வொர்க் அவுட் முடித்ததும் சூடான நீரில் குளிக்கிறீர்களா? அப்போ இதப் படிங்க!

Posted By:
Subscribe to Boldsky

வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து விட்டோ அல்லது விளையாடிவிட்டு உடனேயே குளிக்கக்கூடாது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு தான் குளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற நேரத்தில் சூடான நீரில் குளித்தால் என்ன ஆகும்?

வியர்வை அதிகமாக சுரக்கும் நேரத்தில் யாரும் சூடான நீரில் குளிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் உடற்பயிற்சி முடித்து சற்று ரிலாக்ஸ் ஆன பிறகு சூடான நீரில் குளிப்பது மிகவும் நல்லது தெரியுமா? இது உங்களுக்கு உடலுக்கு ரிலேக்ஸேசனை தந்திடும். ஆனால் இதுப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டே தானிருக்கிறது. உண்மையில் அப்படி சூடான நீரில் குளிப்பதனால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த அழுத்தம் :

ரத்த அழுத்தம் :

டெம்ப்பரேச்சர் என்ற பத்திரிக்கை இது குறித்து ஓரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் இது அதிகப்படியான ரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. அதோடு உடலில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்ல முறையாகும். உணவு சாப்பிட்ட உடனோ அல்லது எதாவது உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ சிலருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

கலோரி :

கலோரி :

ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். தீவிர உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டுப் பயிற்சியோ முடித்த பிறகு இப்படி சுடான தண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலிலிருந்து 140 கலோரி வரை குறைகிறது தெரியுமா?

சுமார் அரைமணி நேரம் வாக்கிங் சென்றால் கரையக்கூடிய கலோரி தான் இது!

வலி :

வலி :

உடற்பயிற்சி முடித்து விட்டால் சிலருக்கு தசைகளில் வலி ஏற்படும். இதனை தவிர்க்கவும் சூடான நீர் குளியல் பயன்படுகிறது. இது வலியை குறைப்பதுடன் உடலில் ஏற்பட்டிருக்கக்கூடிய ஸ்டிஃப்னஸையும் குறைத்துவிடும் என்பதால் பாடி பில்டிங் செய்பவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். அதிகப்படியான வலி என்றால் சுடு நீரில் குளிக்கலாம்.

ரத்த ஓட்டம் :

ரத்த ஓட்டம் :

உடற்பயிற்சிக்குப் பிறகு சூடான நீரில் குளிப்பது உடலில் ரத்த நாளங்களை எல்லாம் விரிவடையச் செய்திடும். இதனால் ரத்த ஓட்டம் எல்லா இடங்களுக்கும் சீராக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிர்ந்த நீரையோ பயன்படுத்தாமல் குறைந்தது 40 டிகிரி சூடான நீரைப் பயன்படுத்தலாம்.

சருமப் பிரச்சனைகள் :

சருமப் பிரச்சனைகள் :

உடற்பயிற்சியின் போது அதிகப்படியான வியர்வை வெளியேறும். அதன் மூலமாக வெளிவறும் கிருமிகள் சில நேரங்களில் சருமத்திலேயே தங்கிடும். அதனை சரியாக கழுவாமல் இருந்தால் அது சருமப் பிரச்சனைகளை உண்டாக்கிடும்.

ஆரம்பத்தில் லேசான அரிப்பு போலவே தோன்றிடும். இதனை தவிர்க்க குளிர்ந்த நீரை விட சூடான நீரில் குளித்தால் கிருமிகள் அழிந்திடும் இதனால் சருமப்பிரச்சனைகள் வராது.

தொண்டைப் பிரச்சனை :

தொண்டைப் பிரச்சனை :

சளித்தொல்லை, தொண்டைப் பிரச்சன, மூக்கடைப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அதிக வியர்வை வரும்படியான வேலை செய்து குளிர்ந்த நீரில் குளித்தால் இந்தப் பிரச்சனையின் தீவிரம் இன்னமும் அதிகமாகும். அதனை தவிர்க்க நீங்கள் சூடான நீரில் குளிக்க வேண்டும்.

இது உங்கள் உடலை ரிலாக்ஸ் செய்வதால் சீரான மூச்சு விட முடியும்.

அழகு :

அழகு :

ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதில் ஏகப்பட்ட மெனக்கெடல்களை எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு எல்லாம் மிக எளிமையான விஷயம் இது தான். சூடான தண்ணீரில் குளிப்பதால் சருமத்துளைகள் விரிவடைந்து அழுக்குகள் எல்லாம் வெளியேறும். இவை குளிர்ந்த நீரில் குளிப்பதனால் ஏற்படாது.

இதனால் சருமம் பொலிவுடன் தெரியும்.

தூக்கமின்மை :

தூக்கமின்மை :

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கக்கூடியவற்றில் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று துக்கமின்மை. இரவில் தூக்கம் வராததற்கு எந்த காரணமும் பெரும்பாலும் இருப்பதில்லை மனம் அமைதியில்லாமல் எதையாவது யோசித்துக் கொண்டேயிருப்பதால் தான் அமைதியாக தூங்க முடிவதில்லை. இதனைத் தவிர்க்கவும் சுடான நீரில் குளிப்பது என்பது உங்களுக்கு துணை நிற்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits of Taking Hot bath After Exercise

Benefits of Taking Hot bath After Exercise
Story first published: Thursday, April 12, 2018, 17:30 [IST]