For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

புற்றுநோய்களில் பலவகை உள்ளது அதில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நுரையீரல் புற்றுநோயால்தான். உலகளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 சதவீதத்தினர் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத

By Saranraj
|

புற்றுநோய்களில் பலவகை உள்ளது அதில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவது நுரையீரல் புற்றுநோயால்தான். நுரையீரல் புற்றுநோய் என்பது அதிகளவு புகைபிடித்தல் மற்றும் சுற்றுசூழல் காரணங்களால் ஏற்படுகிறது. அதிகளவு புகையிலை பொருட்களை பயன்படுத்துவது நுரையீரலை பாதித்து நாளடைவில் புற்றுநோயாக மாறிவிடும். ஆனால் புகைபிடிப்பவர்கள் மட்டும்தான் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை.

causes and treatments for lungs cancer

உண்மைதான் உலகம் முழுவதும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பலருக்கு புகைபிடிக்கும் பழக்கமே இல்லை. நுரையீரல் புற்றுநோய் ஏற்பட ரேடான் வாயு, காற்று மாசுபாடு, மரபணுக்களில் இருந்து பல காரணங்கள் உள்ளது. ஆரம்பத்திலேயே இதனை கண்டறிந்து விட்டால் இதனை குணப்படுத்துவது எளிது. எனவே நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள் அதன் வகைகள் மற்றும் அதன் சிகிச்சை முறைகளை இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்

புகைபிடிக்காதவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய்

உலகளவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 சதவீதத்தினர் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மையாகும். பெரும்பாலும் புகைபிடிக்காத புற்றுநோய் நோயாளிகள் இளைஞர்களாகவும், பெண்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் கட்டிகளும் மிகவும் வித்தியாசமானதாய் இருக்கும். இவற்றை புதிய மருத்துகளை கொண்டு குணப்படுத்திவிடலாம். அதனால்தான் புகைபிடித்து புற்றுநோய் வந்தவர்களை விட புகைபிடிக்காமல் புற்றுநோய் வந்தவர்கள் அதிக காலம் வாழ்கிறார்கள்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

நுரையீரல் புற்றுநோயின் மிகப்பெரிய பாதகமே அதனை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினமாகும். சிலருக்கு எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் எடுக்கும்போது மார்புப்பகுதியில் வட்டவடிவில் நாணயம் போல காணப்படும். அவ்வாறு இருந்தால் உடனடியாக புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இதன் அறிகுறிகள் மற்ற புற்றுநோய்களில் இருந்து சற்று மாறுபட்டது. நுரையீரலை சுற்றி ஏற்படும் புற்றுநோய் கட்டிகள் சுவாசித்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நுரையீரல் புற்றுநோய் இருந்தால் மூச்சுத்திணறல், மார்பு வலி, இருமும்போது இரதம் வருதல், தோள்பட்டையில் வலி, உணவை விழுங்கும்போது உணவுக்குழாயில் வலி ஏற்படுவது போன்றவை நோய் நுரையீரல் புற்றுநோய் பரவியிருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

எலும்புகளில் பாதிப்பு

எலும்புகளில் பாதிப்பு

புற்றுநோய் பரவ தொடங்கிவிட்டால் அது எலும்புகளுக்கும் பரவி எலும்புகளின் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இது மூளைக்கு பரவினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பார்வைக்கோளாறு, தலைவலி, வலிப்பு போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம்.

நுரையீரல் புற்றுநோயின் வகைகள்

நுரையீரல் புற்றுநோயின் வகைகள்

நுரையீரல் புற்றுநோய் அவற்றின் அளவுகளை பொருத்து இரண்டு வகைப்படும். சிறிய செல் நுரையீரல் புற்றுநோய் மற்றொன்று சிறிய செல் அல்லாத புற்றுநோய். இந்த இரண்டு புற்றுநோய்களின் பரவும் விதம், சிகிச்சைமுறை என அனைத்தும் வேறுபடும். சிறிய செல் புற்றுநோய்கள் ஏற்பட முக்கிய காரணம் புகைபிடித்தால்தான், மொத்தம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 20 சதவீதத்தினர் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதத்தினர் புகைபிடிக்காதவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் வேகமாக பரவும் தன்மையுடையது. மீதமுள்ள 80 சதவீதத்தினர் சிறிய செல் அல்லாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்தவகை செல்களால் பதிப்பட்டுள்ளது என்பதை பொருத்து இது அடினோகார்ஸினோமஸ், லார்ஜ் செல் கார்ஸினோமஸ், ஸ்கேமஸ் செல் கார்ஸினோமஸ் என பல வகைகள் உள்ளது.

