்

WHO கருத்துப்படி, கேமிங் கோளாறு டிஜிட்டல்-கேமிங் அல்லது வீடியோ கேமிங்கின் ஒரு வடிவமாக மூன்று விதங்களில் வரையறுக்கப்படுகிறது. முதலாவதாக, "கேமிங்கில் குறைபாடுள்ள கட்டுப்பாடு" என்பதாகும். இதனை, எதிர்மறையான விளைவுகள் இருந்தாலும் கூட. கேமிங் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இயலாமை என்று டாக்டர் ஹொகேமேயர் விளக்குகிறார்.

வீடியோ கேம்

வீடியோ கேம்

இரண்டாவது, மற்ற நடவடிக்கைகளை விட, விளையாட்டிற்கு அதிக முன்னுரிமை வழங்குவது, அதாவது, உங்கள் தினசரி செயல்பாடுகள், மற்றும் இதர விருப்பங்களைத் தாண்டி விளையாட்டிற்கு முன்னுரிமை வழங்குவது. உதாரணத்திற்கு, குழந்தைகள் வெளியில் சென்று விளையாடாமல், சாப்பிடாமல், குளிக்காமல், தூங்காமல், ஒரே இடத்தில தனித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கூறுகிறார் டாக்டர் ஹொகேமேயர். அடிப்படையில் வீடியோ கேம்ஸ் என்பது சந்தோசம் தரும் மற்ற விளையாட்டுகள் மற்றும் நமது தினசரி வேலைகளை முடக்கி விடுகிறது.

இறுதியாக, எதிர்மறை விளைவுகள் இருந்தாலும், விளையாட்டை தொடர்வது அல்லது அதிகரிப்பது. இத்தகைய விளையாட்டு போதையால் ஒரு தனி நபரின் தினசரி செயல்பாடுகளில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதாக டாக்டர் குறிப்பிடுகிறார். இதனால் பள்ளியில் அல்லது வேலை செய்யும் இடத்தில் இவருடைய செயலாற்றல் குறைவதாகவும், ஆரோக்கியம் கெடுவதாகவும், ஊட்டச்சத்து மற்றும் தூக்கம் குறைவதாகவும், உறவுகளில் விரிசல் ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது.

விடியோ கேமுக்கு அடிமையாதல்

விடியோ கேமுக்கு அடிமையாதல்

தொடர்ந்து உங்கள் பணிகளை மேற்கொள்ளாமல், தினசரி வாழ்க்கைமுறையையும் பின்பற்றாமல், இப்படி விளையாடிக் கொண்டே இருப்பதால் என்ன நடக்கும்? உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், சமூகம், கல்வி, வேலை மற்றும் இதர முக்கிய செயல்பாடுகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவதாக உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. எப்போதும் விளையாடிக்கொண்டே இல்லாவிட்டாலும், அவ்வபோது வீடியோ கேம் விளையாடுவதால் கூட மனநலக் கோளாறு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் கவனமாக இருத்தல் அவசியம். மற்ற பழக்கங்களைப் போல் இளம் வயதினருக்கு இதற்கான போதையும் உடனடியாக உண்டாகலாம் என்று டாக்டர்.ஹொகேமேயர் கூறுகிறார். இது ஒரு இளம் பருவத்தின் போதை பழக்கத்தின் செயல்பாடாக இருக்கிறது, அது உற்சாகத்தை உறிஞ்சி ஊக்கப்படுத்துகின்றது "என்று அவர் விளக்குகிறார்.

ஒரு சில வாரங்களுக்குள் குழந்தைகள் இந்த விளையாட்டிற்கு அறிமுகமாகி, இதை அதி தீவிரமாக பயன்படுத்துவதால் பிரச்சனை உண்டாகி, அடுத்த கட்டமான பாதிப்புகளுக்கு சென்று விடுகின்றனர். இதனை கேட்கவே மிகவும் பயமாக உள்ளது.

மனநலம்

மனநலம்

சுகாதார நிபுணர்களும், திட்டங்களும் இந்த மனநலக் கோளாறு பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருந்து, இந்த நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான வழியில் உதவ வேண்டும் என்று சி என் என் பத்திரிகைக்கு விளக்கினார் விளாடிமர். இந்த கோளாறுக்கான சிகிச்சை என்பது, இந்த நிலையை சரியாக புரிந்து கொள்ளுதல், சமூக மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் மருத்துவ உதவி போன்றவை என்று கூறுகிறார் டாக்டர்.விளாடிமர் .

மனநலக் கோளாறு

மனநலக் கோளாறு

வீடியோ கேம் அடிமைத்தனம் எவ்வளவு சாதாரணமானது? இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றாலும் (அது ஒரு நோயறிதலுக்குரிய நிலைக்கு மாறியது), 2016 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வில், தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடியவர்கள் 2 முதல் 3 சதவிகிதத்தினர் மட்டுமே இந்த விளையாட்டிற்கு அடிமையாகின்றனர் என்று கண்டறியப்பட்டது. வரும் ஆண்டுகளில் இது பற்றிய ஆரய்ச்சிகள் இன்னும் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு தெரிந்தவர்கள் இந்த கேமிங் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக சுகாதார நிபுணர்களின் ஆதரவையும் வழிகாட்டுதலையும் நாடுங்கள். இது உண்மையிலேயே மிகப் பெரிய பிரச்சனையாகும்.

கேமிங் கோளாறை, மனநலக் கோளாறு பட்டியலில் இணைத்திருப்பது உங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுக்கிறதா? வீடியோ கேம் விளையாட்டு ஒரு வித அடிமைத்தனத்தை உருவாக்குகிறதா? இதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருந்தால் எங்களுடன் பகிரவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gaming disorder is real : How to know if you have it

Can you get addicted to video games? The World Health Organization (WHO) just released the 11th edition of its International Classification of Diseases, and “gaming disorder” is listed as a mental health condition for the very first time.
Story first published: Friday, June 22, 2018, 13:45 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more