For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா?... அப்போ உடனே இத பண்ணுங்க...

பற்களை சுத்தம் செய்யும் போதும், கடினமான பொருட்களை கடிக்கும்போதும் பற்களில் இரத்தம் வடிவது இயற்கயான ஒரு நிகழ்வாகும்.

|

நீங்கள் பல் ஈறுகளில் சில நேரம் ஒரு வித எரிச்சலை உணரலாம். இதற்கான காரணம் தெரியாமல் இருக்கும் போது இன்னும் கஷ்டமாக இருக்கும்.

health

ஈறுகளில் தொற்று ஏற்படுவதால், நமது தினசரி வாழ்வில் அனைவரும் கடந்து வரும் ஒரு அறிகுறி ஈறுகளில் இரத்தம் வடிதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈறுகளில் எரிச்சல்

ஈறுகளில் எரிச்சல்

பற்களின் உள்ளே ஏற்படும் கிருமி பாதிப்பு அல்லது வாய் வழி சுகாதாரத்தை பாதுகாக்காமல் விடுவது போன்றவை இதற்கான காரணங்கள் ஆகும். பற்களை சுத்தம் செய்யும் போதும், கடினமான பொருட்களை கடிக்கும்போதும் பற்களில் இரத்தம் வடிவது இயற்கயான ஒரு நிகழ்வாகும். ஈறுகளில் இரத்தம் வடிவத்தை தொடக்கத்திலேயே பார்ப்பதால், எளிய முறையில் சில குறிப்புகளைப் பயன்படுத்தி இதனைப் போக்க முடியும்.

குளிர்ந்த நீரால் வாயைக் கழுவவும்

குளிர்ந்த நீரால் வாயைக் கழுவவும்

பல் ஈறுகளில் எரிச்சல் ஏற்படும்போது, குளிர்ந்த நீரால் வாயைக் கழுவவும். ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் கிருமிகளை போக்க இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால் ஈறுகள் வீக்கம் அடைவதும் தடுக்கப்படுகிறது. வடிகட்டிய நீரை பயன்படுத்தவதாலும் இந்த எரிச்சல் கட்டுப்படும் . தண்ணீரில் உள்ள ஒவ்வாமை காரணமாகவும் இந்த எரிச்சல் ஏற்படலாம்.

சிறிதளவு ஐஸ் பயன்படுத்தவும்

சிறிதளவு ஐஸ் பயன்படுத்தவும்

ஈறுகளில் எரிச்சல் உள்ள இடத்தில் ஒரு சிறிய ஐஸ் கட்டியை வைக்கவும். ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சியால் ஈறுகளில் உள்ள அசௌகரியம் மற்றும் எரிச்சல் குறையும். ஐஸ் கட்டி முழுவதும் உங்கள் வாயில் கரையும் வரை வைக்கவும். இதனால் எரிச்சல் விரைவில் குணமடையும். ஐஸுக்கு மாற்றாக உறைய வைக்கப்பட்ட உணவுகளையும் பயன்படுத்தலாம்.

உப்பு நீரில் கொப்பளித்தல்

உப்பு நீரில் கொப்பளித்தல்

ஈறுகள் எரிச்சலைப் போக்க மற்றொரு சிறந்த வழி உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பது. 1 ஸ்பூன் உப்பை ஒரு டம்பளர் சூடான நீரில் கலந்து, அந்த நீரை முழுவதுமாக வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். இதனால் உங்கள் எரிச்சல் உடனடியாக தீர்க்கப்படுகிறது. இந்த நீரை கொப்பளித்து துப்பி விடுங்கள். இதனை விழுங்க வேண்டாம். மேலும் 10 நாட்களுக்கு மேல் இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டாம்.

ஹைட்ரஜன் பெராக்சைடு திரவம்

ஹைட்ரஜன் பெராக்சைடு திரவம்

இது ஈறு எரிச்சலைப் போக்கை ஒரு சிறந்த வழியாகும் உங்கள் வாய்ப் பகுதியை இந்த திரவம் கொண்டு சுத்தம் செய்யவும். உடனடியாக ஈறு எரிச்சலைப் போக்க இந்த திரவம் உதவுகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு திரவம் 3 % எடுத்து அதன் சரி சம அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து, இந்த திரவத்தைக் கொண்டு வாயைக் கழுவவும்.

பேக்கிங் சோடா பேஸ்ட்

பேக்கிங் சோடா பேஸ்ட்

பல் ஈறு பிரச்சனைகளுக்கு பேக்கிங் சோடா ஒரு சிறந்த தீர்வாகும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உங்கள் பல் ஈறுகளில் தடவவும். கிருமி தொற்றுகள் ஈறுகளில் இருந்தால் அவற்றை நீக்கி, எரிச்சலைப் போக்க இந்த பேஸ்ட் பெரிதும் உதவுகிறது.

கற்றாழையை தடவுங்கள்

கற்றாழையை தடவுங்கள்

வாய் தொடர்பான வலிகளைப் போக்க கற்றாழை பெரிதும் உதவுகிறது. வாய் சுகாதாரத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க இதனை பயன்படுத்தலாம். ஈறுகளின் எரிச்சலைப் போக்கி உடனடி நிவாரணம் பெற, கற்றாழை ஜெல்லை ஈறுகளில் தடவலாம். கற்றாழையின் உள்ளிருக்கும் ஜெல்லை, தண்ணீர் சேர்த்து பாதிப்பு உள்ள இடத்தில் தடவலாம். இதனால் உங்கள் எரிச்சல் உடனடியாக கட்டுப்படும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகள்

அமிலத்தன்மை மற்றும் காரம் அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கவும்.

ஈறுகளில் எரிச்சல் உண்டாக்கும் உணவுகள் அல்லது பானங்களைத் தவிர்க்கவும்/ பொரித்த அல்லது கசப்பான உணவுகளை மற்றும் புகையிலையை தவிர்க்கவும். இத்தகைய உணவுகள், ஈறுகளில் ஒவ்வாமை ஏற்படுத்த பெரிய காரணமாகும். ஈறுகளின் வீக்கத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயிர் அல்லது ஐஸ்க்ரீம் உட்கொள்வதால் உங்கள் ஈறுகளின் எரிச்சல் குறையலாம். புகையிலை சேர்க்கப்பட்ட பொருட்களில் இருந்து விலகி இருப்பது, எரிச்சல் மேலும் அதிகமாவதை தடுக்கும். தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு சாறு, காபி போன்றவை எரிச்சலை அதிகமாக்கும். ஈறுகளின் எரிச்சல் மேலும் அதிகமானால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Best Remedies For Itchy Gums

due to gums infection a problem that we can face in our daily life is bleeding gums.
Story first published: Thursday, May 17, 2018, 18:28 [IST]
Desktop Bottom Promotion