For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காற்று மாசுவை சித்தர்களின் ஆயுர்வேத முறைப்படி கையாளுவது எப்படி...?

|

பெருகி வரும் மக்கள் தொகையை பார்த்தால் வருங்கால சந்ததியினர் மிகவும் மோசமான நிலையில் இருக்க போகிறார்கள் என்றே தோன்றுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பதால் பல வகையான பாதிப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த பிரச்சினைகளில் முதல் இடத்தில் இருப்பது காற்று மாசுதான்.

டிராபிக்கில் ஏற்படும் காற்று மாசுவை சித்தர்களின் ஆயுர்வேத முறைப்படி கையாளுவது எப்படி..?

சுவாசிக்கும் காற்றே நச்சு தன்மையாக இருந்தால் பூமியில் எந்த உயிர்களும் வாழ இயலாது. இந்த பிரச்சினையில் விடுபட, சித்தர்களின் பல வித ஆயுர்வேத முறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொண்டு, பயன் பெறுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திக்குமுக்காடும் நகரங்கள்..!

திக்குமுக்காடும் நகரங்கள்..!

நம் எல்லோருக்கும் காற்று மசுவால் டெல்லி மாநகரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது நன்றாகவே தெரியும். இதே போன்று சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பல பெருநகரங்கள் காற்று மாசுவால் திண்டாடி கொண்டிருக்கிறது. இது நம் எல்லோர்க்கும் இயற்கை விட்டுள்ள ஒரு எச்சரிக்கை மணியாகவே நாம் எடுத்து கொள்ள வேண்டும்.

பாதிப்புகள் என்னென்ன..?

பாதிப்புகள் என்னென்ன..?

காற்று மாசுவால் முதலில் பாதிக்கப்படுவது நமது சுவாச மண்டலம் தான். இது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற உறுப்புகளையும் அரித்து கொண்டே வந்து விடும். அத்துடன் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் உயிர் வாழ முடியாமல் இறப்பை நோக்கிய பயணம் தொடரும்.

நெய்

நெய்

ட்ராபிக்கில் சிக்கி நீங்கள் முழுவதுமாக மாசுபட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கான தீர்வு இதுதான். தினமும் காலையில் எழுந்தவுடனும், இரவில் தூங்குவதற்கு முன்பும், வீட்டில் தயாரிக்கப்பட்ட நெய்யை 2 சொட்டு முக்கில் விடவும். இவ்வாறு செய்வதால் சுவாச மண்டலத்தில் அடைந்துள்ள அசுத்தங்கள் நீங்கி விடும். எனவே, உங்களின் சுவாசத்திற்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.

திரிபலா

திரிபலா

மூன்று முக்கிய பொருட்களின் சங்கமமே இந்த திரிபலா. சித்தர்கள் இந்த மூலிகையின் மகத்துவத்தை பல ஓலை சுவடிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். தினமும் 1 ஸ்பூன் திரிபலா பொடியுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்துள்ள அசுத்தங்கள் வெளியேறி விடும்.

MOST READ: நெஞ்செரிச்சலை உடனே போக்க கூடிய 10 அற்புத ஆயுர்வேத மூலிகைகள்..!

வேப்பில்லை

வேப்பில்லை

சிறந்த கிருமி நாசினி என்ற மகத்துவம் வேப்பிலைக்கு உள்ளது. நீங்கள் குளிக்கும் நீரில் 10 வேப்பிலை இலைகளை போட்டு கொதிக்க விட்டு பிறகு அந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தலாம். இது உங்கள் சருமத்திலும் தோலிலும் ஒட்டி இருக்கும் கிருமிகளை அகற்றி விடும். மேலும், வாரத்திற்கு 2 முறை 3 வேப்பிலையை சாப்பிட்டும் வரலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட ஆயுர்வேத மூலிகை இந்த மஞ்சள். பெரும்பாலும் பல வகையான மருத்துவ பயன்பாட்டிற்கு இதனை உபயோகித்து வருகின்றனர். இதனுடன் வேறு சில பொருட்களை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் காற்று மாசுவால் எந்த அபாயமும் உங்களுக்கு ஏற்படாது.

என்ன செய்யலாம்..?

என்ன செய்யலாம்..?

மஞ்சள் 1/2 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

நெய் 1 ஸ்பூன்

செய்முறை :-

மஞ்சளுடன் தேன் அல்லது நெய் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காற்று மாசுவால் உங்களின் உடலுக்கு எந்த வித பிரச்சினையும் ஏற்படாதாம். மேலும் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கும்.

துளசி

துளசி

பல வீடுகளின் முற்றத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த துளசியின் மகிமை எண்ணில் அடங்காதவை. டிராபிக்கில் ஏற்பட்ட காற்று மாசுவால் உங்கள் உடலில் பாதிப்புகள் வராமல் இருக்க துளசி போதும். 10-15 ml துளசி சாற்றை தினமும் குடித்து வந்தால் காற்று மாசுவால் பாதிப்புகள் உங்களுக்கு வராது. அல்லது 10 துளசி இலைகளையும் காலை நேரத்தில் சாப்பிட்டு வரலாம்.

MOST READ: வெறும் 10 நாட்களில் உங்களின் தொப்பையை குறைக்க, சீரக-இஞ்சி நீர் குடித்தாலே போதும்..!

பிப்பளி

பிப்பளி

அற்புத மூலிகையாக இந்த பிப்பளியை சித்தர்கள் கருதுகின்றனர். காற்று மாசுவால் நுரையீரல் பாதிக்கப்படமால் இந்த பிப்பளி பாதுகாத்து கொள்கிறது. இவற்றுடன் வேறு சில மூலிகையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் இதன் பயன் பலமடங்காகும்.

தேவையானவை :-

இஞ்சி சாறு 1/4 ஸ்பூன்

மஞ்சள் 1/4 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

பிப்பளி 1/8 ஸ்பூன்

செய்முறை :-

செய்முறை :-

மேற்சொன்ன மூலிகைகள் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இதனை சாப்பிட்டு வந்தால் காற்று மாசுவால் ஏற்படுகின்ற தொற்றுகள் அனைத்தையும் நீக்கி விடும். குழந்தைகளுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.

மேற்சொன்ன மூலிகைகளை வைத்து உங்களை காற்று மாசுவில் இருந்து காத்து கொள்ளுங்கள். மேலும், இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Remedies to survive In Nasty Pollution

Ayurvedic Remedies to survive In Nasty Pollution
Desktop Bottom Promotion