ரேடான்

ரேடான்

உலக சுற்றுசூழல் மையம் புகைபிடித்தலுக்கு பிறகு அதிகளவு புற்றுநோயை ஏற்படுக்கூடிய ஒன்று ரேடான் வாயுதான் என்று அறிவித்துள்ளது. ரேடான் வாயு யுரேனியத்தை பிளக்கும் போது காற்றில் கலக்கும் ஒரு வாயு ஆகும், பொதுவாக இது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இந்த இயற்கை கதிரியக்க வாயு சிலசமயங்களில் வீட்டிற்கு அடியில் சென்று சேர்ந்து விடும் இங்குதான் ஆபத்து ஆரம்பிக்கிறது. அப்படியே இருந்தாலும் உங்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தெரிய பல நாட்கள் ஆகும். ஏனெனில் ரேடான் வாயுவை காணவோ, உணரவோ இயலாது, இதனை கண்டறிய ஒரே வழி சோதனை செய்து பார்ப்பதுதான். இதனை கண்டறிய சில சாதனங்கள் உள்ளது. ஒருவேளை இதன் அளவு அதிகமாய் இருந்தால் நிச்சயம் அவை குறைக்கப்பட வேண்டும்.

கதிரியக்க சிகிச்சை

கதிரியக்க சிகிச்சை

சிலர் மற்ற நோய்களுக்காக கதிரியக்க சிகிச்சை மேற்கொண்டிருப்பார்கள் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெண்களை பொறுத்தவரையில் மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

சமையலறை புகை

சமையலறை புகை

சமையலறை புகைக்கூட நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். உலகம் முழுவதும் 3 பில்லியன் மக்கள் சமயலறையில் புகையில் கஷ்டப்படுகின்றனர். குறைந்த காற்றோட்டம் கொண்ட சூழ்நிலையில் சமைக்கும்போது அந்த எரிபொருளின் புகை நுரையீரலை பாதிக்கக்கூடும். இதனால் பாதிக்கப்படுவதில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம். குறிப்பாக சீனாவின் கிராமப்புறத்தில் உள்ள பெண்கள் பலரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?

நுரையீரல் புற்றுநோய்க்கென தனி அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சில அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியமாகும். தொடர்ந்து இருமல், இருமலின் போது இரத்தம் வருதல், மார்பு வலி, திடீரென ஏற்படும் எடை இழப்பு அல்லது அதிகளவு சோர்வு, சுவாசக்கோளாறுகள். இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் இருந்தாலும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அறுவைசிகிச்சை

அறுவைசிகிச்சை

நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த பல வழிகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் ஆரம்பநிலையிலேயே கண்டறியப்பட்டால் மட்டுமே எளிமையானதாக இருக்கும். சில சிகிச்சை முறைகள் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டிகளை அகற்றுவது புற்றுநோய் ஸ்டேஜ் 1 அல்லது ஸ்டேஜ் 2- ல் இருந்தால் மட்டுமே சாத்தியம். புற்றுநோய் கட்டிகளின் அளவை பொருத்தே அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாமா அல்லது வேறுமுறையை பயன்படுத்தலாமா என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

ரேடியேஷன்

ரேடியேஷன்

இது இரண்டு வகை புற்றுநோய்க்கும் பயன்படுத்தப்படும் சிகிச்சை முறையாகும். இந்த முறையில் X கதிர்களை கொண்டு புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். இதனை வெளிப்புறத்தில் இருந்தும் செய்யலாம், உடலுக்கு உட்புறம் இருந்தும் செய்யலாம்.

டார்கெட்டட் தெரபி

டார்கெட்டட் தெரபி

இது உடலுக்கு உட்புறம் இருந்து செயல்படுத்தப்படும் முறையாகும். இம்முறையில் உடலுக்குள் செலுத்தப்படும் மூலக்கூறுகள் புற்றுநோய் கட்டிகளை பரவச்செய்யும் செல்களை உள்ளிருந்தே அழித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health health care symptoms
English summary

causes and treatments for lungs cancer

Lung cancer is the number one cause of cancer deaths in both men and women. Cigarette smoking is the principal risk factor for development of lung cancer.
Story first published: Wednesday, August 1, 2018, 20:14 [IST]
Desktop Bottom Promotion