குழந்தை பருவத்திலேயே புற்றுநோய் அபாயத்தை எப்படி தடுப்பது?

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

எல்லார் வாழ்க்கையிலும் மறக்க முடியாத சந்தோஷமான தருணங்கள் என்றால் அது நமது குழந்தை பருவம் தான். அந்த குழந்தை பருவ நினைவுகளை இப்பொழுது நாம் நினைத்தாலும் நம் மனம் துள்ளிக் குதிக்கும். வாழ்க்கையை சந்தோஷமாக விளையாட்டோடு வாழ்ந்த பருவம் அது. இப்படி சந்தோஷமாக எல்லா குழந்தைகள் இருந்தாலும் நிறைய குழந்தைகள் புற்றுநோய் என்னும் கொடிய நோய்களை சந்திக்கின்றனர்.

9 Ways On How To Prevent Childhood Cancer

இப்படிப்பட்ட குழந்தைகளின் நிலைமை மிகவும் கடினம். மற்ற குழந்தைகள் போல இவர்களால் நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அடிக்கடி சிகிச்சைக்காக ஹாஸ்பிடல் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த சிறு வயதிலேயே வலியையும் வேதனையையும் தாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

எனவே பெற்றோர்களாகிய நாம் இந்த மாதிரியான கொடிய நோய்கள் நம் குழந்தைகளை அண்ட விடாமல் காக்க வேண்டும். இந்த குழந்தை பருவ புற்றுநோயிலிருந்து குழந்தைகளை எப்படி காப்பது என்பதற்கான சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் குழந்தைக்கு உதாரணமாக விளங்குங்கள்

உங்கள் குழந்தைக்கு உதாரணமாக விளங்குங்கள்

உடல் நலத்தை பேணுவதிலும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதிலும் முதலில் உங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் எடுத்துக்காட்டாக அமைய வேண்டும். உங்களை பார்த்து தான் அவர்கள் எதையும் கற்று கொள்வார்கள். எனவே ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை போன்றவற்றை அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளுங்கள். உங்களை பார்த்து உங்கள் குழந்தைகளும் இதை பின்பற்றும் போது இந்த மாதிரியான புற்றுநோயிலிருந்து விடுபடலாம். உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

புகைப்பழக்கத்தை தவிருங்கள்

புகைப்பழக்கத்தை தவிருங்கள்

புகைப்பிடிக்கும் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது. இதனால் தான் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. புகைப் பிடிப்பவரை மட்டும் பாதிப்பதில்லை. புகைப்பிடிக்கும் போது அருகில் உள்ள உங்கள் குழந்தைகளும் மற்றவர்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. உங்களை பார்த்து உங்கள் குழந்தைகளும் இந்த தீய பழக்கத்தை கற்றுக் கொள்கிறது. எந்த தவறும் செய்யாமல் எளிதாக உங்கள் குழந்தை புற்றுநோய் தாக்கத்திற்கு பலியாகுகிறது. எனவே தயவு செய்து இந்த தீய பழக்கங்களை கைவிடுதல் நல்லது. இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்திற்கும் நன்மை அளிக்கும்.

நீண்ட மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுங்கள்

நீண்ட மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுங்கள்

இப்பொழுதுள்ள தாய்மார்கள் ஒரு சில மாதங்களே தாய்ப்பாலை நிறுத்தி விடுகின்றன. ஆனால் ஆராய்ச்சி படி பார்த்தால் 2-3 வயது வரை தாய்ப்பால் குடித்த குழந்தைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறுகின்றனர். இந்த தாய்ப்பால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொடிய நோய்களிலிருந்து குழந்தைகளை காக்கிறது. எனவே நீண்ட மாதங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது உங்கள் குழந்தைகளை புற்றுநோயிலிருந்து காக்கலாம்.

