For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இதை சாப்பிட்டா அ முதல் ஃ வரை எல்லா நோயும் பறந்து போயிடும்...

  By A D Sugumar
  |

  மன அழுத்தம் ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சியுடனும், மன ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று நம்மில் பலருக்கும் ஆசை உண்டு. மன ஆரோக்கியத்துடனும், அழுத்தங்களில் இருந்து விடுபடவும், நமது உடலை உளவியல் ரீதியாக சுத்தப்படுத்த வேண்டியது அவசியம்.

  அதாவது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். தற்போதைய நவீன காலத்தில் நமது வாழ்க்கை முறை பரபரப்பு மிக்கதாக மாறிவிட்டது. சுகாதாரமான உணவை சாப்பிடவும், மாசு இல்லாத வாழ்க்கை வாழவும் இந்த பரபரப்பு அனுமதிப்பது கிடையாது. நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டில் அதிகளவில் நச்சு கலந்துள்ளது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சுற்றுச்சூழல்

  சுற்றுச்சூழல்

  சுற்றுசூழல் மாசு மற்றும் தூசி என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது தவிர அழகு சாதன பொருட்கள், வீடு சுத்தம் செய்யும் பொருட்கள் உள்ளிட்ட பல நச்சு கலந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை அனைத்தும் நமது உடலுக்குள் சென்று பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அஜீரணம் போன்ற சிறு நோய் முதல் உயிரை பறிக்கும் கொடிய புற்றுநோய் வரை உண்டாக்குகிறது.

  அதனால் நமது உடலை உட்புறமாக சுத்தம் செய்வது அவசியமாகிவிட்டது. வெளிப்புறத்தை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ? அதேபோல் உட்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ப நச்சுத் தன்மையை உடலில் இருந்து கழிவு மூலம் வெளியேற்ற கூடிய ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் சாப்பிட வேண்டும்.

  உடலில் இருந்து நச்சுத் தன்மையை வெளியேற்றும் உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்...

  திராட்சை பழம்

  திராட்சை பழம்

  இந்தியர்களின் காலை உணவில் திராட்சை பழம் அவ்வளவு பிரபலம் கிடையாது. பல நாடுகளில் திராட்சை பழம் காலை உணவில் அத்தியாவசியமாக சேர்க்கப்படுகிறது. இதை சாப்பிடுவதன் மூலம் உணவு செரிமானம், மெட்டபாலிசம் மற்றும் கல்லீரல் செயல்பாடு சுத்தமாகும். திராட்சையில் மிக அதிக அளவில் எதிர் ஆக்ஸிஜனேற்றி மற்றும் வைட்டமின் ‘சி' இருக்கிறது. தினமும் காலையில் திராட்சை சாப்பிடுவதால் மெல்லிய இடுப்பு கிடைப்பதோடு உடல் எடையும் குறையும். அதோடு உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.

  பசலைக்கீரை

  பசலைக்கீரை

  ‘மிஸ்டர் பாப்அய்' என்ற கார்ட்டூன் நிகழ்ச்சியில் உடனடி சக்தி கிடைக்க பசலைக்கீரை சாறு குடிக்கும் காட்சி இடம்பெறும். இது குழந்தைகளுக்கு நன்றாக தெரியும். பசலைக்கீரை ஒரு சிறந்த உணவு என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள். பசலைக்கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ரத்த சோகை குணமாக்குதல், வளர்சிதை, நோய் எதிர்ப்பு சக்தி, எலும்புகளுக்கு வலு சேர்த்தல் உள்பட பல ஆற்றல் இதற்கு உண்டு. அதோடு நச்சுத் தன்மையை உடலில் இருந்து வெளியேற்ற பெரும் உதவிபுரியும்.

  ஆரஞ்சு

  ஆரஞ்சு

  காலை உணவுடன் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழச்சாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ‘சி' பழச்சாறில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் இருந்து நோய் விலகியே நிற்கும். கிருமிகளை அழிப்பதோடு நச்சுக்களையும் வெளியேற்றும். இதனால் உடலின் உட்புறம் சுத்தமாகும். அதோடு சருமமும் நல்ல நிறமும் பொலிவும் பெறும்.

  பூண்டு

  பூண்டு

  பழங்காலத்தில் வீட்டில் பூண்டு வைத்திருந்தால் பேய், காட்டேரி அண்டாது என்ற நம்பிக்கை இருந்தது. நமது மூதாதையர்கள் வழியிலேயே கூற வேண்டும் என்றால் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களை நமது உடலில் அண்ட விடாமல் கழிவுகளை பூண்டு வெளியேற்றும். பூண்டில் உள்ள அசிலின் என்னும் மூலக்கூறு நச்சுக்களை வடிகட்டி வெளியேற்றும் சக்தி கொண்டது. குறிப்பாக செரிமானத்தில் இதன் செயல்பாடு அதிகமாக இருக்கும். இது நம்மை பாதுகாப்பாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்திருக்கும்.

