For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரியின் 9 நாளில் 9 வித நிறத்தில் உணவை சாப்பிட்டால் நூற்றுக்கணக்கான நன்மைகள் பெறலாம்...!

வராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறங்களில் உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் அளவற்ற நன்மைகளும் மட்டற்ற மகிழ்ச்சியும் கிடைக்குமாம்.

|

பண்டிகை காலங்கள் என்றாலே நாமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என நம் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்து விடுவோம். வீட்டிற்கு உறவினர்கள் பலரும் வருவார்கள். இதுவே பண்டிகை நாளின் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இன்று முதல் "நவராத்திரி" என்கிற வண்ணமயமான ஒரு பண்டிகை நம் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை நாளில் 9 விதமான விஷயங்களே எல்லா நாட்களிலும் நாம் செய்து வருவோம்.

நவராத்திரியின் 9 நாளில் 9 வித நிறத்தில் உணவை சாப்பிட்டால் நூற்றுக்கணக்கான நன்மைகள் பெறலாமாம்..!

இதன் வரிசையில் உணவும் அடங்கும். நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறங்களில் உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் அளவற்ற நன்மைகளும் மட்டற்ற மகிழ்ச்சியும் கிடைக்குமாம். 9 வித நிறங்களை கொண்ட உணவுகள் என்னென்ன என்பதை இனி தெரிந்து கொண்டு இந்த நவராத்திரியை கொண்டாடுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவராத்திரியும் - 9 நாட்களும்..1

நவராத்திரியும் - 9 நாட்களும்..1

இந்தியர்களின் பண்டிகைகளில் ஒன்றாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக துர்க்கை அம்மனுக்காக 9 நாட்கள் விரதம் இருந்து கொண்டாட படுகின்ற சிறப்புமிக்க பண்டிகையாம். இந்த 9 நாட்களில் கொலு வைத்து, வித விதமான பண்டங்களை தயாரித்து அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.

9 நாளும்- 9 நிறங்களும்..!

9 நாளும்- 9 நிறங்களும்..!

நவராத்திரியை 9 நாட்கள் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது. இந்த 9 நிறங்களும் துர்க்கை அம்மனுக்கு பிடித்தமான நிறங்களாக கருதப்படுகிறது. இன்று தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த 9 நிற உணவுகளை சாப்பிட்டு வந்தால் துர்க்கையின் அருள் பெறலாமாம்.

நிறங்கள் 9 இதுவே...!

நிறங்கள் 9 இதுவே...!

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிறம் உண்டு. அந்த வகையில்...

10.10.2018 - அடர் நீல நிறம்

11.10.2018 - மஞ்சள் நிறம்

12.10.2018 - பச்சை நிறம்

13.10.2018 - சாம்பல் நிறம்

14.10.2018 - ஆரஞ்ச் நிறம்

15.10.2018 - வெள்ளை நிறம்

16.10.2018 - சிவப்பு நிறம்

17.10.2018 - வான நீலம்

18.10.2018 - பிங்க் நிறம்

முதல் நாள்...

முதல் நாள்...

நவராத்திரியின் முதல் நாள் அடர் நீல நிறத்தில் உணவை தயாரித்து சாப்பிட வேண்டும். நவராத்திரியின் முதல் நாள் அத்தி பழங்களை நாம் சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக நன்மையை தரும். அத்துடன் துர்க்கை அம்மனையும் இதே நிறத்தில் தான் அலங்காரம் செய்வார்களாம்.

MOST READ: உங்கள் படுக்கை அறையில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமாம்..! அதிர்ச்சி தகவல்..!

இரண்டாம் நாள்...

இரண்டாம் நாள்...

இந்த இரண்டாம் நாளின் மகத்துவம் பெற்ற நிறம் மஞ்சள். இந்த நாளில் மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய பழங்களையோ அல்லது உணவுப்பொருளையோ சாப்பிடலாம். குறிப்பாக பாதாம் பால், பாதாம் அல்வா போன்றவற்றை தயாரித்து சாப்பிடலாம் என கூறப்படுகிறது.

மூன்றாம் நாள்...

மூன்றாம் நாள்...

நவராத்திரியின் நான்காம் நாளுக்கான நிறம் பச்சை. இந்த நன்னாளில் பச்சை வாழைப்பழம், அல்லது பச்சை நிற ஆப்பிளை உண்ணலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலிமை தருவதோடு, அம்மனின் அருளையும் பெற்று தருமாம்.

நான்காம் நாள்...

நான்காம் நாள்...

சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தை கொண்ட உணவை இந்த அருள்மிக்க நாளில் உண்ண வேண்டும். குறிப்பாக ஏதேனும் காய்கறிகளை கொண்ட உணவை சாப்பிடுவது உகந்தது. அல்லது, பூரி சப்பாத்தி போன்றவற்றை செய்தும் சாப்பிடலாம்.

ஐந்தாம் நாள்...

ஐந்தாம் நாள்...

நவராத்திரியின் மையத்திற்கு நாம் வந்து விட்டோம். இந்த ஐந்தாம் நாளில் ஆரஞ்ச் நிறத்தில் எத்தனை சாப்பிட்டாலும் அது நன்மை பயக்கும். குறிப்பாக ஆரஞ்ச் நிற லட்டுக்கள், பழங்கள் ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து விட்டு சாப்பிடலாம்.

MOST READ: குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்!

 ஆறாம் நாள்...

ஆறாம் நாள்...

வெண்மையான நாளாக இந்த ஆறாம் நாள் கருதப்படுகிறது. இந்த நாளில் பால் பாசம், அல்லது பால் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது அம்மனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம். மேலும், இந்த வெண்ணிற உணவுகள் அதிக நலனையும் சத்தையும் நமது உடலுக்கு தரும்.

 ஏழாம் நாள்...

ஏழாம் நாள்...

துர்க்கை அம்மன் ஆகோரஷமான நிறத்தில் இந்த நாளில் கட்சி தருவார். எனவே, சிவப்பு நிறத்தில் உணவை சமைத்தோ அல்லது சிவப்பு நிற காய்கனிகளை உண்டாலோ நலம் பெறலாம். குறிப்பாக பீட்ரூட், கேரட் ஆகியவற்றை சேர்த்த ஜுஸ் செய்து சாப்பிடலாம்.

எட்டாம் நாள்...

எட்டாம் நாள்...

கிட்டத்தட்ட நவராத்திரி முடியும் தருவாயில் உள்ளது. இந்த எட்டாம் நாளில் நீல நிற பழங்கள் சாப்பிடுவது மிக சிறப்பானதாம். ப்ளூபெரி, திராட்சை போன்றவற்றை சாப்பிட்டுவது உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும்.

ஒன்பதாம் நாள்...

ஒன்பதாம் நாள்...

கடைசி நாளான இன்று அம்மனுக்கு பிங்க் நிறத்தில் அலங்காரமும், படையலும் இருக்க வேண்டும். எனவே, ரோஜா இதழ்களை துர்க்கைக்கு படைக்க செய்யலாம். மேலும் குலஃபீ அல்லது ஸ்ட்ராவ்பெரி போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். இந்த ஒன்பது நாளும் இனிமையாக கொண்டாடி துர்க்கையின் ஆசி பெறுங்கள் நண்பர்களே.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Navratri Colours And Foods For All Days Of Navratri 2020

Navratri will be celebrated from 17th October, 2020 to 25th October, 2020. It begins today and Indians are looking forward to celebrating the nine avatars of Hindu Goddess Durga.
Desktop Bottom Promotion