ஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky
இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்! | Boldsky

இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு தேவைக்கு குறைவான அளவு இருப்பது அல்லது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் நிலையாகும். இந்த பிரச்சனை வந்தால், உடலுறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், உறுப்புக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

இன்று ஏராளமானோர் இரத்த சோகை பிரச்சனையை சந்திக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு இரத்த சோகை பல மருத்துவ நிலைகளால் வரும்.

Easy Home Remedies For Anemia

அதில் மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும் பெண்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு இரத்த சேகை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் வயிற்று அல்சர் அல்லது வயிற்று புற்றுநோய் இருப்போருக்கும் இரத்த சோகைக்கான வாய்ப்புள்ளது. அதோடு சிறுநீரக நோய்கள் இருந்தாலும், இரத்த சோகை வரும்.

இரத்த சோகையை ஒருவர் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அதனால் உயிரையே இழக்க நேரிடும் என்பது தெரியுமா? இரத்த சோகை பிரச்சனைக்கு மருத்து மாத்திரைகள் மட்டுமின்றி, ஒருசில இயற்கை வழிகளும் நல்ல தீர்வை வழங்கும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் மசாஜ்

உடல் மசாஜ்

எண்ணெய் மசாஜ் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். அதிலும் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி முழு உடலையும் மசாஜ் செய்து வந்தால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவியாக இருக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால், அடிக்கடி உடல் மசாஜ் செய்யுங்கள்.

தேன்

தேன்

தேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும்.

எப்சம் உப்பு குளியல்

எப்சம் உப்பு குளியல்

குளிக்கும் நீரில் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை ஊற வையுங்கள். சிறப்பான பலனைப் பெற வேண்டுமானால் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள். இதுவும், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும்.

பாதாம்

பாதாம்

பாதாம் ஏராளமான நன்மைகளை வாரி வழங்கும் பண்புகளைக் கொண்டது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான நீரில் 10 பாதாமை போட்டு இரவு முழுவதும் ஊற வையுங்கள். பின் மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுங்கள். இதனாலும் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

எள்ளு விதைகள்

எள்ளு விதைகள்

கருப்பு எள்ளு விதைகளில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். அதற்கு எள்ளு விதைகளை நீரில் போட்டு குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை தினமும் இரண்டு முறை சாப்பிட வேண்டும்.

தக்காளி

தக்காளி

தக்காளி உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கும். இரத்த சோகை உள்ளவர்கள், தினமும் குறைந்தது 2 தக்காளியை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், காலை உணவிற்குப் பின், ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

இரும்பு பாத்திரங்கள்

இரும்பு பாத்திரங்கள்

இரும்புச்சத்து குறைபாடு அல்லது இரத்த சோகை உள்ளவர்கள், இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதன் மூலம், இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இப்படி சமைத்து சாப்பிடுவதன் மூலம், உண்ணும் உணவில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

உலர்ந்த முந்திரிப்பழம், பேரிச்சம் பழம், உலர் திராட்சை

உலர்ந்த முந்திரிப்பழம், பேரிச்சம் பழம், உலர் திராட்சை

உலர்ந்த முந்திரிப்பழம், பேரிச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். அதற்கு இந்த மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சூரிய குளியல்

சூரிய குளியல்

இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பவர்கள், சூரிய கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு நீண்ட நேரம் இருக்க வேண்டும். அதிலும் அதிகாலை வெளியில் சருமத்தில் பட வேண்டும். இதனால் சூரிய கதிர்களில் உள்ள வைட்டமின் டி உடலில் அதிகரித்து, இரும்புச்சத்தை உறிஞ்ச உதவி, இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து விடுவிக்கும்.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையும் இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும். அதற்கு பசலைக்கீரையை வேக வைத்து, பேஸ்ட் செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட, இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகயைலி இருந்து விடுபடலாம். இல்லாவிட்டால் பசலைக்கீரையை கடைந்து அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், வாழைப்பழம் கூட இரத்த சோகையில் இருந்து விடுபட உதவும். இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதால், அன்றாடம் சாப்பிடும் வாழைப்பழத்தை தேன் தொட்டு சாப்பிடுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

இரத்த சோகை உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஆப்பிளில் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதோடு, கேக்குகள், ப்ரௌனீஸ் மற்றும் பல இனிப்பு பண்டங்களில் ஆப்பிளை சேர்த்தும் சாப்பிடலாம்.

பால்

பால்

பால் இரத்த சோகை பிரச்சனையைக் குறைக்க உதவும். அதிலும் பாலை இரும்பு பாத்திரத்தில் காய்ச்சி, அத்துடன் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரித்து, இரத்தத்தில் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

மாதுளை

மாதுளை

மிகவும் சுவையான மாதுளம் பழத்திலும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த மாதுளை ஹீமோகுளோபின் குறைபாட்டை நீக்கி, இரத்த சிவப்பணுக்களின் அளவை மேம்படுத்த உவும். அதற்கு காலையில் மாதுளை ஜூஸைக் குடிக்க வேண்டும். அதோடு மாதுளையை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடுவதோடு, அன்றாடம் ஸ்நாக்ஸ் வேளைகளிலும் சாப்பிட வேண்டும்.

உலர்ந்த கருப்பு திராட்சை

உலர்ந்த கருப்பு திராட்சை

10 உலர்ந்த கருப்பு திராட்சையை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் எழுந்ததும், விதைகளை நீக்கிவிட்டு, திராட்சையை நீருடன் அப்படியே சாப்பிட வேண்டும். இதனாலும் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy Home Remedies For Anemia

Here are some simple and easy home remedies for anemia. Read on to know more...
Story first published: Monday, March 12, 2018, 10:10 [IST]