தினசரி உணவுப் பழக்கத்தை கவனியுங்கள்

தினசரி உணவுப் பழக்கத்தை கவனியுங்கள்

எல்லா குழந்தைகளும் சாப்பாட்டை கண்டாலே ஓட்டம் தான் பிடிப்பார்கள். அதிலும் ஆரோக்கியமான உணவுகளின் சுவையும் அவர்களுக்கு பிடிக்காது. அதன் முக்கியத்துவமும் அவர்களுக்கு புரிவதில்லை. பெற்றோர்களாகிய நாம் தான் அவர்களின் தினசரி உணவுப் பழக்கத்தை கவனிக்க வேண்டும். பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் பால் போன்றவை அவர்களின் உடம்பை வலிமையாக்குவதோடு புற்றுநோய் வருவதை எதிர்த்து போரிடுகிறது.

சுற்றுப்புற மாசுக்களை தவிருங்கள்

சுற்றுப்புற மாசுக்களை தவிருங்கள்

சுற்றுச்சூழல் மாசுக்களும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் வர காரணமாக அமைகிறது. எனவே சுற்றுப்புற மாசுக்களிலிருந்து உங்கள் குழந்தைகளை கவனமாக காத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை மாசுக்கள் குறைந்த சூழல் அடங்கிய பசுமையான பகுதியில் வாழ முற்படுங்கள். இல்லையென்றாலும் மாஸ்க் அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள்.

ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை எடுங்கள்

ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகளை எடுங்கள்

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமது உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. உடல் எடை குறைத்தல், மெட்ட பாலிசத்தை அதிகரித்தல் மற்றும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்திற்கு எதிராக செயல்படுதல் போன்றவற்றை செய்கிறது. உணவில் அவகேடா, தேங்காய் எண்ணெய், நெய், மீன் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்து குழந்தைகளை தள்ளி வையுங்கள்

எலக்ட்ரானிக் பொருட்களிலிருந்து குழந்தைகளை தள்ளி வையுங்கள்

பெரியவர்களாகிய நாம் பயன்படுத்தும் மொபைல், மடிக்கணினி போன்றவற்றால் நமக்கே தீங்கு ஏற்படுகிறது. இவைகள் இன்றைய சூழ்நிலையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் இதை ஒரு பொழுது போக்குக்காக பயன்படுத்துகின்றனர். இந்த மொபைல், மடிக்கணினி, டேப் போன்றவையும் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதை கொஞ்சம் குழந்தைகளிடமிருந்து தள்ளி வைப்பது நல்லது. அதிக நேரம் பயன்படுத்துவதை நீங்களும் குழந்தைகளுமே செய்யாதீர்கள்.

ஆன்டி பயாடிக் கொடுப்பதை தவிருங்கள்

ஆன்டி பயாடிக் கொடுப்பதை தவிருங்கள்

நிறைய குழந்தைகள் அடிக்கடி வைரல் தொற்று மற்றும் பூஞ்சை தொற்று போன்றவற்றால் பாதிக்கப்படுவர். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி இப்பொழுது தான் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கும். எனவே இந்த மாதிரியான தொற்றுகளை சரி செய்ய ஆன்டி-பயாடிக்களை அடிக்கடி எடுப்பதை தவிருங்கள். ஆன்டி பயாடிக் மருந்துகள் உங்கள் நோய் எதிர்ப்பு செல்களை அழித்து எளிதாக புற்றுநோய் செல்கள் உள்ளே வர காரணமாக அமைந்துவிடும். எனவே ஆன்டி-பயாடிக்களை அடிக்கடி கொடுப்பதை தவிருங்கள்.

உங்கள் குழந்தைக்கு தினசரி உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிங்கள்

உங்கள் குழந்தைக்கு தினசரி உடற்பயிற்சி பழக்கத்தை ஊக்குவிங்கள்

தினசரி உடற்பயிற்சி பழக்கம் உங்கள் குழந்தைகளை புற்றுநோயிலிருந்து தள்ளி வைக்கும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு மற்றும் சின்ன சின்ன உடற்பயிற்சி போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இதனால் புற்றுநோய் தாக்கத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்றலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Ways On How To Prevent Childhood Cancer

The period of childhood can be plagued by certain dangerous diseases like cancer. Here are a few useful ways on how to prevent childhood cancer.
Story first published: Friday, February 16, 2018, 8:30 [IST]