  ப்ரோக்கோலி

  ப்ரோக்கோலி

  இது பச்சை அல்லது ஊதா நிறத்தில் இருக்கும். இதுவும் ஒருவகையான முட்டைகோஸ் வகையை சேர்ந்தது. பார்ப்பதற்கு காலிஃபிளவர் வடிவில் இருக்கும். இதை பெரியவர்களும், குழந்தைகளும் அதிகம் விரும்ப மாட்டார்கள். எனினும் இது உடல் நலத்துக்கு மிக ஆரோக்கியமானது. அதிக சத்துக்கள் நிறைந்தது என்று அறிந்தும் இதை விரும்பி சாப்பிடாத நிலை தான் உள்ளது. அதன் சுவை தான் இதற்கு காரணம். விலையும் கொஞ்சம் அதிகம் தான். ஆனால் தேவையில்லாத பாஸ்ட்ஃபுட் உணவுக்கு செலவளிக்கும் பணத்தை இதுபோன்ற ஆரோக்கியமான உணவுக்குக் கொடுப்பதில் தவறில்லை.எப்படியோ? உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற வேண்டும் என்றால் இது சரியான உணவாக இருக்கும். இது ஒரு மிகச்சிறந்த எதிர்ஆக்சிஜனேற்றியாகும்.

  கிரீன் டீ

  கிரீன் டீ

  தினமும் கிரீன் டீ ருசித்துக் குடிப்பதைப் பலரும் விரும்புவார்கள். இதை நீங்கள் செய்யவில்லை என்றால், உடனடியாக செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் பலதரப்பட்ட நன்மைகள் உடலுக்கு ஏற்படுகிறது. எதிர் ஆக்சிஜனேற்றிகள் இதில் அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்ற சதவீதத்தை அதிகரிக்கும். உடல் எடையை குறைக்கும் திறன் கொண்டது. உடல் நச்சு க்களை இயற்கை முறையில் வெளியேற்றி நச்சுத்தன்மையற்ற உடலாக மாற்றிவிடும்.

  சூரியகாந்தி விதைகள்

  சூரியகாந்தி விதைகள்

  சூரியகாந்தி விதைகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. வேதிப்பொருள்களின் விளைவுகளைப் புரிந்து கொண்டு,இயற்கை உணவு முறைக்கு முற்றிலும் மாறும் மக்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளது. இது உங்களது உடலை அதிக ஊட்டச்சத்து மிக்கதாக வைத்திருக்கும். உடலில் இருந்து நச்சு மற்றும் கழிவுகளைத் தீவிரமாக வெளியேற்றும்.

  வெண்ணெய்

  வெண்ணெய்

  தற்போது அனைத்து வகையான உணவுகளிலும் வெண்ணெய் சேர்ப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால்இதனால் உடலில்கொழுப்பு அதிகரித்து விடுமோ என்று பயப்படுகிறோம். உண்மைதான்.வெண்ணெயால் கொழுப்பு அதிகமாகும். ஆனால் அது உடலுக்கு மிக அத்தியாவசியமான நல்ல கொழுப்பு தான். அதனால் பயப்படத் தேவையில்லை. சாலட் முதல் சாண்ட்விச் வரை இது இடம்பெறுகிறது. இதில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை கொடுக்கும் சிறந்த உணவாக வெண்ணெய் உள்ளது. வெண்ணெயில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு ஃபேட்டி ஆசிட் பெருங்குடல் சுவற்றின் உராய்வுக்கு உகந்ததாக இருக்கும். இது உடலில் இருந்து நச்சுத் தன்மையை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

  மஞ்சள்

  மஞ்சள்

  இந்தியா போன்ற நாடுகளில் மஞ்சளுக்கு கலாச்சாரம், மதம் சார்ந்த பாரம்பரியம் உண்டு. இதில் உள்ள மருத்துவ குணாதிசயங்கள் தான் இதற்கு காரணம். உடல் ஆரோக்கியம் சார்ந்தது என்று பார்த்தால் இது நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி கொண்டதாக உள்ளது. நச்சுத்தன்மையை உடலில் இருந்து இயற்கையாக வெளியேற்றும். உணவில் மஞ்சள் சேர்த்து கொண்டால் கழிவு மற்றும் நச்சுக்களை தீவிரமாக உடலில் இருந்து வெளியேற்றும்.

  இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் எந்தவித நோய்த்தொற்றுக்களும் பரவாமல் நம்மைப் பாதுகாக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  9 Foods Which Can Detoxify Your Entire Body

  Did your liver enjoy the holiday weekend as much as you did? If you had to think, we’re here to offer your body some low-intensity detox rituals that promise to yield some majorly positive results. There’s no need to go to extremes to get your system back in fighting shape. We’re not knocking the juice cleanse trend. It works. It’s just that we’re still basking in the relaxing afterglow of chill holiday vibes. Enter our list of easy, naturally detoxifying foods.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more