For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு ஆற்றல் மிக்க விந்தணுக்களை உற்பத்தி செய்ய கூடிய உணவுகள் இதுவே...!

|

நாம் உண்ண கூடிய உணவில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன என்பதை உணர்ந்து உண்ண வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவே ஒருவரை ஆரோக்கியமுள்ளவராக வைத்து கொள்ளும். உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருந்தால், அது அவர்களின் உடல் நலத்தை முழுமையாக பாதித்து விடும். இது ஆண்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள விந்தணு குறைபாட்டிற்கும் வழி வகுக்கும்.

Foods for Strong And Healthy Sperm

விந்து உற்பத்தி தடைபட்டால் ஆண்மை குறைவு முதல் மலட்டு தன்மை வரை ஒவ்வொரு உடல் சார்ந்த கோளாறுகள் ஆண்களுக்கு வர தொடங்கும். இந்த பதிவில் ஆண்களின் உடலில் ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய கூடிய முக்கிய உணவுகளை பற்றி தெரிந்து கொண்டு நலம் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிதைவடைந்த விந்தணுவா..?

சிதைவடைந்த விந்தணுவா..?

உடலில் உற்பத்தி ஆக கூடிய விந்தணுக்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான், அவை தாம்பத்தியத்தின் போது பெண்ணின் உடலில் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து கருவை உருவாக்கும். இல்லையேல் விரைவிலே அவை இறக்க நேரிடும். இது போன்ற பிரச்சினையை தடுக்க ஒரு சில முக்கிய உணவுகள் உள்ளன.

ஆரோக்கியமான விந்தணு..!

ஆரோக்கியமான விந்தணு..!

விந்துவானது ஆரோக்கியமாக இருந்தால் தான் கரு முட்டைக்குள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து சிசுவை உருவாகும். இது ஆண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டெரோன் சுரக்கும் தன்மையை பொறுத்து வேறுபாடும். குறைந்த அளவில் உடலில் டெஸ்டோஸ்டெரோன் சுரந்தால் எந்த வித பலனையும் தராது.

ஜின்க் வகை உணவுகள்

ஜின்க் வகை உணவுகள்

விந்தணுவை ஆரோக்கியமாக வைத்து கொள்ள கூடிய தன்மை இந்த ஜின்கிற்கு உள்ளது. குறிப்பாக சிவப்பு இறைச்சி, கடற்சிப்பிகள், நண்டு , நாட்டு கோழி போன்றவற்றில் இந்த ஜின்க் அதிகம் உள்ளது. ஜின்க் ஆண்களின் மலட்டு தன்மையை முற்றிலுமாக குணப்படுத்த கூடிய முக்கிய ஊட்டசத்தாகும். உடலில் ஜின்க்கின் அளவு குறைந்தால் மலட்டு தன்மை ஏற்படும்.

ஃபோலேட் அவசியம்..!

ஃபோலேட் அவசியம்..!

ஃபோலேட் என்பது வைட்டமின் பி-யை குறிக்க கூடிய முக்கிய ஊட்டச்சத்தாகும். இந்த சத்துக்கள் உள்ள உணவு பொருள் முளைகட்டிய தானியங்கள், அஸ்பாரகஸ், பச்சை காய்கறிகள், முளைக்கீரை போன்றவையாம். இவை ஃபோலேட் அளவு அதிகரித்து விந்தணுக்களை அதிக பலம் உடையதாக மாற்றும்.

MOST READ: சயிண்டிஸ்ட் நித்தியானந்தாவின் ஆரம்பக் கால வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?

சிட்ரஸ் உணவுகள்

சிட்ரஸ் உணவுகள்

ஆண்கள் தங்களது உணவில் அதிக அளவில் சிட்ரஸ் வகை உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில். விந்துவின் உற்பத்தியை குறைத்து அவற்றின் நீந்து தன்மையை பாதிக்க செய்யும். எனவே, கிவி, ஆரஞ்ச், ஸ்டார்வ்பெரிஸ், போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

டெஸ்டோஸ்டெரோனின் அளவை கூட்ட இந்த வைட்டமின் டி பெரிது உதவுகிறது. ஆரோக்கியமற்ற வித்துக்களின் உற்பத்தியை இவை தடுத்து சத்தான விந்துவை தரும். இதற்காக சால்மன், டூனா, மாட்டின் கல்லீரல், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்

வைட்டமின் ஈ அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மையை கொண்டது. எனவே, இவை விந்தணுக்கள் சிதைவடையாமல் பாதுகாக்கும். வைட்டமின் ஈ- யை பெற சோளம் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை சமையலுக்கு பயன்படுத்தலாம். மேலும் பாதம், பிஸ்தா, வால்நட்ஸ் ஆகியவையும் நல்ல பலனை தரும்.

அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்கள்

அமினோ அமிலங்களின் டி-அஸ்பார்டிக் அமிலம் மிக முக்கிய அமிலமாகும். இவை ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து விந்து பிரச்சினைக்கு தீர்வை தரும். மேலும், விந்தணுவின் நீந்து தன்மையும் கூட்டும். இதற்காக முழு தானியங்கள், ஓட்ஸ், உலர்ந்த பழங்கள், இறைச்சி, சீஸ், யோகர்ட் போன்றவற்றை சாப்பிடலாம்.

MOST READ: முக பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் பாதாம் ஃபேசியல்...!

முதன்மையானது...

முதன்மையானது...

ஆண்களின் விந்தணுவை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முக்கியமாக உதவும். விந்தணுவின் எல்லா கோளாறுகளையும் இது குணப்படுத்தி விடும். இதற்காக கடல் உணவுகள், சியா விதைகள், ஆளி விதைகள், சோயா பீன்ஸ்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து சாப்பிட்டாலே போதும்.

வெந்தயம்

வெந்தயம்

விந்து உற்பத்தியை அதிகரிக்க இந்த வெந்தயம் பெரிதும் பயன்படுகிறது. அத்துடன் ஆரோக்கியமாக விந்துவை வைத்து கொள்ளவும் இது உதவும். எனவே, சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

மூலிகை உணவுகள்...

மூலிகை உணவுகள்...

உணவுகளில் மூலிகைக்கும் முக்கிய பங்கு உண்டு. அவை உடலின் சக்தியை கூட்ட வழி செய்கிறது. அஸ்வகந்தா வேர், ஜின்செங் வேர், மக்கா வேர் போன்றவை ஆண்களுக்கு நல்ல முறையில் உதவும். அதிலும், ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்யவும், விந்து குறைபாட்டை குணப்படுத்தவும் வழி செய்கிறது.

எனவே, மேற் சொன்ன உணவுகளை உண்டு ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் நண்பர்களே...! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods for Strong And Healthy Sperm

Infertility is increasing at an alarming rate, especially in men. Now genetics can't be blamed for everything. Unhealthy habits are the main resaon for this.
Desktop Bottom Promotion