Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உணவிற்கு பின் காபி குடிக்கலாமா?
உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் காபி குடித்து கொண்டுதான் இருக்கின்றனர். பலருக்கு காபி என்பது அவர்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இச்ச்சூழ்நிலையில் சாப்பிட்டவுடன் காபி குடிக்
காபி உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சிலர் காபி குடிப்பது உடலுக்கு தீங்கானது, அதிலுள்ள காஃபைன் அடிமைப்படுத்தக்கூடியது போன்று கூறுகிறார்கள். சிலர் காபி குடிப்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கூறுகின்றனர்.

எதுவாக இருப்பினும் இன்று உலக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் காபி குடித்து கொண்டுதான் இருக்கின்றனர். பலருக்கு காபி என்பது அவர்கள் வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இச்ச்சூழ்நிலையில் சாப்பிட்டவுடன் காபி குடிக்கலாமா? கூடாதா? என்பது காபி பிரியர்களுக்கே உள்ள நீண்ட நாள் சந்தேகமாகும். அந்த சந்தேகத்திற்கான பதில்தான் இந்த பதிவு.

காபி குடிக்கலாமா?
இந்த கேள்விக்கு சமீபத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் இருந்து மருத்துவர்கள் குடிக்கலாம் என்று பதில் அளித்துள்ளனர். காபி குடிப்பவர்களிடமும் காபி குடிக்காதவர்களிடமும் நடத்திய ஆய்வில் காபி குடிப்பவர்கள், குடிக்காதவர்களை விட பல நிலைகளில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதுவும் சரியான அளவில்தான் இருக்கவேண்டும். நன்மை இருக்கிறது என அளவுக்கதிகமாக குடித்தால் இறுதியில் தீமைதான் மிஞ்சும். காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை கீழே பார்க்கலாம்.

மனஅழுத்தம்
எந்த நேரமாக இருந்தாலும் காபி குடிப்பது உங்கள் மூளையில் உடனடி புத்துணர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். இதனால் உங்கள் மனஅழுத்தம் நொடியில் காணாமல் போகக்கூடும். சமீபத்தில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் காபி குடிக்காதவர்களை விட காபி குடிப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் குறைவாக உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதேசமயம் ஒருநாளைக்கு 4 கப் காபிக்கு மேல் குடிக்கவும் கூடாது.

எடை குறைப்பு
சாப்பிட்டவுடன் காபி குடிப்பது உங்களை புத்துணர்ச்சியாக மட்டும் உணரச்செய்வதில்லை உங்களுக்கு எடை குறைப்பிலும் உதவி ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. சாப்பிட்டவுடன் காபி குடிக்கும் போது அதிலுள்ள காஃபைன் உணவுகள் அனைத்தும் வயிற்றுக்குள் குவிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது. சாப்பிட்ட பிறகு காபி குடிப்பது உங்கள் உடலில் சேரும் கொழுப்புக்களை எரித்து சீரான எடையை பராமரிக்க உதவுகிறது.

ஆண்மையை அதிகரிக்கும்
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் சக்தி காஃபைன்-ல் உள்ளதாக மருத்துவ முடிவுகள் தெரிவிக்கிறது. அதும் மட்டுமின்றி உயிரணுக்கள் கருப்பையை நோக்கி செல்வதையும் இது அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்களுடைய கருவுறுதல் திறன் அதிகரிக்கும். இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் காபி குடிப்பவர்களுக்கு கருவுறும் திறன் 175 அதிகமாக இருப்பதக முடிவுகள் தெரிவிக்கிறது.

செரிமானம்
காபியை பெரும்பாலும் சூடாக குடிப்பதையே நாம் விரும்புகிறோம். மருத்துவரீதியாக சூடான பானம் குடிப்பது செரிமானத்தை அதிகரித்து மலச்சிக்கலை குறைக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே சாப்பிட்டவுடன் காபி குடிப்பது உணவின் செரிமானத்தை ஊக்குவிக்கும்.

தோல் புற்றுநோய்
சூரிய ஒளியிலிருந்து ஒளிந்திருப்பதும் சன் லோஷன்கள் பயன்படுத்துவதுமே தோல் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாக்க நாம் எடுத்துக்கொள்ளும் தற்காப்புகள் ஆகும். ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தினமும் மூன்று கப் காபி குடிக்கும் பெண்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 20 சதவீதம் குறைவாக உள்ளது, அதேபோல் ஆண்களுக்கு 9 சதவீதம் குறைவாக உள்ளது. அதற்காக புற்றுநோய் இறுதி நிலையில் இருபவர்களுக்கெல்லாம் இது உதவாது, இது ஒரு தற்காப்பு முறை அவ்வளவுதான்.

அடிமைத்தனம் இல்லை
பலரும் கூறும் ஒரு கருத்து காபி குடிப்பதும் ஒரு போதை பழக்கம் போலத்தான். அதனை நிறுத்த முடியாது என்பது. ஆனால் இதும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இதனை பற்றி உலக சுகாதார நிறுவனம் கூறுகையில் காபியை போதை பொருட்களுடன் ஒப்பிடுவது சரியானது அல்ல. காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த பழக்கத்தை விட்டுவிடலாம். இதற்கு உளவியல் மருத்துவர்களின் உதவியெல்லாம் தேவையில்லை. அளவுக்கதிகாகமாக காபி குடிப்பவர்களுக்கு வேண்டுமென்றால் சோர்வு, நரம்பியல் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் குறிப்பட்ட அளவிற்குள் மட்டும் காபி குடிப்பவர்கள் அதை நினைத்து பயம் கொள்ள தேவையில்லை.

வயிற்று வலியை உண்டாக்காது
ஒருவேளை உங்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டு அதற்கு காரணம் நீங்கள் குடித்த காபிதான் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. உங்கள் மருத்துவரை அணுகி உண்மையான காரணம் என்னவென்பதை கண்டுபிடியுங்கள். ஏனெனில் காஃபைன் வயிற்றுவலியை உண்டாக்கக்கூடும் என்பதற்கு இதுவரை எந்த நிரூபணமும் இல்லை. குறிப்பாக அல்சர் உள்ளவர்கள் இதனை குடிப்பதால்தான் வயிறுவலி ஏற்படுகிறது என்பது ஆதாரமற்றது. சிலசமயம் இது அமிலங்களை உற்பத்தி செய்வதால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

எவ்வளவு குடிக்க வேண்டும்?
காபி உங்கள் புத்துணர்ச்சி நரம்புகளை விழித்திருக்க செய்யும். இது உங்கள் பசியை தற்காலிகமாக போக்கும் அதுமட்டுமில்லாமல் உங்கள் உடலில் அதிகமுள்ள கலோரிகளை எரிக்கவும் உதவும். ஆனால் அதிகளவு காபி மனஅழுத்தத்தை அதிகரிப்பதுடன் தூக்கமின்மையையும் ஏற்படுத்தும். நீங்கள் தினமும் 400மிகி அளவிற்கு அதிகமாக காஃபைன் எடுத்துக்கொள்ள கூடாது. இந்த அளவின்படி ஒரு நாளைக்கு 4 கப் காபிக்கு மேல் குடிக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications