For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோள்பட்டை வலி அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட இதோ சில எளிய இயற்கை வழிகள்!

இங்கு தோள்பட்டை வலியில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

இன்று ஏராளமானோர் தோள்பட்டை வலியால் கஷ்டப்படுகிறார்கள். எப்போது ஒருவரது தோள்பட்டையைச் சுற்றியுள்ள தசைகள் அல்லது தசைநாண்களில் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது தோள்பட்டை வலியை உண்டாக்கும். தோள்பட்டை வலி இருந்தால், அது பல அசௌகரியங்களை உண்டாக்குவதோடு, அன்றாட வேலைகளை பெரிதும் பாதிக்கும்.

Best Natural Home Remedies For Shoulder Pain

தோள்பட்டை வலி முதியவர்களை மட்டுமின்றி, அனைத்து வயதினரையும் பாடுபடுத்தக்கூடியது. குறிப்பாக கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு தோள்பட்டை வலி அடிக்கடி வரும். தோள்பட்டை வலி வந்தால் பலரும் கடைகளில் விற்கப்படும் ஸ்ப்ரேகள் அல்லது மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.

ஆனால் இந்த தோள்பட்டை வலிக்கு பல்வேறு இயற்கை வைத்திய முறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம், நிச்சயம் தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம். உங்களுக்கு தோள்பட்டை வலி அடிக்கடி வருமா? அதற்கான இயற்கை நிவாரண வழிகளை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே கடுமையான தோள்பட்டை வலிக்கான சில எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோள்பட்டை வலி வருவதற்கான காரணங்கள்

தோள்பட்டை வலி வருவதற்கான காரணங்கள்

தோள்பட்டை வலியானது கழுத்து அல்லது கைகளில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் வரும். நாள்பட்ட தோள்பட்டை வலி வருவதற்கு ஆர்த்ரிடிஸ், குருத்தெலும்புகளில் உள்ள பாதிப்பு, எலும்பு முறிவு அல்லது தண்டுவடத்தில் காயம் போன்றவைகளும் காரணங்களாக இருக்கும். தோள்பட்டை வலி பெரும்பாலும் தோள்களின் இயக்கத்தில் கட்டுப்பாடு மற்றும் தோள்களில் வீக்கம் மற்றும் மூட்டுகளில் உள்ள விறைப்பு ஆகியவற்றுடன் இணைகிறது.

தோள்பட்டை வலிக்கான அறிகுறிகள்

தோள்பட்டை வலிக்கான அறிகுறிகள்

* தோள்பட்டையில் விறைப்பு

* தோள்களை அசைப்பதில் சிரமம்

* தோள்பட்டைப் பகுதிகளில் வீக்கம்

* தோள்பட்டையில் விட்டுவிட்டு வலியை உணர்தல்

மருத்துவரை உடனே அணுக வேண்டியவர்கள்

மருத்துவரை உடனே அணுக வேண்டியவர்கள்

* தோள்பட்டையின் இடது பக்கத்தில் வலியை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது இதய பிரச்சனைகளைக் குறிக்கும்.

* தோள்பட்டையில் கடுமையான தாங்க முடியாத வலி மற்றும் அசைக்க முடியாமல் தவிர்ப்பவர்கள்.

* தோள்பட்டை வலியினால் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவர்கள்

இப்போது தோள்பட்டை வலிக்கான சில எளிய இயற்கை வைத்திய முறைகளைக் காண்போம்.

ஐஸ் பேக்

ஐஸ் பேக்

* ஒரு பாலிதீன் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டிகளைப் போட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை கொண்டு வலியுள்ள தோள்பட்டையில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஐஸ் கட்டிகளை நேரடியாக தோள்ட்டையில் வைக்க வேண்டாம்.

* இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* ஒருவேளை ஐஸ் கட்டிகள் இல்லாவிட்டால், உறைய வைத்த காய்கறிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.

கோதுமை மாவு ஒத்தடம்

கோதுமை மாவு ஒத்தடம்

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு லேசாக வறுத்து சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

* இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தோள்பட்டை மசாஜ்

தோள்பட்டை மசாஜ்

* ஒரு பாத்திரத்தில் 2-3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, அதில் சிறிது கற்பூரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பின் அந்த எண்ணெயை வலியுள்ள தோள்பட்டை பகுதியில் தடவி, வட்ட சுழற்சியில் மசாஜ் செய்யுங்கள்.

* இப்படி இந்த செயலை தொடர்ந்து வலி போகும் வரை செய்யுங்கள்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

* எலுமிச்சையை இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். பின் ஒரு பாதியை மட்டும் சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின்பு அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து, அதனை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ளுங்கள்.

* இந்த பானத்தை தினமும் காலையில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர, தோள்பட்டை வலி குறைந்திப்பதைக் காணலாம்.

எப்சம் கல் உப்பு

எப்சம் கல் உப்பு

* 2-3 கப் எப்சம் கல் உப்பை, மஸ்லின் துணியில் போட்டு கட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் அந்த மூட்டையை வெதுவெதுப்பான நீர் நிரப்பிய குளியல் டப்பில் போட்டு, அதனுள் தோள்பட்டை மூழ்கும் வரை 30 நிமிடம் உட்காருங்கள்.

* இப்படி தினமும் செய்து வந்தால், தோள்பட்டை வலியில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சள்

* 1-2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை வலியுள்ள தோள்பட்டையில் தடவ வேண்டும்.

* இப்படி வலி போகும் வரை தொடர்ந்து செய்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

* 2-3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை வலியுள்ள தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

* இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

* மாற்று வழியாக, ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடிக்கலாம்.

இஞ்சி

இஞ்சி

* சிறு துண்டு இஞ்சியை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீரை ஊற்றி கொதித்ததும் இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் துருவிய இஞ்சியைப் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி, 2 டீஸ்பூன் தேன் கலந்து சூடாக இருக்கும் போதே குடிக்க வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

யூகலிப்டஸ் ஆயில்

யூகலிப்டஸ் ஆயில்

* 1 டீஸ்பூன் யூகலிப்டஸ் ஆயிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த கலவையை வலியுள்ள தோள்பட்டையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

* இப்படி தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Natural Home Remedies For Shoulder Pain

There are several easy home remedies for shoulder pain, here are the best. Read on to know more...
Desktop Bottom Promotion