For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வருடத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் இந்நோய் பற்றி தெரியுமா?

|

லூபஸ் என்பது மிகவும் தீவிரமான நோய். இது யாரை வேண்டுமானாலும் தாக்கும். இந்நோயால் பெரும்பாலும் இளம் பெண்கள், அதுவும் 15 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த லூபஸ் நோய் ஒருவருக்கு வருவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் லூபஸ் ஒரு ஆட்டோஇம்யூன் நோய். அதாவது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்கள் தவறுதலாக ஆரோக்கியமான செல்களை தாக்க ஆரம்பிக்கும் ஒரு நிலையாகும்.

லூபஸ் நோயால் உடலின் பல்வேறு பாகங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். அதில் மூட்டுகள், சருமம், சிறுநீரகங்கள், இரத்த செல்கள், மூளை, இதயம், நுரையீரல் போன்றவை குறிப்பிடத்தக்கவை. லூபஸ் நோய்க்கான அறிகுறிகள் வேறுபடும். அதில் மிகுதியான சோர்வு, மூட்டு வீக்கம் அல்லது வலி, அரிப்பு மற்றும் காய்ச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். நிலைமை மோசமாகும் போது, இந்த அறிகுறிகளை தீவிரமாக சந்திக்க வேண்டியிருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கெல்லாம் லூபஸ் நோயின் தாக்குதல் ஏற்படலாம்?

யாருக்கெல்லாம் லூபஸ் நோயின் தாக்குதல் ஏற்படலாம்?

பெரும்பாலான ஆய்வில், ஜீன்கள் முக்கிய பங்கை வகிப்பதால், ஜீன்களால் அபாயம் இருக்கலாம். ஆளால் ஜீன்கள் மட்டுமே லூபஸ் நோய்க்கு காரணமாகிவிட முடியாது. வேறு சில காரணிகளும் இந்நோயை தூண்டிவிடும்.

லூபஸ் நோய் இருப்பதை கண்டறிவது எப்படி?

லூபஸ் நோய் இருப்பதை கண்டறிவது எப்படி?

லூபஸ் நோயை ஒரே பரிசோதனையில் கண்டறிய முடியாது. இதனைக் கண்டறிவதற்கு ஒரு மாதம் அல்லது வருடங்கள் கூட ஆகலாம். மருத்துவர்கள் பரம்பரையில் உள்ளோருக்கு இருந்த பிரச்சனைகள் முழுவதையும் கேட்டுத் தெரிந்து, பின் சில உடல் சோதனைகளான இரத்த சோதனைகளை எல்லாம் எடுத்து, பின்பு தான் லூபஸ் நோயை உறுதிப்படுத்துவார்கள். சில சமயங்களில் மருத்துவர்கள் சருமத்தையும், சிறுநீரகங்களில் உள் திசுக்களையும் எடுத்து பரிசோதித்து, பின் லூபஸ் நோய் இருப்பதை உறுதி செய்வார்கள்.

லூபஸ் நோயை குணப்படுத்த முடியுமா?

லூபஸ் நோயை குணப்படுத்த முடியுமா?

லூபஸ் நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அதனை முழுமையாக குணப்படுத்துவது என்பது கடினம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம், கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கலாம். அதேப் போல் ஒருவருக்கு லூபஸ் நோயை ஆரம்பதிலேயே கண்டுபிடித்தால், அதைக் குணப்படுத்த முடியும். ஆனால் முற்றிய நிலையில் தான் குணப்படுத்துவது என்பது முடியாத ஒன்று.

இக்கட்டுரையில் லூபஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருவர் தொடர்ந்து பின்பற்றி வந்தால், லூபஸ் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

திராட்சை விதை

திராட்சை விதை

திராட்சையின் விதை உடலைத் தாக்கிய லூபஸ் பிரச்சனையை உண்டாக்கிய தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும். அதுவும் திராட்சையின் விதைகளை அரைத்து சாறு எடுத்து, 1 கப் நீரில் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால், லூபஸ் பிரச்சனையில் இருந்து விலகி இருக்கலாம்.

