For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மஞ்சளும் கருப்பு மிளகும்...! இவற்றின் வேதி வினை அறிக

மஞ்சளின் மருத்துவ தன்மையை பற்றி அறியாதவர் யாரும் இல்லை. அதே போன்று மிளகின் அற்புத குணங்களை பற்றி பலரும் அறிவர். ஆனால் மஞ்சளும் கருப்பு மிளகும் சேர்ந்தால் என்னவாகும்..!

By Haripriya
|

நம்ம வீட்டில் இருக்கும் பலவித பொருட்களும் எண்ணற்ற மருத்துவ தன்மைகளை கொண்டது. குறிப்பாக அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து வகையான உணவு பொருட்களும் உடல் நலத்தை சரியாக வைக்க உதவும் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றே. மற்ற நாட்டு உணவு பொருட்களை காட்டிலும் நம் இந்திய உணவு ஒவ்வொன்றிலும் பலவித மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. அவற்றில் சில நாம் நன்கு அறிந்ததே. இருப்பினும் நாம் அறிந்திடாத பல குறிப்புகள் நம் வீட்டு சமையல் அறையில் உள்ளது.

Benefits Of Consuming The Combination Of Turmeric and Black Pepper

அந்த வகையில் மஞ்சளின் மருத்துவ தன்மையை பற்றி அறியாதவர் யாரும் இல்லை. அதே போன்று மிளகின் அற்புத குணங்களை பற்றி பலரும் அறிவர். ஆனால் மஞ்சளும் கருப்பு மிளகும் சேர்ந்தால் என்னவாகும் என்பது ஒரு கேள்வி குறியாகத்தான் இருக்கும். இதற்கு விடை தருவதே இந்த பதிவு. மஞ்சளும் கருப்பு மிளகும் சேர்ந்து உங்கள் உடலுக்கு எத்தகைய வேதி வினைகள் புரிந்து, என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்க பாலும் கருப்பு தங்கமும்..!

தங்க பாலும் கருப்பு தங்கமும்..!

தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்குதேன்னு நினைக்குறீங்களா..? உண்மைதாங்க... பாலில் மஞ்சளை கலந்து சாப்பிட்டால் பலவித நன்மைகளை ஏற்படுத்தும் என்றே மருத்துவர்களும் கூறுகின்றனர். இந்த இரண்டின் கலவையையே "தங்க பால் " என்று அழைக்கிறார்கள். பொதுவாகவே மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. எத்தகைய வகையான உடல் சார்ந்த நோய்களையும் இது சரி செய்ய வல்லது. அதே போன்று "கருப்பு தங்கம்" என்று சமையல் அறையில் ஒளிந்திருக்கும் இந்த மிளகும் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தர கூடியது.

இரண்டின் வேதி வினை..!

இரண்டின் வேதி வினை..!

மஞ்சளில் குர்குமின் (curcumin) என்ற மூல பொருள் உள்ளது. இதுதான் மஞ்சளின் மருத்துவ தன்மைக்கு முதல் காரணம். இந்த மூல பொருள், நோய்கள் உடலில் வராமல் தடுக்கிறது. அத்துடன் இதய நோய்கள், முடக்கு வாதம், புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது. அதே போன்று மிளகில் உள்ள பைப்பரின் (piperine) என்ற மூல பொருள் மிளகின் மருத்துவ குணத்தை குறிக்கிறது. ஆனால் இவை இரண்டின் வேதி வினை பல வகையான நன்மைகளை உடலுக்கு ஏற்படுத்துமாம்.

புற்றுநோய் செல்களை அழிக்க..!

புற்றுநோய் செல்களை அழிக்க..!

பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள், 20 mg பைப்பரின் (piperine) மற்றும் 2 g குர்குமின் (curcumin) ஆகியவை எத்தகைய பலனை உடலுக்கு தருகிறது என்பதை அறிந்தனர். அவற்றின் முடிவு ஏராளமான நன்மைகளை தரவல்லது. அதாவது, மிளகையும் மஞ்சளையும் சேர்த்து உண்டால் அது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக மாறுமாம். மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், ரத்த புற்றுநோய் ஆகியவற்றில் இருந்தும் இவை காக்கும்.

உடல் பருமனை குணப்படுத்த...

உடல் பருமனை குணப்படுத்த...

நீங்கள் குண்டாக இருப்பதால் மிகவும் மனம் வருந்துகிறீர்களா..? இதை சரி செய்ய நம்ம வீட்டு சமையல் அறையின், ராஜா ராணியான மஞ்சள் மற்றும் மிளகே போதும். வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை தூளாக்கி கலக்கவும். அத்துடன் சிறிது இஞ்சியை நசுக்கி போட்டு தினமும் காலையில் குடித்து வந்தால் உடலின் எடையை சீராக வைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்குமாம்.

ஜீரண கோளாறுகளுக்கு...

ஜீரண கோளாறுகளுக்கு...

இந்த மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. இவற்றின் கலவை ஜீரணத்தை சீராக்குகிறது. குடல் அல்லது வயிற்று பகுதியில் ஏதேனும் வீக்கம் அல்லது புண் ஏற்பட்டால் அவற்றை மிக விரைவிலேயே குணப்படுத்துக்கிறது.

வாதங்களை குணப்படுத்த...

வாதங்களை குணப்படுத்த...

நம்ம நாட்டின் இயற்கை மருத்துவமான ஆயர்வேதத்தில் கூட இவற்றின் கலவைதான் முதன்மையானதாக கருதப்படுகிறது. பல ஆயிரம் வருடங்களாக இவற்றைத்தான் ஆயுர்வேத மருத்துவத்தில் முன்னோர்கள் பயன்படுத்தினர். முடக்கு வாதம், கீழ் வாதம், மூட்டு பிரச்சினை இவற்றிற்கு மஞ்சளும் மிளகும் சிறந்த மருந்தாகும்.

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு...

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு...

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இனி அறிவோம். இந்த பாலை நீங்களும் வீட்டில் தயார் செய்து குடியுங்கள்.

தேவையானவை :-

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/4 டீஸ்பூன் கருப்பு மிளகு தூள்

1/2 டீஸ்பூன் துருகிய இஞ்சி

1 கப் பால்

1 டேபிள்ஸ்பூன் தேன்

செய்முறை...

செய்முறை...

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொண்டு, அதில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் வைத்து விட்டு, பின் அதனுடன் தேனை தவிர மற்ற பொருட்களை சேர்த்து கொள்ளவும். அடுத்து அவற்றை வடிகட்டி கொண்டு சிறிது நேரம் ஆறவிட்டு கடைசியாக தேன் சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு செய்தால் உடல் மிகவும் வலிமை பெரும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல விதமான நோய்களில் இருந்து காக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Consuming The Combination Of Turmeric and Black Pepper

The ‘golden milk’ of the modern era has long been touted for its antiseptic and medical properties for centuries past, which has seen it being used as a traditional remedial herb. It is prepared by turmeric & black pepper.
Desktop Bottom Promotion