பைன் மரப்பட்டை

பைன் மரப்பட்டை

பைன் மரப்பட்டை லூபஸ் பிரச்சனையால் உடலினுள் ஏற்பட்ட காயங்களை சரிசெய்ய உதவும். அதற்கு 50 மில்லிகிராம் பைன் மரப்பட்டை பொடியை ஒரு கப் சுடுநீரில் கலந்து, முழுமையாக கரைந்த பின் குடிக்க வேண்டும். இதனால் அபாயகரமான இந்த லூபஸ் நோயில் இருந்து விலகி இருக்கலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை லூபஸ் பிரச்சனைக்கு எதிராக செயல்படச் செய்யும். அதற்கு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை 1 கப் சூடான பாலில் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் உடலில் லூபஸ் பிரச்சனையை எதிர்த்துப் போராடும் சக்தி மேம்படும். வேண்டுமானால் அன்றாட உணவில் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்வதும் நல்லது.

ரெய்ஷி காளான்

ரெய்ஷி காளான்

ரெய்ஷி காளான் மனித உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, லூபஸ் பிரச்சனையை எதிர்த்துப் போராட உதவும். அதற்கு ஒரு கிராம் ரெய்ஷி காளான் எசன்ஸை அன்றாட உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.

பச்சை மற்றும் வேக வைத்த காய்கறிகள்

பச்சை மற்றும் வேக வைத்த காய்கறிகள்

பொதுவாக காய்கறிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் மற்றும் லூபஸ் பிரச்சனைக்கு எதிராக வேலை செய்யும். அதற்கு காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாலட் போன்று, ஒவ்வொரு வேளை உணவு உண்பதற்கு முன் தினமும் சாப்பிடலாம். இப்படி ஒரு நாளைக்கு 3 பௌல் காய்கறி சாலட் சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, லூபஸ் நோயில் இருந்து விலகி இருக்கலாம்.

தண்ணீர்

தண்ணீர்

நாள் முழுவதும் உடலை வறட்சியின்றி வைத்துக் கொள்ள தண்ணீர் அவசியமாகும் மற்றும் இது உடலின் அனைத்து பாகங்களையும் தாக்கிய லூபஸ் நிலைக்கு எதிராக செயல்படும். மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 8 டம்ளர் நுர் அவசியமானதாகும். தினமும் ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறையும் 1 டம்ளர் நீரைத் தவறாமல் குடியுங்கள். இதனால் உடலின் உள்ளுறுப்புக்கள் வறட்சியின்றி நன்கு செயல்படும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலமும் திறம்பட வேலை செய்யும்.

மீன்

மீன்

உடலைத் தாக்கிய லூபஸ் நோய் தாக்கத்தினால், சருமத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மீன் நல்ல தீர்வளிக்க உதவும். எனவே லூபஸ் நோயால் கஷ்டப்படுபவர்கள், தினந்தோறும் மீனை உட்கொள்வதன் மூலம், மீனில் உள்ள சத்துக்கள் உடலினுள் ஏற்பட்ட காயங்களை எதிர்த்துப் போராடி சரிசெய்யும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதைகளில் உள்ள அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், லூபஸ் நோயால் உடலினுள் ஏற்பட்ட அழற்சியைக் குறைக்க உதவும். ஆளி விதையை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், லூபஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகங்கள் சரியாகி, சிறுநீரக செயல்பாடு மேம்படும்.

சிக்கன்

சிக்கன்

சிக்கனில் வளமான அளவில் புரோட்டீன் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் மற்றும் லூபஸ் நோயால் உடலினுள் ஏற்பட்ட அழற்சியை எதிர்த்துப் போராடும். அதற்காக சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால் அது உடல் சூட்டை அதிகரித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Methods To Cure Lupus

Here are some best methods to cure lupus. Read on to know more...
Desktop Bottom Promotion